சவூதி-இலங்கை தொழிற்பயிற்சி உடன்படிக்கை கைச்சாத்தானது

0 235

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரி­வ­தற்கு இலங்கை பல்­வேறு துறை­களில் பயிற்­சி ­பெற்­ற­வர்­களை அனுப்பி வைக்­க­வுள்­ளது. இது தொடர்­பான இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உடன்­ப­டிக்­கை­யொன்று செவ்­வாய்­க்கி­ழமை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு தொழில்சார் பரீட்சை உடன்­ப­டிக்­கை­யொன்று தக்­காமுல் நிறு­வ­னத்­துக்கும் இலங்கை உயர்­கல்வி மற்றும் தொழிற்­கல்வி ஆணைக்­கு­ழு­வுக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. உடன்­ப­டிக்­கையில் தக்­காமுல் நிறு­வ­னத்தின் பிர­தி­நிதி பெளஸான் அல்­ மு­ஹைடிப் மற்றும் உயர்­கல்வி, தொழிற்­கல்வி, ஆணைக்­கு­ழுவின் சார்பில் கலா­நிதி ஏ.கே. லலித் அதீர் என்போர் கைச்­சாத்­திட்­டனர்.

இவ்­வு­டன்­ப­டிக்கை சவூதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் காலித் பின் ஹம்மூத் அல் கஹ்­தானி மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த முன்­னி­லையில் கல்வி அமைச்சில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. நிகழ்வில் வெளி­நாட்­ட­லு­வல்கள் இரா­ஜாங்க அமைச்சர் தாரக பால­சூ­ரி­யவும் பங்கு கொண்­டி­ருந்தார்.

இந்த உடன்­ப­டிக்­கை­யின்­படி இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யாவின் வர்த்­தக துறையின் தேவைக்­கேற்ற பயிற்சி பெற்ற பணி­யா­ளர்­களை அங்கு அனுப்பி வைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

‘கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள உடன்­ப­டிக்கை இலங்­கை­யர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யான செய்தி ஒன்­றாகும். இந்த உடன்­ப­டிக்கை மூலம் சவூதி அரே­பிய அதி­கா­ரி­க­ளுக்கு இலங்­கை­யர்­களின் தொழில் பயிற்சி தகை­மையை இனங்­கண்டு அதற்­க­மை­வான தொழில்­களை வழங்கக் கூடி­ய­தாக இருக்கும்’ என இலங்­கையின் கொள்கை திட்­ட­மிடல் அமைச்சின் தேசிய மனி­த­வள அபி­வி­ருத்தி கவுன்­ஸிலின் பணிப்­பாளர் கலா­நிதி கே.ஆரச்­சிகே லலித் அதீர தெரி­வித்தார்.

இதே­வேளை ‘இந்த உடன்­ப­டிக்கை இலங்கை மற்றும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டை­யி­லான நட்­பு­ற­வினை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக அமை­வ­துடன், சவூதி அரே­பி­யா­வுக்கு அதி­க­மான பயிற்­சி­பெற்ற பணி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். இந்­நி­லையில் இலங்­கை­யி­லி­ருந்து பயிற்­சி­பெற்ற தொழி­லா­ளர்­களை எமது தொழிற்­சந்­தைக்கு உள்­வாங்­கிக்­கொள்ள முடியும்’ என சவூதி தூதுவர் காலித் பின் ஹம்மூத் அல்­கஹ்­தானி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.