காலிமுகத்திடலில் பொலிஸாரின் அடாவடித்தனம் கவலையளிக்கிறது

நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை

0 268

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காலி முகத்­தி­டலில் கடந்த 9 ஆம் திகதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சர்­வ­மத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்­கொண்ட அடா­வ­டித்­த­னத்­திற்கு கவலை வெளி­யிட்­டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் இந்­நி­கழ்­வுக்கு பாதகம் விளை­வித்த பொலிஸ் அதி­கா­ரி­களை விசா­ரணை செய்து உரிய சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு பொலிஸ் மா அதி­பரை கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் பதில் தலைவர் ஹில்மி அஹமட் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பொதுமக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாது­காப்பு செய­லாளர் கமல் குண­ரத்ன, மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஹில்மி அஹமட் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த 9 ஆம் திகதி மாலை காலி முகத்­தி­டலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சர்­வ­மத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்­கொண்ட அடா­வ­டித்­த­னத்தை உங்கள் கவ­னத்­திற்கு கொண்டு வர விரும்­பு­கின்றேன்.

2019.04.21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பலி­யான மக்­க­ளுக்கு பிரார்த்­தனை புரி­வ­தற்­கா­கவும், ரமழான் நோன்பு திறக்கும் முக­மா­கவும் பல சம­யக்­கு­ழுக்­களைச் சேர்ந்­த­வர்கள் இப்தார் நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.
அனைத்து மதத்­தி­னரும் ஒற்­று­மை­யுடன் ஒன்று சேர்­வ­தற்கும், முஸ்­லிம்­களின் இப்­தாரை அனு­ப­விப்­ப­தற்கும் நல்­லி­ணக்க நோக்­கோடு இவ்­வ­ழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த 1200 இற்கு மேற்­பட்ட மக்கள் காலி முகத்­திடல் ஹோட்­ட­லுக்­க­ருகில் ஒன்று கூடி­யி­ருந்­தனர்.

இப்தார் நிகழ்வு ஏற்­பாட்­டா­ளர்கள் இது தொடர்பில் எழுத்து மூலம் கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் அனு­ம­தியும் பெற்­றி­ருந்­தனர். பொறுப்­ப­தி­காரி வாய்­மூலம் அனு­மதி வழங்­கி­யி­ருந்தார். ஏதும் பாது­காப்பு தேவை­யென்றால் தன்னை தொடர்பு கொள்­ளு­மாறு அவர் வேண்­டி­யி­ருந்தார். அவ­ரது கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கத்­தையும் வழங்­கி­யி­ருந்தார்.

பல்­வேறு சமய மக்­களின் இப்தார் புனித ஒன்று கூடல் என்­பதால் பிரச்­சி­னைகள் ஏதும் ஏற்­ப­ட­மாட்­டாது. இது ஒரு நல்­லி­ணக்க ஒன்­று­கூடல் என ஏற்­பாட்­டா­ளர்கள் கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் அன்று நோன்பு திறப்­ப­தற்கு உணவு பரி­மாறும் செயற்­பா­டுகள் இடம் பெற்ற வேளை சுமார் 4.45 மணி­ய­ளவில் அவ்­வி­டத்­துக்கு கோட்டை பொலிஸார் வந்து இறங்­கி­னார்கள். இப்தார் நிகழ்­வினை கைவி­டு­மாறு பொலிஸார் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்கள். ஏற்­பாட்­டா­ளர்­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில் நிகழ்­வில்­க­லந்து கொண்­டி­ருந்த சிலரை அணுகிய பொலிஸார் கலி­மாவை ஓதும் படி அவர்களை வற்­பு­றுத்­தி­னார்கள்.

இந்­நி­கழ்வு சர்வ மதத்­த­வர்­களும் கலந்து கொண்­ட­தாகும். முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு கலிமா தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.தெரிந்­தி­ருந்­தாலும் கலிமா கூறும்­படி பொலி­ஸாரால் வற்­பு­றுத்த முடி­யாது. இது நியா­ய­மு­மில்லை. கலி­மாவை கூறும்­படி முஸ்­லி­மிடம் கூட வற்­பு­றுத்­தக்­கூ­டாது.

இது பொலி­ஸாரின் அடா­வ­டித்­த­ன­மாகும். அங்கு குழு­மி­யி­ருந்த சர்­வ­மத மக்­களை அவ­ம­திக்கும் செய­லாகும். இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் பதிவுகளை உங்களுக்கு அனுப்பிவைக்க தயாராகவுள்ளோம்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு (பொலிஸாருக்கு) உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.