உணவுக்கு வழியின்றி துன்பப்படும் மக்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை

0 321

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மின்­கட்­ட­ணத்தின் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்பு, பொருட்­களின் விலை­யேற்றம் நடுத்­தர மற்றும் பாமர மக்­களைப் பெரிதும் பாதித்­துள்­ளன. மூன்று வேளை உண­வுக்குக் கூட­ வ­ழி­யில்­லாமல் அல்­ல­லுறும் எண்­ணற்ற குடும்­பங்­களின் கவ­லைக்­கி­ட­மான தக­வல்கள் ஜம் இய்­யா­வுக்குக் கிடைத்த வண்­ண­முள்­ளன. எனவே தன­வந்­தர்கள் பரோ­ப­கா­ரிகள் வச­தி­ப­டைத்தோர் தங்­க­ளா­லான உத­வி­களை வழங்­க­வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூக சேவைப்­பி­ரிவு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் உலமா சபையின் சமூக சேவைப்­பி­ரிவின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம் என்போர் கையொப்­ப­மிட்டு கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது: எமது நாட்டில் நில­வி­வரும் பொரு­ளா­தார நெருக்­க­டியால் அனை­வரும் சொல்­லொண்ணா இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­வதை நாம் அறிவோம். கவ­லைக்­கி­ட­மான பல தக­வல்கள் எமக்குக் கிடைத்து வரு­கின்­றது. தங்­க­ளது நோய்­க­ளுக்குத் தொடர்ந்து மாத்­த­ிரை­களை உப­யோ­கித்து வந்த பலரும் அவற்றை வாங்­கு­வ­தற்கு வச­தி­யில்­லாமல் நிறுத்தி வரு­வ­தாக அறிய முடி­கி­றது. அது ஆபத்­தான விளை­வு­களைக் கொண்­டு­வரும் என வைத்­திய அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இலங்கை வாழ் மக்­களின் வாழ்­வா­தாரச் சுமை­களைக் குறைக்க உரிய அதி­கா­ரி­களைத் தொடர்பு கொண்டு ஜம்­இய்யா பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. எனவே இந்த இக்­கட்­டான நிலை­மை­யினைக் கவ­னத்திற் கொண்டு வசதி படைத்தோர் தங்­க­ளா­லான உத­வி­களைச் செய்­யு­மாறும், ஜம்­இய்­யாவின் கிளைகள், மஸ்ஜித் நிர்­வா­கிகள் ஏனைய சமூக அமைப்­புகள் இதனை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி செயற்­ப­டு­மாறும் ஜம்­இய்யா வேண்­டிக்­கொள்­கி­ளது.

மக்கள் பசி பட்­டி­னியால் வாழும் காலத்தில் அவர்­க­ளுக்கு உண­வ­ளிப்­பது அல்­லாஹ்வின் பொருத்­தத்தைப் பெற்று நர­கி­லி­ருந்து தங்களைப் பாதுகாக்க மிக முக்கியமான வழியென அல்குல்ஆன் குறிப்பிடுகிறது. எனவே தேவைபட்டோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைந்து கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.