இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை கண்டனம் தெரிவித்ததா?

பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

0 252

இஸ்­ரேலின் இந்த வல­து­சாரி ஆட்சி மற்றும் பங்­கா­ளர்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சித்­திர­வ­தைகள் அடக்­கு­முறை மற்றும் விரி­வாக்­க­வாதம் உள்­ளிட்ட கடும்­போக்கு செயற்­பா­டு­க­ளுக்கு இலங்கை அரசு கண்­டனம் தெரி­வித்­துள்­ளதா? என ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் சபையில் கேள்வி எழுப்­பினார்.

சபா­நா­யகம் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தலை­மையில் நேற்று இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வின்­போதே அவர் இவ்­வாறு கேள்வி எழுப்­பினார்.

இம்­தியாஸ் எம்.பி. இதன்­போது உரை­யாற்­று­கையில், உலகம் என்ற சொல்லின் பரஸ்­பர அடை­யா­ளங்­களைப் புரிந்து கொண்டு,அவற்றை மதித்து,அவற்­றுக்கு இட­ம­ளிப்­ப­தற்­கான ஒரு சூழ்­நிலை உரு­வா­கும்­போதே, ​அந்த வார்த்­தையின் உண்­மை­யான அர்த்­தத்தை போன்று உலகம் ஒரு உல­க­ளா­விய குடும்­ப­மாக மாறு­கி­றது.

சர்­வ­தேச சமூகம் உக்ரைன் மீதான ஆக்­கி­ர­மிப்­பையும் அந்­நாட்டை பல­வந்­த­மாக கைப்­பற்ற முயற்­சிப்­ப­தையும் கண்­டித்து, அதற்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்­கா­கவும் உக்­ரே­னிய மக்­களின் சுதந்­திரப் போராட்­டத்தை வெற்­றி­கொள்­வ­தற்­காகத் தேவை­யான ஆத­ரவு வழங்­க­ப்பட்டு வரு­கி­றது.

ஆனால், இன்று பலஸ்­தீன விவ­கா­ரத்தில் முற்­றிலும் எதிர் கொள்­கை­யையே அவ­தா­னிக்­கிறோம்.பலஸ்­தீனம் எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக கடு­மை­யான இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­புக்கும் அடக்­கு­மு­றை­க­ளுக்கும் உள்­ளாகி வரு­கி­றது.

இந்­நாட்டில் சுய ஆட்­சிக்­கான உரி­மையும் அடிப்­படை மனித உரி­மை­களும் பறிக்­கப்­பட்­டுள்­ளன.

வர்க்­க­வாத ஆட்­சியில் தமது உயிரை பலி ­கொ­டுத்­த­வர்கள், நாளாந்தம் தமது இருப்­பி­டங்கள், சொத்­துக்­களை அழித்து, தீமூட்டும் தாக்­குதல் போன்­ற­வற்றை செய்து, பயத்தை விதைத்து அதன் பிர­தே­சங்­களைக் கைப்­பற்றும் கொடிய விரி­வாக்­க­வா­தத்தை பலஸ்­தீனம் எதிர்­கொள்­கி­றது.

சுதந்­தி­ர­மான பலஸ்­தீன தேசத்­திற்­காக, ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கத்­தாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலங்­கள் கூட தீவிர வல­து­சாரி கொள்கை கொண்ட இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அந்தப் பிர­தே­சங்­களில் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்­களை மேற்­கொண்டு, குடி­யேற்­றங்­களும் மிக விரை­வாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதும் மனி­தா­பி­மா­ன­மற்ற அடக்­கு­மு­றை­க­ளி­னூ­டா­கவே இவை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அரச அனு­ச­ர­ணை­யுடன் இடம்­பெறும் பல­வந்­த­மாக குடி­யே­று­ப­வர்­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் “ஹுவாரா” கிரா­மமே கிட்­டி­ய­ளவில் பலி­யி­ட­மா­கி­யுள்­ளது. இந்­நி­லை­மையை மேலும் தீவி­ர­மாக்கி வரும் இஸ்­ரே­லிய நிதி இரா­ஜாங்க அமைச்சர், “ஹுவாரா” கிராமம் உலக வரை­ப­டத்தில் இருந்து அழித்­து­விட வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

அவரின் இந்த அறி­விப்பை அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம் உட்­பட சகல உலக நாடு­களும் கடு­மை­யாக கண்­டித்­துள்­ளன. வெறும் வாய்­வார்த்­தை­களை விட இம்­மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் கண்­ணி­யத்­தையும் பாது­காக்கும் செயற்­பாட்­டுக்கு சர்­வ­தேச சமூகம் அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்டும் என்­ப­துடன், பலஸ்­தீன மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபை வர­லாற்றில் எடுத்த முடி­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ராக வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்த வேண்டும்.
இஸ்­ரேலின் இந்த வல­து­சாரி ஆட்சி மற்றும் பங்­கா­ளர்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சித்தி­ர­வ­தைகள் அடக்­கு­முறை மற்றும் விரி­வாக்­க­வாதம் என்­ப­வற்றை உலக தலை­வர்கள் எதிர்த்து வரும் போக்கில் இலங்கை அரசு இந்த அநீ­தி­யான கடும்­போக்கு செயற்­பா­டு­க­ளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதா?

சுதந்திர மற்றும் சுய ஆட்சிக்கான உரிமைக்காக பாலஸ்தீனர்கள் மிக நீண்ட காலமாக செய்துவரும் போராட்டத்துக்கான இலங்கையின் வரலாற்று அர்ப்பண ரீதியான நிலைப்பாட்டிலிருந்து விலகாமல், பலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு சகல ஒத்துழைப்பையும் அதிகபட்சமாக வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.