ஹஜ் குழு சுயாதீனமாக இயங்குமா?

0 387

றிப்தி அலி

ஹஜ் முகவர் சங்­கங்­களின் நிதி­யு­த­வி­யுடன் ஹஜ் குழு­விற்­கான பிரத்­தி­ேயக அலு­வ­ல­க­மொன்று திறக்­கப்­பட்­ட­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பாரிய சந்­தே­கத்­தினை தோற்றுவித்துள்­ளது.

வணக்க வழி­பா­டான ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய கட­மைகள் இன்று வியா­பா­ர­மாக மாறி­யுள்­ளமை யாவரும் அறிந்த உண்­மை­யாகும். அத்­துடன் பாரிய இலா­ப­மீட்டும் தொழி­லா­கவும் இது மாறி­யுள்­ளது. ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரை­களை வினைத்­தி­ற­னாக முன்­னெ­டுக்கும் நோக்­கி­லேயே ஹஜ் குழு சமய விவ­கார அமைச்­ச­ரினால் வருடா வருடம் நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

எனினும், ஹஜ் குழுவின் சுயா­தீன செயற்­பா­டு­களில் பாரிய சந்தேகம் நிலவுகிறது. இவ்­வா­றான நிலை­யி­லேயே ஹஜ் குழு­விற்­கான பிரத்­தி­யேக அலு­வ­ல­க­மொன்று முதற் தட­வை­யாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (21) முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அலு­வ­ல­கத்­திற்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் ஹஜ் முகவர் சங்­கங்­க­ளினால் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. முகவர்களுக்கு எதிராக யாத்­தி­ரிகர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் சுயா­தீ­ன­மாகச் செயற்­பட வேண்­டிய ஹஜ் குழு, முகவர்களி­ட­மி­ருந்து வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­மை­யினால் எப்­படி சுயா­தீ­ன­மாகச் செயற்­படும் என்ற கேள்வி தற்­போது ஏற்­பட்­டுள்­ளது.
மஹிந்த ராஜ­பக்ஷ, 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட பின்­னரே இலங்­கையில் ஹஜ் குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்தக் குழு­விற்கு சட்ட ரீதி­யான எந்­த­வொரு அங்­கீ­கா­ர­மு­மில்லை.

 

எனினும், சமய விவ­கா­ரத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ருக்­குள்ள அதி­கா­ரத்­தினைப் பயன்­ப­டுத்தி இந்தக் குழு நிய­மிக்­கப்­ப­டு­கின்­றது. எனினும், ஆளும் கட்சி அர­சி­யல்­வா­தி­களின் சிபா­ரி­சுடன் இக்­கு­ழு­விற்­கான உறுப்­பி­னர்கள் கடந்த பல வருட கால­மாக நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

இக்­குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் இணைந்தே செயற்­பட வேண்டும். அத்­துடன் இத்­தி­ணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கே இக்­கு­ழுவின் தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ர­முள்­ளது.

இது­வரை நிய­மிக்­கப்­பட்ட எந்­த­வொரு ஹஜ் குழுவும் வினைத்­தி­ற­னாக செயற்­ப­ட­்டதாக அறிய முடி­ய­வில்லை. குறிப்­பாக யாத்­தி­ரிகர்களின் நலன்­க­ளுக்­காக செயற்­ப­டாமல், ஹஜ் முகவர்களுக்கு சார்­பா­கவே இக்­குழு இதற்கு முன்னர் செயற்­பட்­டதை பல தட­வைகள் அவ­தா­னிக்க முடிந்­தது.

இவ்­வா­றான நிலையில், 2023ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் குழு சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் தலைவ­ராக இப்­றாஹீம் அன்சார் நிய­மிக்­கப்­பட்டார்.

இலங்கை வெளி­நாட்டு சேவை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற இவர் நீதி அமைச்­ச­ராக அலி சப்ரி செயற்­பட்ட காலப் பகு­தியில் அவரின் இணைப்புச் செய­லா­ள­ராக செயற்­பட்டார்.
20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு துணைபோன ஒன்­பது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிபா­ரி­சிற்­க­மைய முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் இவர் நிய­மிக்­கப்­பட்டார்.

கடந்த டிசம்பர் 31ஆம் திக­தி­யுடன் இவ­ரது பணிப்­பாளர் பதவி நிறை­வுக்கு வந்­தது. இவரை பணிப்­பாளர் பத­வியில் நீடிக்கச் செய்­வ­தற்­காக 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடு­மை­யாக முயற்சித்தனர். எனினும், குறித்த பத­வியில் நீடிப்­ப­தற்­காக அவர் மேற்­கொண்ட எந்­த­வொரு முயற்­சியும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இந் நிலையில்தான் தனது அர­சியல் செல்­வாக்­கினைப் பயன்­ப­டுத்தி ஹஜ் குழுவின் தலை­வ­ரான நிலையில், ஹஜ் குழு­விற்­கான அலு­வ­லகம் என்ற பெயரில் இப்­றாஹீம் அன்­சா­ருக்­கான தனி­யான அலு­வ­ல­க­மொன்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அமைச்சர் விதுர விக்­க­ர­ம­நா­யக்­க­வினால் திணைக்கள கட்டிடத்தில் திறக்­கப்­பட்­டுள்­ளது.

ஏலவே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஹஜ் விவ­கா­ரங்­களை கையாள்­வ­தற்­காக தனி­யான பிரி­வொன்று உதவிப் பணிப்­பா­ளரின் கீழ் செய­ற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் தனி­யான அலு­வ­ல­க­மொன்று திறக்­கப்­பட்­டமை ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறித்த அலு­வ­ல­கத்­திற்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் ஹஜ் முகவர் சங்­கங்­க­ளினால் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 2023ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் குழு வெளிப்­படைத் தன்­மை­யுடன் எவ்­வாறு சுயா­தீ­மாக செயற்­படும் என்ற கேள்வி மக்கள் மத்­தியில் எழுந்துள்ளது.

ஹஜ் குழு நியமிக்கப்படுவதன் நோக்கம் முகவர்களிடமிருந்து யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்வதற்காகும். கடந்த காலங்களில் பல முகவர் நிறுவனங்கள் எவ்வாறு யாத்திரிகர்களை ஏமாற்றின என்பதை நாம் அறிவோம். அப்படியானால், ஹஜ் குழு முகவர்களின் தயவு தாட்சணையில் இன்றி சுயாதீனமாக இயங்கினால் மாத்திரமே மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

துரதிஷ்டவசமாக, ஹஜ் முகவர்களாலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்தினுள் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஹஜ் குழு எவ்வாறு தீர்மானங்களை எடுக்கப் போகிறது என்பதுதான் இங்கு எழும் நியாயமான கேள்வியாகும்.

யாத்­திரி­களின் நல­னுக்­காக நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் குழு முகவர்களிடம் சலு­கை­க­ளையும் வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் பெறு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.
சிறிய அலு­வ­ல­க­மொன்­றுக்கே இவ்­வாறு பாரிய வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றவர்கள், எதிர்­கா­லத்தில் பல வச­தி­களைப் பெற்­றுக்­கொண்டு ஹஜ் கோட்­டா­க்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு பகிர்ந்­த­ளிக்­க­மாட்டார்கள் என்­பதில் மாற்றுக் கருத்­திற்கு இட­மில்லை.

இதனால், ஹஜ் குழுவின் செயற்­பா­டு­களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது சமய விவகார அமைச்சரின் கடமையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.