முஸ்லிம் சமூகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையினை முழுமையாக நோக்க வேண்டும்

மொரோக்கோ மன்னர் முன்னிலையில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார் ரிஸ்வி முப்தி

0 756

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“இன்­றைய முஸ்லிம் சமூகம் அல்­லாஹ்­வு­டைய இறு­தித்­தூதர் முஹம்­மது (ஸல்) அவர்­க­ளு­டைய வாழ்க்கை வழி­மு­றை­களை எல்லா திசையில் இருந்தும் நோக்க வேண்­டிய அவ­சி­யத்தில் இருக்­கி­றது” என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

மொரோக்­கோ அரச அரண்­ம­னையில் மொரோக்கோ மன்னர் ஆறாம் முஹம்­மத் தலை­மையில் அண்­மையில் நடை­பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ‘அல்குர்ஆன்’ சுன்னாவின் ஒளியில் நாம் எப்படி ஒரு முன் மாதிரி சமூகமாக அமைவது? என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கையிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ‘நபிகள் நாயகம் அவர்­களை ஒரு தலை­வ­ராக, ஒரு நீதி­ப­தி­யாக, ஒரு சீர்­தி­ருத்­த­வா­தி­யாக, ஒரு படைத்­த­ள­ப­தி­யாக எப்­ப­டி­யெல்லாம் நோக்க முடி­யுமோ அப்­படி எல்லாம் அவர்­களை நோக்கி மனித சமூ­கத்தின் மத்­தியில் ஆளு­மை­களை உரு­வாக்­க­வேண்டும். உரு­வாக்­கு­கின்­ற­போது அவர்­களை முன்­மா­தி­ரி­யாகக் கொள்ள முடியும்.

இன்று முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் எல்லை மீறிய சிந்­த­னைப்­போக்கு பிறரை வஞ்­சிக்கும் நட­வ­டிக்கை இஸ்­லா­மிய ஷரீ­அத்­து­டைய வழி­காட்­ட­லுக்கு மாற்­ற­மான அத்­து­மீ­றிய தீவி­ர­வாத சிந்­தனை போன்­ற­வற்றை நாம் காணு­கிறோம். இது மிகுந்த மன­வே­த­னையை ஏற்­ப­டுத்­து­கி­றது. இஸ்­லா­மிய சமூ­கத்­த­லை­வர்கள், பொறுப்புதாரிகள், சன்­மார்க்க அறி­ஞர்கள், இந்­நி­லை­யி­லி­ருந்து மீட்டு முஸ்லிம் சமூ­கத்தை நெறிப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும்.

இவ்­வாறு செயற்­பட்டால் மாத்­தி­ரமே முன்­மா­திரிமிக்க சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பத்­தக்க ஒரு சமூ­கத்தை நாம் இப்­பூ­மியில் காண முடியும். நற்­பி­ர­ஜை­களை உரு­வாக்க முடியும். நபித்­தோ­ழர்கள் அவர்­க­ளு­டைய வாழ்வில் மிகச்­சி­றந்த வழி­மு­றை­களை எடுத்து நடந்ததன் கார­ண­மா­கவே முன்­மா­திரி சமூ­க­மாக இன்று நாங்கள் அவர்­களைப் பார்க்க முடி­கி­றது.

தீனு­டைய விட­யங்­களில் கருத்து வேற்­று­மை­யுள்ள விடயங்­களில் விட்­டுக்­கொ­டுப்­போடு நபித்­தோ­ழர்கள் அவர்­க­ளுக்குப் பின்­வந்­த­வர்கள் நடந்து கொண்­டார்கள். கருத்து வேற்­று­மை­யான விவ­கா­ரங்கள் ஒரு­போதும் அவர்­க­ளுக்கு மத்­தியில் பிள­வையும், சர்ச்­சை­யையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. பிற­ரது அபிப்­பி­ரா­யங்­களை மதித்து ஒழுங்­குடன் நடந்து கொள்ள வேண்­டிய சிறந்த பண்­பினை ஒவ்­வொ­ரு­வரும் கடைப்­பி­டிக்க வேண்டும்.
அல்­லாஹ்­வு­டைய இறு­தித்­தூதர் முஹம்­மது (ஸல்) அவர்கள் உரு­வாக்­கிய சில முன்­மா­தி­ரி­யான ஆளு­மை­களை நான் உங்கள் முன் சமர்ப்­பிக்க விரும்­பு­கிறேன்.

உத்­தமர் உமர், சல்மான் அல் பாரிஸி, பிலால் அல்­ஹ­பசி, அப்­துல்லாஹ் இப்னு அப்பாஸ், அனஸ் இப்னு மாலிக், ஆயிஷா (ரலி) போன்­ற­வர்­களை எடுத்­துக்­காட்ட நான் ஆசைப்­ப­டு­கிறேன்.

இவர்கள் அல்­லாஹ்­வு­டைய இறு­தித்­தூ­த­ரு­டைய பாச­றையில் வளர்ந்த முன்­மா­திரி மிக்க புனித ஆளு­மைகள் என்று குறிப்­பிட்டால் அது பிழை­யா­காது என்றார்.

இம்­மா­நாட்டில் இந்­தியா, பிரித்­தா­னியா, இந்­தோ­னே­சியா, பிரான்ஸ், நைஜீ­ரியா,கானா, பிரேசில் போன்ற நாடு­களில் இருந்து வரு­கை­தந்த உலமாக்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பிரமுகர்களும், அறிஞர்களும் மாநாட்டில் பங்கு கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.