சர்வாதிகாரத்திற்கு வித்திடும் புதிய சட்டங்கள்

0 366

அர­சாங்­கத்­தினால் புதி­தாக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூலம் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கு மித­மிஞ்­சிய அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­துடன் மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே பொறுப்­புக்­கூ­றலை உறு­தி­செய்­வதாக அமைந்துள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழித்தல் என்ற பெயரில் நபர்­களை முறை­யற்ற விதத்தில் நடத்தும் கலா­சா­ரத்தை மாற்­று­வ­தற்­கான வலு­வான அர­சியல் நிலைப்­பா­டின்றி, வெறு­மனே சட்­ட­ம­று­சீ­ர­மைப்­புக்­களின் ஊடாக மாத்­திரம் எத­னையும் சாதிக்­க­மு­டி­யாது என்றும் குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்­போது நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­துக்குப் பதி­லாகப் பிறி­தொரு சட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­லத்தை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யிட்­டது. இருப்­பினும் அதன் உள்­ள­டக்கம் பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தை விடவும் மிக­மோ­ச­மா­ன­தாகக் காணப்­ப­டு­வ­தாகப் பல்­வேறு தரப்­பி­னரும் சுட்­டிக்­காட்­டி­வருகின்றனர். இது­ கு­றித்துத் தமது நிலைப்­பாட்டைத் தெளி­வு­ப­டுத்தி மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலையம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

‘‘அர­சாங்­கத்­தினால் கடந்த 22 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் பயங்­க­ர­வா­தத்­ த­டைச்­சட்டம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு, அதற்குப் பதி­லாகப் பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­கா­ல­நிலை பிர­க­டனம் ஆகி­ய­வற்றின் மூல­மான அதி­கா­ரங்­களைக் கடந்­த­கால அர­சாங்­கங்கள் பயன்­ப­டுத்­திய விதத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கு­கையில் தற்­போது முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள புதிய சட்­ட­மூலம் நிறை­வேற்­ற­தி­கா­ரத்­துக்கு மித­மிஞ்­சிய அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­துடன் மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே பொறுப்­புக்­கூ­றலை உறு­தி­செய்­கின்­றது.

சிறு­பான்­மை­யி­னத்­தவர், விமர்­ச­கர்கள், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை இலக்­கு­ வைப்­ப­தற்கும் சித்­தி­ர­வ­தைகள் மற்றும் தண்­ட­னை­க­ளி­லி­ருந்து விடு­படும் போக்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சாங்­கங்­களால் பாது­காப்­புச்­சட்­டங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் பின்­ன­ணியில், இச்­சட்­ட­மூலம் தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­வேளை பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழித்தல் என்ற பெயரில் நபர்­களை முறை­யற்ற விதத்தில் நடத்தும் கலா­சா­ரத்தை மாற்­று­வ­தற்­கான வலு­வான அர­சியல் நிலைப்­பா­டின்றி, வெறு­மனே சட்­ட­ம­று­சீ­ர­மைப்­புக்­களின் ஊடாக மாத்­திரம் எத­னையும் சாதிக்­க­மு­டி­யாது என்­பதை மீள­வ­லி­யு­றுத்­து­கின்றோம்’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள சட்­ட­மூ­ல­மா­னது பெரு­ம­ள­விற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட்டு, பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­டாத பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தை ஒத்­த­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் 2018 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­காத பல்­வேறு குற்­றங்கள் இப்­பு­திய சட்­ட­மூ­லத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­ப­துடன், அவற்றில் சில விட­யங்கள் கருத்­து­வெ­ளிப்­பாட்­டுச் சு­தந்­திரம் தொடர்பில் தீவிர கரி­ச­னையைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இருப்­பினும் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தே­க­நபர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வரின் முன்­னி­லையில் வழங்கும் வாக்­கு­மூலம் ஆதா­ர­மாகக் கரு­தப்­ப­ட­மாட்­டாது என்­பது மாத்­தி­ரமே ஏற்­க­னவே நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் இப்­பு­திய சட்­ட­மூ­லத்­தி­லுள்ள ஒரே­யோரு முன்­னேற்­ற­க­ர­மான மாற்­ற­மாகும் என்றும் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்­தோடு இச்­சட்­ட­மூ­லத்தின் ஊடாக அமைப்­புக்­க­ளுக்கு எதி­ராகத் தடை­யுத்­த­ரவு விதிப்­ப­தற்­கான அதி­கா­ரமும் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் இவ்­வ­தி­கா­ரங்கள், நாட்டில் நிலவும் சட்­ட­பூர்­வ­மான கருத்­து­வெ­ளிப்­பாட்­டுச்­ சு­தந்­தி­ரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மேலும் இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றங்களுக்கு’ வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இலங்கையின் நீண்டகால ஒடுக்குமுறை வரலாற்றை நினைவூட்டுகின்றது.

இலங்கையானது மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுதல் போன்றவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

அந்த வகையில் அரசாங்கம் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்குப் பதிலாக எந்தவித முன்னேற்றமுமற்ற புதிய சட்டங்களையே அறிமுகப்படுத்த முற்படுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறான வார்த்தை ஜாலங்கள் கொண்ட மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் சட்டங்கள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.