கபூ­ரிய்யாவை பாதுகாப்பதற்காக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

0 276

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூ­ரியின் வக்பு சொத்தைப் பாது­காப்­ப­தற்­கான அமை­திப்­போ­ராட்­ட­மொன்று நேற்று கொழும்பு செத்­தாம்­ வீதி கோட்டை பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. கபூ­ரிய்­யாவைப் பாது­காப்­ப­தற்­கான அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த ஆர்ப்­பாட்­டத்தில் உல­மாக்கள், சட்­டத்­த­ர­ணிகள், அர­சி­யல்­வா­திகள், வர்த்­த­கர்கள் என பெருந்­தி­ர­ளானோர் பங்கு கொண்­டி­ருந்­தனர். போராட்­டத்தில் பெண்­களும் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

“வக்பு சட்­டத்தின் கீழ் வக்பு செய்­யப்­பட்ட சொத்தை வக்பு செய்­த­வரின் குடும்­பத்­தினர் இச்­சொத்து எமக்குச் சொந்­த­மா­னது என ஒரு போதும் வாதிட முடி­யாது. இச்­சொத்தை அப­க­ரித்துக் கொள்ளும் முயற்­சியில் அவர்கள் ஈடு­பட்­டுள்­ளார்கள். இது சட்­ட­வி­ரோ­த­மா­னது. ஒரு போதும் அனு­ம­திக்­கப்­ப­ட­மு­டி­யாது” என வக்பைப் பாது­காப்­ப­தற்­கான அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பாளர் சட்­டத்­த­ரணி எம்.புஸ்லி தெரி­வித்தார்.
“மஹ­ர­கம கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூரி வளா­கத்­தினுள் முஸ்லிம் மைய­வா­டி­யொன்றும் அமைந்­துள்­ளது.இந்த மைய­வா­டி­யிலே மஹ­ர­கம –ஹோமா­கம வரை­யி­லான முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. எமது போராட்டத்தில் வெற்றியீட்டும் வரை நாம் ஓயமாட்டோம். இதுவே எமது இலக்கு” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.