புத்தளம் புதிய காதிநீதிவான் மீது தாக்குதல்: யார் கூறுவது உண்மை?

0 325

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் சட்டமியற்றும் உய­ரிய சபையின் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கும், நீதி­ வ­ழங்கும் நீதிவான் ஒரு­வ­ருக்கும் இடையில் நடந்த சம்­பவம் ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வைர­லாகப் பரப்­பப்­பட்டு வரு­கி­றது.

காதி­ நீ­திவான் ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரினால் வீட்­டுக்கு அழைத்துத் தாக்­கப்­பட்­டுள்ளார். புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் வீட்­டுக்கு அழைத்து தன்னை தலையில் தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளா­கி­ய­தாக புத்­தளம் நீதிப்­பி­ரி­வுக்கு புதிய காதி ­நீ­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் எம்.ஆர்.மொஹமட் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்­றினை முன்­வைத்­துள்ளார். இதே­வேளை காதி ­நீ­தி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் எம்.ஆர்.மொஹமட் தன்னை தாக்­கி­ய­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமும் முறைப்­பா­டொன்­றினைப் பதி­வு­செய்­துள்ளார்.
இந்தச் சம்­பவம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமின் மக­ளி­னது வீட்டில் இடம்­பெற்­றுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தன்­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வீட்­டுக்கு அழைத்து வீட்டின் கத­வினை தாழிட்டு அவரும் அவ­ரது மரு­ம­கனும் சேர்ந்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக காதி­ நீ­திவான் பொலிஸில் முறைப்­பாடு செய்து புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­மதி பெற்றார். இந்­நி­லையில் காதி ­நீ­திவான் தன்னைத் தாக்­கி­ய­தா­கவும், அதனால் தனது நெஞ்­சு ­வ­லிப்­ப­தா­கவும் பொலிஸில் முறைப்­பாடு செய்­த­துடன் தான் வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி பெறப்­போ­வ­தா­கவும் கூறி பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்தும் அலி சப்ரி ரஹீம் வெளி­யேறிச் சென்­றுள்ளார்.

நடந்­தது என்ன?
இச்­சம்­பவம் கடந்த 26 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் பாரா-­ளு­மன்ற உறுப்­பி­னரின் மக­ளது வீட்டில் இடம் பெற்­றுள்­ளது. எம்.ஆர்.மொஹமட் புத்­தளம் நீதிப்­பி­ரிவின் காதி ­நீ­தி­ப­தி­யாக கடந்த முதலாம் திகதி முதல் நிய­மனம் பெற்றார். புத்­தளம் மாவட்­டத்தின் காதி­ நீ­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டதும் அவர் தனது பணி­யினை தொடர்­வ­தற்­காக பிர­தேச பள்­ளி­வாசல், உலமா சபை மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் கோரினார்.

இதன் அடிப்­ப­டையில் கடந்த 26 ஆம் திகதி மாலை 6.30 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமை தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்பு கொண்டார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரவு 10 மணிக்கு வீட்­டுக்கு வரு­மாறு அழைத்தார். அழைப்­பின்­படி அவர் மேலும் இரு­வ­ருடன் அலி­சப்ரி ரஹீமின் மக­ளது வீட்­டுக்குக் சென்றார். அங்கு அவர் மாத்­திரம் வீட்­டுக்குள் அழைக்­கப்­பட்டார்.

காதி ­நீ­திவான் எம்.ஆர்.மொஹமட் சம்­பவம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

‘‘நான் காதி­ நீ­தி­ப­தி­யாக நிய­மனம் பெற்­றதும் கடந்த 15 ஆம் திகதி ஆரம்ப நிகழ்­வொன்­றினை நடத்­தினேன். அப்­போது மக்­க­ளிடம் இருந்து எனக்குப் பெரும் வர­வேற்பு கிடைத்­தது. இதன் எதிர்­வ­லையே இந்தச் சம்­பவம் என்று நினைக்­கிறேன்.

நான் கடந்த 26 ஆம் திகதி காதி ­நீ­தி­மன்­றத்தின் துப்­பு­ரவு பணி­களில் ஈடு­பட்டேன். எனது வரு­கைக்கு பின்னால் புத்­தளம் காதி­ நீ­தி­மன்றம் தொடர்பில் முன்­பி­ருந்த தவ­றான கருத்­துகள் மாற்றம் பெற்­றன. நல்­ல­பிப்­பி­ராயம் ஏற்­பட்­டது. எனது புகழ் பர­வி­ய­தை­ய­டுத்து அலி சப்­ரிக்கு பிடிக்­க­வில்லை. அன்று 26 ஆம் திகதி அவரை சந்­தித்து கலந்­து­ரை­யாட தொலை­பேசி மூலம் நேரம் ஒதுக்கி இரவு 10 மணிக்குச் சென்றேன். என்­னுடன் மேலும் இருவர் அங்கு வந்­தனர்.

அன்று என்­னுடன் சென்ற இரு­வரை வெளியே வைத்­து­விட்டு என்னை மாத்­திரம் உள்ளே அழைத்து கதவை மூடினார். கதவை மூடி­ய­வி­தத்தில் ஏதோ நடக்­கப்­போ­கி­றது என்று அறிந்து கொண்டேன். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சில கேள்­வி­களைக் கேட்டார். காதி­ நீ­தி­ப­தி­யா­வ­தற்கு உமக்கு என்ன தகுதி இருக்­கி­றது? எப்­படி இந்தப் பத­வியை எடுத்தீர்? என்று கேட்டார்.

நான் பல­தார மணம் செய்த ஒருவன். இந்­நி­லையில் தேவை­யில்­லாத கதை­களை கதைத்தார். பெரி­ய­பள்ளி நிர்­வாகம் என்னை இந்த ஊரி­லி­ருந்து அடித்து விரட்­டும்­படி கூறி­யி­ருப்­ப­தா­கவும் கூறினார். நான் அவ­ரது ஒவ்­வொரு கேள்­விக்கும் அறிவுபூர்­வ­மாகப் பதில் வழங்­கினேன்.

காதி­ நீ­தி­பதி பத­வியைப் பெறு­வ­தற்கு நான் அர­சியல் ஆத­ரவு பெற­வில்லை. இந்த சம்­ப­வத்தின் பின்னால் அடா­வ­டித்­த­னமும், சில மெள­ல­வி­மார்­களும், மாபி­யாக்­களும், அர­சி­ய­லுமே இருக்­கி­றது. காதி நீ­தி­பதி பத­வியை செய்­ய­வி­டாது இவர்கள் குழப்­பு­கி­றார்கள். இதுவே அடி­த­டியில் முடிந்­தது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்னை புத்­த­ளத்­தி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கூறி­யி­ருந்தார். மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. காதி ­நீ­தி­பதி பத­வியை தொடரக்­கூ­டாது. இங்­கி­ருந்து வெளி­யேறி விடு என்று அச்­சு­றுத்­தினார்.

நான் வெலி­க­மையைச் சேர்ந்­தவன். பிறந்த இடம் அது. புத்­த­ளத்­திலே வசிக்­கிறேன். நானே அவ­ருக்கு முதலில் பேசினேன். அவர்தான் வீட்­டுக்கு வரு­மாறு அழைத்தார். நோன்பு திறப்­ப­தற்கு முன்பே போன் பண்­ணினேன்.

புத்­தளம் பள்­ளி­வாசல் என்னை காதி­ நீ­தி­வா­னாக நிய­மிக்­காது வேறொ­ரு­வரை நிய­மிக்கும் படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. எதற்­காக பள்­ளி­வாசல் நிர்­வாகம் கடிதத் தலைப்­பினை உப­யோ­கப்­ப­டுத்த வேண்டும் என்­பது அவர்­க­ளுக்கே தெரி­யாது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு பள்­ளி­வாசல் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அனைத்தும் பொய்­யா­னவை.

கடி­தத்தில், என்­மீது பிள்ளை தாப­ரிப்பு வழக்­கொன்று தொட­ரப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது. அப்­படி ஒரு வழக்கே இல்லை. இது பொய்­யான தக­வ­லாகும்.

புத்­தளம் பெரிய பள்­ளி­வா­ச­லுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது கடந்த அங்­கு­ரார்ப்­பண நிகழ்வின் பின்பு பள்ளி நிர்­வா­கமும் ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் என்­னுடன் கூட்டம் ஒன்­றினை நடாத்­தி­யது. இந்தப் பத­வியை எவ்­வாறு செய்­யப்­போ­கி­றீர்கள்? என்று வின­வி­னார்கள். சுமு­க­மாக கலந்­து­ரை­யா­ட­லொன்று நடந்­தது. ஆனால் இதற்கு முன்பு பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் என்னை நிய­மிக்க வேண்டாம் என்று கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ளார்கள். இது முனாபிக்தன­மான விட­ய­மாகும். என்னை நிய­மிக்க வேண்­டா­மெனக் கோரு­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் கடிதத் தலைப்பை பயன்­ப­டுத்த முடி­யாது.

என்­னிடம் அறி­வுப்­பலம் இருக்­கி­றது. பள்­ளி­நிர்­வாகம் எதிர்ப்­ப­தற்கு காரணம் என்­ன­வென்று தெரி­யாது. எனது கருத்து இஸ்­லாத்­துக்கு மாற்­ற­மில்லை.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அடித்த அடியில் எனது கண்­ணுக்குப் பக்­கத்­தி­லி­ருந்து வழிந்த இரத்தம் முகம் வழி­யாக ஓடி­யது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருடன் புத்­தளம் மக்­க­ளுக்கு முன்­னி­லையில் இது தொடர்பில் எந்த இடத்­திலும் நேரடி விவா­தத்­துக்கு தயா­ராக இருக்­கிறேன். அவர் கேட்ட கேள்­விகள் தர­மற்­றவை’’ என்று குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­தோடு தான் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் நீதிச்­சேவை ஆணைக்­குழு, காதி­ நீ­தி­ப­திகள் போரம், சி.ஐ.டி., மனித உரி­மைகள் ஆணைக்­குழு என்­ப­வற்­றுக்கு முறை­யி­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

மொஹிதீன் ஜும்ஆ
மஸ்ஜித் (பெரிய பள்ளி)
புத்­தளம் பெரிய பள்­ளி­வா­ச­லான மொஹிதீன் ஜும் ஆ மஸ்ஜித் தற்­போது காதி ­நீ­தி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் எம்.ஆர்.முஹ­மட்டை புத்­தளம் வலய காதி­நீ­தி­ப­தி­யாக நிய­மிக்கக் கூடாது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீ­முக்கு கடந்த 1ஆம் திகதி கடி­த­மொன்­றினை அனுப்­பி­வைத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எம். ஆர். மொஹமட் சிலாபம் பகு­தியில் இரண்டாம் விவாகம் செய்­துள்ளார். அவர் மாத்­த­றையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். காதி ­நீ­தி­மன்றில் இவ­ருக்கு எதி­ராக பிள்ளை தாப­ரிப்பு வழக்­கொன்று நிலு­வையில் உள்­ளது. இவர் காதி­ நீ­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டால் இப்­ப­த­வியின் கெள­ர­வத்­துக்குப் பங்கம் ஏற்­படும் எனவும் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இக்­க­டி­தத்தை பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உப­த­லைவர் ஏ.எம்.எம்.பஸால் அனுப்பி வைத்­துள்ளார்.

நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின்
செய­லா­ள­ருக்கு கடிதம்
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம், எம்.ஆர். மொஹ­மட்டை புத்­தளம் வலய காதி­ நீ­தி­ப­தி­யாக நிய­மிக்க வேண்டாம் என நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
கடி­தத்தில் புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல் தனக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தின் விப­ரங்­க­ளையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இக்­க­டிதம் கடந்த 5ஆம் திகதி அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் புத்­த­ளத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட அனைத்து தகு­தி­க­ளையும் கொண்ட எம்.எஸ்.அப்துல் முஜீப் என்­ப­வரை காதி­நீ­தி­ப­தி­யாக நிய­மிக்கும் படியும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மற்றும்
நீதி­ய­மைச்­ச­ருக்கும் கடிதம்
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் நீதிச் சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது போன்ற கடி­தங்கள் ஜனா­தி­பதி மற்றும் நீதி­ய­மைச்­ச­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இக்­க­டி­தங்கள் மூலமும் எம்.ஆர். மொஹமட் காதி ­நீ­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­படக் கூடாது என்ற கோரிக்­கையே முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

அலிசப்ரி ரஹீம் எம்.பியின் விளக்கம்
புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சமூக வலைத்தள மொன்றுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘காதி­நீ­தி­பதி நோன்பு திறக்கும் நேரத்தில் 6.15 மணிக்கு என்னை சந்­திக்க வேண்­டு­மென போன் பண்­ணினார். நான் ஜனாஸா வீட்­டுக்குப் போக­வேண்­டி­யுள்­ளது. இரவு 8.30 மணி­ய­ளவில் வாருங்கள் என்றேன்.

வீட்­டுக்கு வந்தார். என்ன விடயம்? என்று கேட்டேன். நான் காதி­நீ­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளேன் என்றார். என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்டேன். ஒன்றும் செய்யத் தேவை­யில்லை என்றார். பின்பு அவ­ரைப்­பற்றி பெரு­மை­யாக கூறினார். கதைத்துக் கொண்டே இருந்தார். தான் பெரிய ஆள் என்றார். யாரி­னதும் உத­வியைப் பெற்று பத­விக்கு வர­வில்லை என்றார்.

நான் பொறு­மை­யாக இருந்தேன். பின்பு உங்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பாடு வந்­தி­ருக்­கி­றது என்று அவ­ருக்கு நான் கூறினேன். நீங்கள் பல­தார மணம் செய்­தி­ருக்­கி­றீர்கள் என்றேன். தான் விவா­க­ரத்து பெற்­றதன் பின்பே மறுமணம் செய்­தி­ருக்­கிறேன் என்று பதி­ல­ளித்தார்.

நீங்கள் பத­விக்கு தகு­தி­யா­னவர் இல்லை என பெரிய பள்ளி முறைப்­பாடு செய்­திருக்கிறது. அதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன் என்றேன். ெபரிய பள்­ளி­யி­லி­ருந்து யார் முறைப்­பாடு செய்­தது என்று என்­னிடம் கேட்டார். பெயரை கேட்டார். நிர்­வாகம் என்றேன்.

பள்­ளி­வாசல் ஆட்­களை இந்த இடத்தில் கூப்­பிட்டு விசா­ரிக்க வேண்­டு­மென அடம் பிடித்தார். விசா­ரிப்­பது எனது வேலையல்ல. முறைப்­பாடு தொடர்பில் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுதியிருக்கிறேன். நீங்கள் தகுதியில்லாத ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளேன்

உடனே விசாரிக்க வேண்டும் என்றார். அடம்பிடித்தார். உடனே வெளியில் இறங்கு என்றேன். அவர் வெளியே இறங்க மாட்டேன் என்றார். நீ மடையன் வெளியே போ என்றேன். அவர் என்னைத் தள்ளிவிட்டார். நான் எழுந்து அவரைத் தள்ளிவிட்டேன். இது தான் நடந்தது.

நானும் எனது மருமகனும் அவரை அடித்ததாகக் கூறுவதெல்லாம் பொய். அவர் யாரென்றே முன்பு எனக்குத் தெரியாது. காதி நியமனத்துக்கு நாம் வேறொருவரை சிபாரிசு செய்திருந்தோம்.

புத்தளம் பெரிய பள்ளிவாசலே இவர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளது. இவர் தகுதியானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நகைப்புக்குள்ளாகியுள்ள
முஸ்லிம் சமூகம்
முஸ்லிம் சமூ­கத்தில் காதி நீ­தி­ப­தியும் மக்கள் பிரதிநிதியும் புனித ரமழான் தினத்தில் இவ்­வாறு ஒரு­வரை ஒருவர் தாக்கிக் கொண்­டமை நகைப்­புக்­கு­ரி­ய­தா­க­வுள்­ளது.
ஏனைய சமூ­கங்­க­ளிடம் எமக்குத் தலை­கு­னிவு ஏற்­பட்­டுள்­ளது.எமக்குள் ஏற்­படும் முரண்­பா­டு­களை நாம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் கலந்­து­ரை­யா­டியே தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும். அதை­வி­டுத்து அடி­த­டியில் இறங்­கு­வது ஒது போதும் அனு­ம­திக்க முடி­யாது.
சிகிச்சை பெற்று வெளி­யே­றினார்

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கடந்த 26ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த காதி நீதிவான் எம்.ஆர்.மொஹமட் கடந்த 27ஆம் திகதி இரவு 7 மணியளவில் சிகிச்சையின் பின்பு அங்கிருந்தும் வெளியேறினார். பொலிஸ் அறிக்கை மற்றும் வைத்திய அறிக்கையைப் பெற்றுக் கொண்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.