அரபு நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட வேண்டும்

0 654

அரபு நாடுகள் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போரிட வேண்­டு­மென அமை­திக்­கான நோபல் பரி­சு­பெற்ற நாடியா முராத் தெரி­வித்­துள்ளார்.

தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்வி ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்­டுள்ள அவர்,  “ஐ.எஸ். பிடியில் சிக்­கி­யுள்ள யாசிதி பெண்­களை மீட்­ப­தற்­கான முயற்­சியில் யாருமே ஈடு­ப­ட­வில்லை. ஈராக்­கிலும் சரி, சர்­வ­தேச அமைப்­பு­க­ளாக இருந்­தாலும் சரி யாரும் அப்­பெண்­களைக் காப்­பாற்ற முன்­வ­ர­வில்லை. ஈராக்கில் பெண்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­றார்கள். நான் என் முடிவில் உறு­தி­யாக இருக்­கிறேன். நான் பாலியல் பலாத்­காரம் குறித்து உரக்கப் பேசுவேன். ஐ.எஸ். குற்­ற­வா­ளி­களை நீதிக்கு முன்னால் கொண்­டு­வர வேண்டும்.

மேலும் அரபு நாடுகள் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகத் தொடர்ந்து போரிட வேண்டும். அப்­போ­துதான் யாசிதி போன்ற சிறு­பான்­மை­யின அமைப்­புகள் பாதிக்­கப்­ப­டாமல் இருக்கும்.

யாசிதி பெண்கள், அவர்கள் இல்­லத்­துக்குத் திரும்ப உத­வுங்கள். எங்­க­ளு­டைய கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சகோ­தர சகோ­த­ரி­க­ளுடன் வாழ அனு­ம­தி­யுங்கள்” என அவர் தெரி­வித்­துள்ளார்.

நோர்வே தலை­நகர் ஒஸ்­லோவில் கடந்த ஒக்­டோபர் மாதம் அமை­திக்­கான நோபல் பரிசு ஈராக்கைச் சேர்ந்த நாடியா முராத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.