கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடியினை மூடி மறைக்க முயற்சி

0 656

(றிப்தி அலி)
கல்­முனை மாந­கர சபையில் இடம்­பெற்ற சுமார் இரண்டு கோடி ரூபா நிதி மோச­டி­யினை மூடி மறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இந்த நிதி மோசடி தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் இறுதி அறிக்­கைகள் கிடப்பில் போடப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த நிதி மோசடி தொடர்பில் கிழக்கு மாகாண கணக்­காய்வுத் திணைக்­க­ளத்தின் பிர­தம உள்­ளக கணக்­காய்­வாளர் எச்.எம்.எம். றசீத் மற்றும் கிழக்கு மாகாண திறை­சே­ரியின் பிர­தம கணக்­காளர் எம். கலை­ஞா­ன­சுந்­தரம் ஆகியோர் தலை­மை­யி­லான இரு குழுக்­க­ளி­னதும் அறிக்­கைகள் கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்­நா­யக்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும், குறித்த அறிக்­கைகள் கைய­ளிக்­கப்பட்டு பல வாரங்கள் கடந்­துள்ள நிலையில், கிழக்கு மாகாண பிர­தம செய­லா­ள­ரினால் இது­வரை காத்­தி­ர­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிதி மோச­டி­யுடன் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் பெயர் விபரம், அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ள வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் மற்றும் நிதி மோசடித் தொகை போன்ற பல விட­யங்கள் குறித்த அறிக்­கை­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் குற்­ற­வா­ளிக்கு எதி­ராக மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பரிந்­து­ரை­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இருந்த போதிலும், குறித்த பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த இது­வரை கிழக்கு மாகாண சபை­யினால் எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக, கல்­முனை மாந­கர சபையில் கட­மை­யாற்­றிய கீழ் நிலை உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மாத்­திரம் பணி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், விளக்­க­ம­றி­ய­லிலும் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

எனினும், கல்­முனை மாந­கர சபையில் இடம்­பெ­று­கின்ற நிதி மோச­டி­யி­னையும் மூடி மறைக்க கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர் முயற்­சிப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்­நா­யக்­க­வினை தொடர்­பு­கொண்டு வின­விய போது, “விசா­ரணைக் குழுக்­களின் இறுதி அறிக்­கைகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இதில், கிழக்கு மாகாண கணக்­காய்வுத் திணைக்­க­ளத்தின் பிர­தம உள்­ளக கணக்­காய்­வாளர் எச்.எம்.எம். றசீ­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யினை மேல­திக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முத­லை­மைச்சின் பதில் செய­லா­ள­ரிடம் கைய­ளித்­துள்ளேன்.

அது போன்று கிழக்கு மாகாண திறை­சே­ரியின் பிர­தம கணக்­காளர் எம். கலை­ஞா­ன­சுந்­த­ரத்­தினால் தமிழில் சமர்ப்­பிக்­கப்­பட்ட இறுதி அறிக்­கை­யினை மொழி­பெ­யர்ப்புச் செய்யும் நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன. மொழி­பெ­யர்ப்பு செய்­யப்­பட்ட அறிக்கை கிடைத்­த­வுடன் அதி­லுள்ள பரிந்­து­ரைகள் தொடர்­பிலும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என்றார்.

எவ்­வா­றா­யினும், “கிழக்கு மாகாண கணக்­காய்வுத் திணைக்­க­ளத்தின் பிர­தம உள்­ளக கணக்­காய்­வாளர் எச்.எம்.எம். றசீ­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யினை மாத்­திரம் வைத்து எத­னையும் மேற்­கொள்ள முடி­யாது” என கிழக்கு மாகாண முத­லை­மைச்சின் பதில் செய­லாளர் ஐ.கே.ஜீ. முத்­து­பண்டா தெரி­வித்தார்.

இந்த நிதி மோசடி தொடர்பில் விரி­வாக ஆராய்ந்து பின்­னரே நட­வ­டிக்­கைகள் எடுக்க முடியும். இதற்கு எவ்­வ­ளவு கால அவ­காசம் தேவைப்­படும் என்­பது தொடர்பில் தற்­போது கூற முடி­யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் நாளை (31) வெள்ளிக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இதன்போது தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள கல்முனை மாநகர சபையின் முன்னாள் உத்தியோகத்தர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.