பொதுஜன முன்னணியில் இணைந்தோருக்கு பாராளுமன்றில் அங்கீகாரம் வழங்க முடியாது

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

0 640

பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாத கட்­சியின் உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகி ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்த எவ­ருக்கும் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் வழங்க முடி­யா­தென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சபை முதல்­வ­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு கூடி­ய­வேளை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷவை நிய­மிப்­ப­தாக  சபா­நா­யகர் அறி­வித்­த­தை­ய­டுத்து சபையில்  விசேட கூற்றை முன்­வைத்து உரை­யாற்­றும்­போதே சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தின் நிலை­யியல் கட்­ட­ளைக்­க­மைய வெளி­யா­ருக்கு அல்­லது பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வ­மில்­லாத எவ­ருக்கும்  இந்தப் பாரா­ளு­மன்­றத்­திற்குள் வர­மு­டி­யாது. இன்­றைய தினம் வெளி­யாட்கள் சிலர் இந்தப் பாரா­ளு­மன்­றத்­திற்குள் இருக்­கின்­றார்கள்.  அர­சி­ய­ல­மைப்பின்  99/13 ஆவது சரத்­துக்­க­மைய ”பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், அத்­த­கைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வு­செய்­யப்­பட்­ட­தை­யத்து  அவ­ரது பெயர் குறித்த அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சியின் அல்­லது சுயேச்சை குழுவின் நிய­ம­னப்­பத்­தி­ரத்தில் காணப்­பட்­டதோ அந்த கட்­சி­யி­லி­ருந்து அல்­லது குழு­வி­லி­ருந்து வில­கு­வதன் மூலம் அல்­லது விலக்­கப்­ப­டு­வதன் மூலம்  அல்­லது வேறு வகையில் அக்­கட்­சியின் அல்­லது குழுவின் உறுப்­பி­ன­ராக இல்­லா­த­வி­டத்து அவர் அந்தக் கட்­சியின் அல்­லது குழு­வி­லி­ருந்து வில­கிய திக­தி­யி­லி­ருந்து ஒரு மாத காலப்­ப­கு­தியின் பின்னர் அவரின் ஆசனம் இல்­லாது போகும்.  அதற்­க­மைய ­ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து விலகி ஒரு மாதம்  கடந்த பின்னர் அவர்­களின் ஆச­னமும் இல்­லாது போகும்” எனக் குறிப்­பிட்ட போது சபையில் இருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் கூச்­ச­லிட்டு அவரின் கருத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­தனர்.

கூச்­சலின் மத்­தியில் மீண்டும் கருத்து தெரி­வித்த  சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரி­யெல்ல, இதற்கு முன்­னரும் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தது சரி­யெனக் கூறி­னீர்கள். ஆனால் நாங்கள் உங்­க­ளுக்கு சட்­டத்தை படித்­துக்­கொ­டுத்­துள்ளோம். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் கூறி­னீர்கள். ஆனால் இப்­போது என்ன நடந்­துள்­ளது, இந்த  சபையில் நாங்கள் வாதங்­களை செய்வோம்.  மாறாக சண்டை போட­வேண்­டிய அவ­சியம் இல்லை. ஆனால் படி­களில் இருக்கும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு பதி­ல­ளிக்க நாங்கள் தயா­ராக இல்லை. நாங்கள் சரி­யான சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கே பதி­ல­ளிப்போம். எவ்­வா­றா­யினும் எனது தர்க்­க­மா­னது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சியே ­ஸ்ரீ­லங்கா சுதந்திரக் கட்சியாகும். அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகினால் நிச்சயமாக ஒரு மாதத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும் இல்லாது போகும். ஆகவே இவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்க முடியாது என்ற காரணியை சபாநாயகர் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.