நோன்பு ஒரு வரம்

0 413

Dr. எம்.எஸ்.எம்.நுஸைர்
MBBS, MD medicine (Col)
Senior registrar in internal medicine

வழ­மை போன்று இம்­மு­றையும் ரமழான் நோன்பு நம்மை வந்தடைந்துள்ளது. வழக்கம் போல் நாமும் உற்­சா­க­மாக நோன்பை வர­வேற்க தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். வருடா வருடம் எத்­த­னையோ நோன்­பு­களை நாம் கடந்து சென்­றி­ருக்­கிறோம். ஆனால் ரமழான் மாத நோன்பு எம்மில் என்ன மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கி­றது.

ரமழான் நோன்பு இரண்டு வகை­யான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.
1. ஆன்­மிக ரீதி­யான மாற்றம்.
2. உடல் ரீதி­யான மாற்றம்.

இவற்றில் உடல் ரீதி­யாக எவ்­வா­றான மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும் என சுட்­டிக்­காட்­டு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

ஏழை­களின் பசியை உணர்ந்து கொள்­வது நோன்பின் ஒரு பிர­தா­ன­மான நோக்­க­மாகும். ஆனால் பொது­வாக எம்மில் பலர் நோன்பு காலத்­தி­லேயே அதி­க­மாக சாப்­பி­டு­கிறோம். பகல் முழு­வதும் சாப்­பி­டாமல் இருந்­தாலும் இரவு நேரத்தில் அதி­க­மாக சாப்­பிடும் பழக்­கத்தை கொண்­டி­ருக்­கிறோம். சஹர் நேரத்தில் சாப்­பிடும் உணவு பகல் நேரத்தில் சாப்­பிடும் அள­விற்கு சம­னா­னது. பின்னர் நோன்பு திறக்கும் போது அதி­க­மான உண­வு­களை சாப்­பி­டு­கின்றோம். இரவு நேர சாப்­பாட்­டையும் சாப்­பி­டு­கின்றோம். தராவீஹ் தொழு­கையின் பின்னர் பள்­ளி­வா­ச­லிலோ அல்­லது வீட்­டிலோ ஏதா­வது சிற்­றுண்­டி­க­ளோடு தேநீரும் பரு­கு­கிறோம். மொத்­தத்தில் ஏனைய நாட்­களை விட ரமழான் மாதத்தில் அதி­க­மா­கவே சாப்­பி­டு­கிறோம். ரமழான் மாதத்தில் உண­வுக்­கா­கவே அதிக பணம் செல­வி­டப்­ப­டு­கி­றது. இது எமது ஆரோக்­கி­யத்தை பாதிக்கக் கூடிய விட­ய­மாகும். எம்மில் பலர் அதிக உடல் எடையால் (obesity) பாதிக்­கப்­பட்­டுள்ளோம். ஒரு மாதம் நோன்­பி­ருந்தும் நான்கு அல்­லது ஐந்து கிலோ­கிராம் எடையை எம்மால் குறைக்க முடி­யா­விட்டால் நாம் நோன்பில் அதிகம் சாப்­பி­டு­கிறோம் என்­ப­துவே உண்மை.

இடைக்­கி­டையே நோன்­பி­ருப்­பது (intermittent fasting) என்­பது மருத்­துவ உலகில் மிகப் பெரும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. British Medical journal (BMJ) எனும் உலகப் புகழ் பெற்ற மருத்­துவ சஞ்­சிகை அண்­மையில் வெளி­யிட்ட ஒரு கட்­டு­ரையில் நோன்­பி­ருப்­பதன் மருத்­துவ பயன்­களை பட்­டி­ய­லிட்டு விளக்­கி­யுள்­ளது. இதில் நோன்பு எடையை குறைக்க பெரிதும் உத­வு­வ­தாக குறிப்­பிடப்பட்­டுள்­ளது. அத்­தோடு உடலின் இரத்­தத்தில் உள்ள குளுக்­கோஸின் அளவை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் நோன்பு உத­வு­கி­றது. உடலில் கீட்­டோசிஸ் எனும் செயற்­பாட்டை தூண்டி உடலில் சிறந்த வளர்­சிதை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. நோன்பு பிடிப்­பது உடலில் ஏற்­படும் அழர்ச்சிப் போக்கை (inflammation) குறைத்து சீனி, பிரஸர், கொலஸ்ட்ரோல், மூட்டு வலி போன்ற நீண்­டநாள் நோய்­களை கட்­டுப்­ப­டுத்த உத­வு­கி­றது.

நோன்பு நோற்கும் ஒருவர் உடற்­ப­யிற்­சி­யிலும் ஈடு­ப­டு­வா­ரானால் இரு­தய நோய்­களில் இருந்து பாது­காப்­பாக இருக்க உத­வு­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.
மருத்­து­வத்தில் பல்­வேறு நோன்பு முறைகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. Alternate day fasting என்­பது ஒன்­று­விட்ட ஒரு நாள் நோன்­பி­ருக்கும் முறை­யாகும். (தாவூத் நபி நோன்பு நோற்ற முறை). நோன்­பி­ருக்கும் நாளில் நோன்பு இல்­லாத நாளில் எடுக்கும் கலோ­ரியில் 40% எடுக்­கப்­பட வேண்டும். அடுத்து Intermittent fasting என்­பது 16 மணி நேரம் நோன்பு வைத்து 8 மணி நேரத்­திற்குள் உண­வுண்ணும் முறை­யாகும். இது தற்­போது நாம் நோன்பு பிடிக்கும் முறைக்கு ஒப்­பா­னது. 5:2 என்­பது வாரத்தில் ஐந்து நாட்கள் உண­வுண்டு இரண்டு நாட்கள் நோன்பு வைக்கும் முறையும் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. இது நபி அவர்கள் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு பிடித்த முறைக்கு சம­னா­னது. எந்த முறை நோன்­பா­யினும் அது பல்­வேறு மருத்­துவ பயன்­களை கொண்­டுள்­ளது. அதா­வது நோன்பு ஒரு சிறந்த மருந்­தாக இருக்­கின்­றது.

00

16 மணி நேரம் நோன்­பி­ருந்து 6 மணி நேரத்­திற்குள் சாப்­பிடும் நோன்பு முறை மிகவும் பரந்த ஆய்­விற்­குட்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. New England Medical journal எனும் பிர­பல்­ய­மான மற்­று­மொரு சஞ்­சிகை நடத்­திய ஆய்வில் 14 –16 மணி நேரம் நோன்­பி­ருக்கும் ஒரு­வரில் குளுக்­கோஸில் இயங்­கி­வந்த உடல் கல செயற்­பா­டுகள் கீட்டோன் எனும் இர­சா­ய­னத்தில் செயற்­பட ஆரம்­பிப்­பதால் உடல் கலங்கள் வய­தா­வதை தடுப்­ப­தோடு புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தையும் தடுப்­ப­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. மேலும் நோன்பு மன அழுத்­தத்தை குறைப்­ப­தற்கும் ஞாபக சக்­தியை அதி­க­ரிப்­ப­தற்கும் வய­தான காலத்தில் ஏற்­படும் Alzheimer எனப்­படும் ஞாபக மறதி நோயினை தடுப்­ப­தற்கும் உத­வு­கின்­றது. அது­மட்­டு­மல்­லாமல் இது­வரை மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத fatty liver எனப்­படும் ஈரலில் கொழுப்பு படியும் நோயினை குணப்­ப­டுத்­து­வ­தற்கும் நோன்பு பெரிதும் உத­வு­கி­றது. 5–10% எடை குறைப்பே இந்­நோய்க்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட சிகிச்­சை­யாகும்.

இருப்­பினும் நாம் வருடா வருடம் நோன்பு பிடித்தும் இப் பயன்­களை அடைய தவறி விடு­கிறோம் என்­ப­தற்கு எமது உணவு முறையே கார­ண­மாகும்.

சஹர் வேளை­களில் அதிக கார்­போ­ஹைட்ரேட் (மாச்­சத்து) உண­வு­களை உட்­கொள்ளக் கூடாது. அதிக சோறு அல்­லது மாப்­பண்­டங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை திடீ­ரென அதி­க­ரித்து இன்­சுலின் சுரப்பை அதி­கப்­ப­டுத்தும். இதனால் அதிக சோர்வு தூக்கம் என்­பன ஏற்­ப­டு­வ­தோடு சில மணி நேரத்­தி­லேயே பசி­யையும் தூண்­டி­விடும். ஆனால் புரத உணவு, கொழுப்பு மற்றும் பழங்கள் மரக்­க­றிகள் போன்­றவை சோர்வை ஏற்­ப­டுத்­தா­த­தோடு நீண்ட நேரம் பசி­யேற்­ப­டா­மலும் பாது­காக்­கி­றது. இரவு நேரத்­திலும் சஹர் வேளை­யிலும் அதிக நீர் அல்­லது நீரா­கா­ரங்­களை எடுத்­துக்­கொள்ள வேண்டும். சஹர் நேரத்தில் சாப்­பிட்டு விட்டு பால் ஒரு கோப்பை அருந்­து­வது சிறந்­தது. ஆனால் தேயிலை, கோப்பி என்­பவை சிறுநீர் உற்­பத்­தியை அதி­க­ரித்து நீரி­ழப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதால் தவிர்ந்து கொள்­வது நல்­லது.

பேரீச்சம்­ப­ழத்தில் அதிக கனி­யுப்­பு­­களும் விட்­ட­மின்­களும் உள்­ளதால் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்­பி­டு­வது மிகவும் சிறந்­தது. அத்­தோடு கஞ்சி குடிப்­பதும் சிறந்­தது. கஞ்­சியில் அதிக நீரும் கனி­யுப்­புக்­களும் உள்­ள­தோடு சமி­பாட்­டிற்கு மிகவும் உகந்­தது. பழங்கள், நட்ஸ் வகை­க­ளையும் சேர்த்­துக்­கொள்­வ­தோடு தேநீர் அல்­லது இயற்கை ஜூஸ் வகை­க­ளையும் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். சோடா (carbonated drinks) முற்­றாக தவிர்க்­கப்­ப­ட ­வேண்டும்.

எம்மில் அதி­க­மானோர் நோன்பு திறந்த பின் இரவு சாப்­பாட்­டையும் உட்­கொள்­கின்றனர். உண்­மையில் சஹர் வேளையில் சாப்­பிட முடி­யா­த­வர்கள் அல்­லது நோன்பு திறக்கும் நேரம் கஞ்சி சிற்­றுண்­டி­களை உண்ண முடி­யா­த­வர்கள் இரவு சாப்­பாட்டை எடுத்­துக்­கொள்ள வேண்டும். ஏனை­ய­வர்­க­ளுக்கு இர­வு­ணவு மேல­தி­க­மா­க­ன­தாகும். இது நாம் எதிர்­பார்க்கும் பலன்­களை அடை­வதை தடுத்­து­விடும்.

நீங்கள் தினமும் மூன்று வேளை மருந்­து­களை உட்­கொள்­ப­வ­ராயின் நோன்பு ஆரம்­பிக்க முன்னர் உங்கள் வைத்­தி­யரை நாடி இரண்டு வேளை உட்­கொள்ளும் மாத்­தி­ரை­க­ளுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். கடு­மை­யான நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நோன்பு அவசியமில்லை.

ஒவ்வொருவரும் நோன்பு ஆரம்பிக்க முன்னர் உங்களது உடல் நிறையை குறித்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு குறைந்தது 500 கிராம் முதல் 1 கிலோகிராம் எடையை குறைப்பது வரவேற்கத்தக்கது. உரிய முறையில் நோன்பின் மருத்துவ பயன்களை அடைந்துகொள்வதற்கு ரமழான் மாதத்தில் 3–4 கிலோகிராம் நிறையை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே உடல் எடை குறைந்தவர்கள் (BMI<18.5 : 160cm உயரமுள்ள 48 kg ஐ விட குறைந்தவர்கள்) எடையை குறைக்கக்கூடாது.

எனவே ஆன்மிக பயன்களுக்கப்பால் மிக ஏராளமான மருத்துவ பயன்களை அடைந்து கொள்வதற்கு இந்த ரமழானை திட்டமிட்டு பயன்படுத்துவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.