மாளிகாவத்தை மையவாடி காணி அபகரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

0 277

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்­பு–­மா­ளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான வக்பு செய்­யப்­பட்ட காணியின் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து மாடி­க் கட்­டடத் தொகு­தி­யொன்­றினை நிர்­மா­ணித்­துள்­ள­மைக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு கடந்த திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

குறிப்­பிட்ட வழக்கு விசா­ர­ணையை கொழும்பு மாவட்ட நீதிவான் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

குறிப்­பிட்ட வழக்கு டி.பி.ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக இலங்கை முஸ்­லிம்­களின் சமய உரி­மை­க­ளுக்­கான அமைப்பைச் சேர்ந்த அதன் தலைவர் அஸ்லம் ஒத்மான் உட்­பட 13 உறுப்­பி­னர்­களால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

மாளி­கா­வத்தை மைய­வா­டிக்குச் சொந்­த­மான 13 பர்ச்சஸ் காணி டி.பி.ஜய­சிங்­க­வினால் சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரிக்­கப்­பட்டு இந்த மாடிக்­கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. டி.பி.ஜய­சிங்க அப்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராகக் கட­மை­யாற்­றிய கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் ஆத­ர­வா­ள­ராவார். 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட இவ்­வ­ழக்கு பல சவால்­க­ளுக்கு மத்­தியில் தொடர்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மாளி­கா­வத்தை மைய­வாடி காணியை நில அளவை செய்­துள்ள நில அள­வை­யாளர் ராசப்­பாவின் வாக்கு மூலத்தை நீதி­மன்றம் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. நீதி­மன்­றமே நில­அ­ளவை மேற்­கொள்­வ­தற்கு இ­வரை நிய­மித்­தது. அவர் நில அளவை அறிக்­கை­யையும் நீதி­மன்­றுக்கு ஏற்­க­னவே சமர்ப்­பித்­தி­ருந்தார்.

இவ­ரது வாக்­கு­மூ­லத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நீதி­மன்றம் இரு ­த­ட­வைகள் அறி­வித்தல் அனுப்­பியும் அவர் சுக­யீனம் கார­ண­மாக நீதி­மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. இத­னை­ய­டுத்து புதி­தாக நில அளவையாளர் ஒருவரை நியமிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் மூலம் நில அளவை அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜரானார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.