பதிவுக் கட்டணத்தை செலுத்தி ஹஜ் பயணத்தை உறுதி செய்க

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள்

0 260

(எம்.வை.எம்.சியாம்)
சவூதி அர­சாங்கம் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து 3,500 யாத்­தி­ரிகள் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கி­யுள்­ளது. 2019 ஆம் ஆண்­டி­லி­ருந்து புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்­வ­தற்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்­ட­ணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் தீர்­மா­னித்­துள்­ளன.

இவ் வருடம் ஹஜ் யாத்திரையை நிறை­வேற்­ற விரும்பும் விண்­ணப்­பா­தி­ரிகள் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக விண்­ணப்­பிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்படுகின்றனர்.

அத்­துடன் பதி­வுக்­கட்­டணம் ரூபாய் 25,000 இலங்கை வங்கி கணக்­கி­லக்கம் 2327593 (Hajj Account) வைப்பு செய்து வங்­கியின் பற்­றுச்­சீட்டின் மூலப்­பி­ர­தியை திணைக்­க­ளத்­திற்கு நேர­டி­யாக வருகை தந்து சமர்ப்­பித்து பற்­றுச்­சீட்­டி­னைப்­பெற்­றுக்­கொண்டு ஹஜ் பய­ணத்தை உட­ன­டி­யாக உறு­திப்­ப­டுத்­து­மாறு கொள்­ளு­மாறு வேண்­டப்­ப­டு­கின்­றனர்.
இதே­வேளை, ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு பற்றுச்சீட்டின் இலக்க முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.