இருளில் மூழ்கடிக்கப்பட்ட கபூரியா

0 392

ஏ.ஆர்.ஏ.பரீல்

“எங்­க­ளது கல்­லூ­ரியின் மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட செய்­தி­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்­மாவின் அழுகை என்­னையும் அழ வைத்­து­விட்­டது. யா அல்லாஹ் எங்­க­ளுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கத­றி­ய­ழுதேன்.’’

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் க.பொ.த சாதா­ரண தரத்தில் பயிலும் மாணவர் ஒரு­வரைச் சந்­தித்து கல்­லூ­ரியின் மின்­துண்­டிப்பு தொடர்பில் வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தினார்.

அம்­மா­ணவர் தொடர்ந்தும் தனதும் சக மாண­வர்­க­ளி­னதும் நிலை­மை­யினை விளக்­கினார். “கல்­லூ­ரியில் மின் துண்­டிக்­கப்­பட்­டதால் நாங்கள் பல சிர­மங்­களை எதிர்­கொண்டோம். சில வேளை எங்­க­ளுக்கு குடிப்­ப­தற்­குக்­கூட போதிய நீர் இருக்­க­வில்லை. மின் துண்­டிப்பு கார­ண­மாக நீர் விநி­யோ­கமும் தடைப்­பட்­டது. கல்­லூ­ரியில் பரீட்சை நடந்து கொண்­டி­ருந்ததால் நாங்கள் இரவு வேளையில் பாடங்­களை மீட்க முடி­யாது பல சிர­மங்­களை எதிர்­கொண்டோம். இரவில் தூக்கம் வர­வில்லை. விடு­திக்குள் மின்­வி­சி­றிகள் இயங்­கா­மை­யினால் வெப்­ப­மாக இருந்­தது. நுளம்­பு­களும் தொல்லை தந்­தன. பாடங்­களை மீட்­டிக்­கொள்ள வாய்ப்பு கிடைக்­கா­மை­யினால் எங்­க­ளுக்கு பரீட்­சைக்கு ஒழுங்­காக முகம் கொடுக்க முடி­யா­மற்­போ­னது.

எங்­க­ளது நிலை­மை­யை­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக அழு­தமை என்னை மீளா கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது’’ என்றார்.

கல்­லூ­ரியில் பயிலும் கல்­விப்­பொ­துத்­தா­ரா­தர உயர்­தர மாணவர் ஒருவர் விளக்­க­ம­ளிக்­கையில் “நான் கபூ­ரி­யாவில் உயர்­தர வகுப்பில் படிக்­கிறேன். 5ஆம் வருட மாணவன். பரீட்சை நடந்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே கல்­லூ­ரிக்­கான மின்­சாரம் கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களின் கோரிக்­கைக்கு இணங்க மின்­சாரம் வழங்கும் நிறு­வ­னத்­தினால் துண்­டிக்­கப்­பட்­டது.இப்­போது பரீட்சை முடிந்து விட்­டது. பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பரீட்­சையை எதிர்­கொண்டோம். படித்­த­வை­களை மீட்­டிப்­பார்க்கக் கிடைக்­க­வில்லை. இரு­ளுக்குள் ஒரு­வரை ஒருவர் பார்க்க முடி­யா­த­வாறு முடங்­கிக்­கி­டக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

வழ­மை­யாக மாண­வர்கள் படித்து விட்டு இரவு 10 மணிக்கே நித்­தி­ரைக்குச் செல்வோம். அதி­காலை 4 மணிக்கு எழுந்து தஹஜ்ஜத் தொழு­கையில் ஈடு­ப­டுவோம்.இந்த மின்­துண்­டிப்பு எங்கள் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் துண்­டித்து விட்­டது.

பரீட்­சைக்குக் படிக்க கிடைக்­க­வில்லை.மின் துண்­டிப்பு கார­ண­மாக நீர்­வி­நி­யோ­கமும் தடைப்­பட்­டது. இதனால் எங்­க­ளுக்கு குடிப்­ப­தற்கும் தண்­ணீர்­ கி­டைக்­க­வில்லை. நான் நான்கு நாட்கள் குளிக்­க­வில்லை. விடு­திக்குள் வெப்பம் கார­ண­மாக தூங்க முடி­யாமற் போனது. நுளம்பு தொல்­லை­யினால் அவ­திப்­பட்டோம். பகலில் விடு­திக்குள் வெப்பம் கார­ண­மாக தங்­கி­யி­ருக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது.

சில சந்­தர்ப்­பங்­களில் அதிபர் மெழு­கு­வர்த்தி வாங்­கித்­தந்தார். விடு­தி­யொன்­றி­லி­ருந்து அடுத்த விடு­திக்குச் செல்­வ­தற்கு எம்­மி­ட­மி­ருந்த ஒரிரு டோர்ச்­லைட்­களைப் பயன்­ப­டுத்­தினோம். கல்­லூ­ரியில் ஒரு விடுதி மேற்­பார்­வை­யாளர் உட்­பட உஸ்­தாத்மார் ஐவர் இருக்­கி­றார்கள். அவர்­களும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டார்கள். எங்­க­ளது நிலைமை குறித்து கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் எவ்­வித கரி­ச­னையும் கொள்­ள­வில்லை. எனது வாப்பா ஒரு மெள­லவி. உம்மா எனது நிலை­மை­ய­றிந்து துன்­பத்தில் இருக்­கிறார். அழுது கொண்­டி­ருக்­கிறார். வாப்பா பொறுமை காக்­கும்­படி கூறு­கிறார்.
மின்­துண்­டிப்பு கா­ர­ண­மாக நீர்­வி­நி­யோ­கமும் தடைப்­பட்­டதால் விடு­தியில் சாப்­பாடும் உரிய நேரத்தில் கிடைப்­ப­தில்லை. தாம­த­மா­கவே கிடைக்­கி­றது என்றார்.

கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின்
மின்­வி­நி­யோகம் துண்­டிப்பு
92 வரு­ட­கால வர­லாற்­றினைக் கொண்­டுள்ள மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரிக்­கான மின்­வி­நி­யோகம் கடந்த 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை மூன்று மணிக்கு மின்­வி­நி­யோக நிறு­வனத்தினால் (LECO) துண்­டிக்­கப்­பட்­டது. இவ்­வி­ட­யத்தில் விசேட அம்சம் என்­ன­வென்றால் அர­புக்­கல்­லூ­ரியை நிர்­வ­கிக்கும் நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபையே மின்­வி­நி­யோ­கத்தை துண்­டிக்­கு­மாறு மின்­வி­நி­யோக நிறு­வ­னத்தைக் கோரி­யுள்­ளமையாகும்.

வக்பு சொத்­தான கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியை நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபை கைய­கப்­ப­டுத்திக் கொள்­வதன் ஆரம்­பக்­கட்ட முயற்­சியே இது எனக் கூறப்­ப­டு­கி­றது.
கடந்த 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை 3 மணி­ய­ளவில் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­ட­போது இது வழ­மை­யாக இடம்­பெறும் மின்­வி­நி­யோ­கத்­தடை என கல்­லூரி அதி­பரும் மாண­வர்­களும் எண்­ணி­னார்கள். ஆனால் மின்­வி­நி­யோகம் நீண்ட நேரம் வழங்­கப்­ப­டா­மை­யினால் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் ஐ.எல்.டில்சாத் நுகே­கொடை மின்­வி­நி­யோக நிறு­வன (LECO) காரி­யா­ல­யத்தைத் தொடர்பு கொண்டு வின­வினார். கல்­லூ­ரியின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபையின் எழுத்­து­மூல கோரிக்­கைக்கு அமை­யவே மின்­துண்­டிக்­கப்­பட்­ட­தாக நிறு­வனம் உறுதி செய்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து மறு­தினம் சனிக்­கி­ழமை 4 ஆம் திகதி மேல் மாகாண ஆளுநர் அசாத்­சாலி தலை­யிட்டு அன்று காலை 10 மணி முதல் மின் விநி­யோ­கத்தைப் பெற்­று­கொ­டுத்­துள்ளார். மின்­வி­நி­யோக நிறு­வனம் மனி­தா­பி­மான ரீதி­யிலே மின்­வி­நி­யோ­கத்தை தற்­கா­லி­க­மாக வழங்­கு­வ­தாக தெரி­வித்­தது. அத்­தோடு இவ்­வி­வ­காரம் தொடர்பில் கல்­லூ­ரி­ நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபை­யுடன் கதைத்து இறுதி தீர்­மானம் ஒன்­றினை பெற்றுக் கொள்­ளும்­ப­டியும் இல்­லையேல் கடந்த 7 ஆம் திகதி முதல் மீண்டும் மின்­வி­நி­யோகம் துண்­டிக்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்­தது. இந்­நி­லையில் கடந்த 7 ஆம் திகதி செவ்­வாக்­கி­ழமை மாலை 7 மணிக்கு மின்­சாரம் மீண்டும் துண்­டிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் மின் இணைப்­பினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஜென­ரேட்டர் ஒன்­றினை ஏற்­பாடு செய்­தது. என்­றாலும் கல்­லூரி பாது­காவல் பிரிவினர் ஜென­ரேட்­டரை கல்­லூ­ரிக்குள் எடுத்துச் செல்­வ­தற்கு தடை விதித்­தனர். பாது­காவல் பிரி­வினரின் தடை­யையும் மீறி ஜென­ரேட்டர் மாண­வர்­களால் கல்­லூரி வளா­கத்­தினுள் எடுத்துச் செல்­லப்­பட்­டது.

கல்­லூரி பாது­காவல் பிரி­வினர் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து பொலிஸார் கல்­லூ­ரிக்கு வருகை தந்து தடுத்த போதும் அவர்­களால் நிலை­மையை சமா­ளிக்க முடி­யாமற் போனது.பொலிஸார் திரும்பிச் சென்­றனர்.

முஸ்லிம் கவுன்­ஸிலின் அவ­சர கூட்டம்
கபூ­ரியா உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் வக்பு சொத்­துக்கள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரும் நிலையில் வக்பு சொத்­துக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் அவ­சர கூட்­ட­மொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் அக்­கூட்டம் நடந்­தது.
இக்­கூட்­டத்தில் கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரிக்கு நேர்ந்­துள்ள நிலைமை மற்றும் மின் துண்­டிப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. வக்பு சொத்­துக்கள் ஒவ்­வொன்­றாக அழிக்­கப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் கவலை வெளி­யி­டப்­பட்­டது.

மாகொல முஸ்லிம் அநாதை இல்­லத்­துக்கு உரு­வா­கி­யுள்ள நிலைமை மற்றும் கல்­எலிய முஸ்லிம் பெண்கள் கல்­லூ­ரிக்கு ஏற்­பட்­டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

வக்பு நியாய சபையின் உத்­த­ரவு
கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் வக்பு சொத்து தொடர்­பான வழக்கு கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இச்­சந்­தர்ப்­பத்தில் கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் மின்­துண்­டிப்பு தொடர்­பான விசேட பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டது. பிரே­ர­ணையை செவி­ம­டுத்த வக்பு நியா­ய­ச­பையின் நீதி­பதி அப்துல் மஜீத் கல்­லூ­ரிக்­கான மின் விநி­யோ­கத்தை உட­ன­டி­யாக வழங்­கு­மாறு மின்­வி­நி­யோக நிறு­வ­னத்­துக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்குமாறு வக்பு நியாயசபை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர்களை எதிர்வரும் நியாயசபை அமர்வில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்குமாறும் செயலாளருக்கு ஆணையிட்டார்.

வக்பு நியாய சபையின் உத்தரவுக்கமைய மின்விநியோக நிறுவனம் (LECO) கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரிக்கான மின் இணைப்பினை மீண்டும் வழங்கியுள்ளது.

வக்பு சட்டம்
நாட்டில் பெரும் எண்­ணிக்­கை­யிலா வக்பு சொத்­துக்கள் சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரான மாண­வர்­க­ளையே கல்­லூ­ரி­யி­லி­ருந்து வெளி­யேற்றும் அள­வுக்கு வக்பு சொத்­துக்கள் சட்ட வலு­வினை இழந்­துள்­ளன. எனவே முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது போன்று வக்பு சட்­டத்­திலும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு அச்­சட்டம் மேலும் வலுவானதாக மாற்றப்படவேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.