ஷஃபானிலிருந்தே ரமழானுக்கு தயாராகுவோம்

0 348

ஷஃபான் மாதம் என்­பது சந்­திர மாதக் கணக்­கின்­படி எட்­டா­வது மாத­மாகும். இன்னும் இது புனி­த­மிக்க ரம­ழா­னுக்­கு­முன்­னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாத­மாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்­பலி (ரஹ்) அவர்கள் தனது லதா­யி­புல்­ம­ஆரிஃப் என்ற நூலின் 292 ஆவது பக்­கத்தில் பதிவு செய்­துள்­ளார்கள். இமாம் அபூ பக்ர் அல் வர்ராக் அல் பல்ஹி என்­ற­ அ­றிஞர் கூறு­கிறார் : ரஜப் மாதம் காற்றைப் போன்­ற­தாகும். ஷஃபான் மாதம் மழை மேகம் போன்­ற­தாகும். ரமழான் மாதம் ­மழை போன்­ற­தாகும். அது போலவே ரஜப் மாதம் விதை விதைக்கும் மாத­மாகும். ஷஃபான் மாதம் தண்ணீர் பாய்ச்­சும் மா­த­மாகும். ரமழான் மாதம் அறு­வடை செய்யும் மாத­மாகும்.

ரம­ழானின் உச்­ச­கட்ட பலன்­களை அடைந்து கொள்ளும் முக­மாக நபி­களார் ஷஃபானில் அதிக வணக்­கங்­க­ளில்­ ஈ­டு­பட்டு, குறிப்­பாக சுன்­னத்­தான நோன்­புகள் அதிகம் வைத்து அதற்­காக தயா­ரா­கி­யுள்­ளார்கள். எனவே ஷஃபான் மாதம்­ அ­தி­க­மாக உப­ரி­யான வணக்­கங்­களில் ஈடு­பட்டு சுன்­னத்­தான நோன்­புகள் அதி­க­மாக நோற்­கத்­தக்க சிறந்த மாத­மாகும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்­க­ளையும் விட ரம­ழா­னுக்கு அடுத்­த­ப­டி­யாக ஷஃபான் மாதத்­தில்தான் அதி­க­மா­க­ நோன்பு நோற்­றுள்­ளார்கள். ரமழான் மாதத்­திற்கு முந்­தைய மாத­மான ஷஃபானில் நோன்பு வைப்­பது நபி­ய­வர்­க­ளால் ­மி­கவும் வலி­யு­றுத்திக் கடைப்­பி­டிக்­கப்­பட்ட ஓர் அமல் ஆகும் என்­பதைக் கீழ்­வரும் ஹதீஸ்கள் நமக்­கு­ ப­றை­சாற்­று­கின்­றன.

“நபி­ய­வர்கள் நோன்பு வைப்­ப­தற்கு அதிகம் விரும்­பிய மாதம் ஷஃ’பானும் அதைத் தொடர்ந்­துள்ள ரம­ழா­னு­மாகும்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்­ட­தாக அப்­துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள். நூல்: அபூ­தாவூத் 2431, நஸாஈ 2350, அஹ்மத் 25548.

“நபி (ஸல்)அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதி­க­மாக (ரமழான் அல்­லாத) வேறெந்த மாதத்­திலும் நோன்­பு­நோற்­க­வில்லை. ஷஃபான் முழு­வ­து­மாக நோன்பு நோற்­பார்கள்.” அறி­விப்­பவர்: ஆயிஷா (ரழி), நூல் : புஹாரி 1970.

ஷஃபான் மாதம் முழு­வ­து­மாக நபி­களார் அவர்கள் நோன்பு நோற்­ற­தாக இந்த ஹதீஸ் கூறு­கின்­றது. இதன் விளக்­கத்­தை பின்­வரும் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்­து­கின்­றது.
“நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் முழு­மை­யாக நோன்பு நோற்­றுள்­ளார்­களா? என ஆயிஷா(ரழி) அவர்­க­ளிடம் வின­வப்­பட்ட போது, நபி(ஸல்) அவர்கள் (தொட­ராக) நோன்பு நோற்­பார்கள். அவர் நோன்பு இருக்­கின்றார். (விடவே மாட்டார்) எனநாம் கரு­து­ம­ள­விற்கு நோன்பு நோற்­பார்கள். சில போது நோன்பு இல்­லாது இருப்­பார்கள். நோன்பு பிடிக்­க­மாட்­டார்­கள்­ என நாம் கரு­து­ம­ள­விற்கு நோன்பு பிடிக்­காது இருப்­பார்கள்.

ஷஃபானைத் தவிர வேறு மாதங்­களில் அவர்கள் அதி­கம் ­நோன்பு நோற்­றதை நாம் கண்­ட­தில்லை. ஷஃபான் முழு­வ­து­மாக நோன்பு நோற்­பார்கள். ஷஃபானில் சில நாட்கள் தவி­ர­ மற்ற நாட்­க­ளெல்லாம் நோன்பு நோற்­பார்கள்” எனக் கூறி­னார்கள். நூல் : முஸ்லிம்: 2778
ஷஃபான் முழு­வதும் நோன்பு நோற்­பார்கள் என்றால் ஷஃபானில் அதி­க­மாக நோன்பு நோற்­பார்கள் என்­ப­தே­ உண்­மை­யான அர்த்­த­மாகும் என்­ப­தனை மேலுள்ள இந்த நபி­மொழி எமக்கு தெளிவு படுத்­து­கி­றது.

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபி­ய­வர்­க­ளிடம்: அல்­லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொ­ரு மா­தத்­திலும் நீங்கள் நோன்பு நோற்­பதை நான் காண­வில்லை என்று கூறிய போது, நபி­ய­வர்கள்: மனி­தர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்­க­ளுக்கு மத்­தி­யி­லுள்ள ஒரு மாதம் விட­யத்தில் பரா­மு­க­மாக இருக்­கின்­றனர். அது­ எப்­ப­டிப்­பட்ட மாத­மெனில் அகி­லத்­தாரின் அதி­ப­தி­யா­கிய அல்­லாஹ்­வின்பால் வணக்க வழி­பா­டுகள் உயர்த்­தப் ­ப­டக்­கூ­டி­ய­மா­த­மாகும். எனது வணக்க வழி­பா­டுகள் நான் நோன்­பா­ளி­யாக இருக்கும் நிலையில் உயர்த்­தப்­பட வேண்­டு­மெ­ன­ வி­ரும்­பு­கிறேன் எனக் கூறி­னார்கள். நூல் : நஸாஈ 2357 அஹ்மத் 21753

மனி­தர்­களின் பாவங்கள் மன்­னிக்­கப்­பட்டு, அவர்கள் தம்மை தூய்­மைப்­ப­டுத்­திய நிலையில் ரம­ழா­னுக்குள் நுழை­யச்­செய்து ரம­ழானை தமது அமல்­களின் மூலம் அழ­கு­ப­டுத்தி அதன் மூலம் அவர்­க­ளது சுவ­னத்தை அலங்­க­ரிக்­க­அல்­லாஹ்வின் முன்­னேற்­பா­டா­கவே ஷஃபான் மாதம் அருள்கள் நிறைந்­த­தாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

நபி­ய­வர்கள் ஷஃபான் மாதத்தைப் போன்று வேறு எந்­த­வொரு மாதத்­திலும் அதிகம் நோன்பு நோற்­க­வில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். மேலும் நபி­ய­வர்கள்: உங்­க­ளுக்கு முடி­யு­மான வணக்­க­ வ­ழி­பா­டு­களை செய்­யுங்கள், நீங்கள் சோர்­வ­டையும் வரை அல்லாஹ் சோர்­வ­டை­வ­தில்லை என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளா­க­ இ­ருந்­தார்கள். குறை­வான வணக்க வழி­பா­டு­க­ளாக இருந்­தாலும் அதனை தொடர்ந்­தேர்ச்­சி­யாக செய்து வரு­வ­து­தான் ­ந­பி­ய­வர்­க­ளுக்கு விருப்­ப­மாக இருந்­தது.
நபி­ய­வர்கள் தொழு­வார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறை­வேற்­று­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறு­கி­றார்கள். நூல் : புஹாரி 1970

மேலே குறிப்­பி­டப்­பட்ட அனைத்து ஹதீஸ்­களும் ஷஃபான் மாதத்தில் நபி­களார் (ஸல்) அவர்கள் அதி­க­மாக நோன்­பு­ நோற்­றுள்­ளார்கள் என்­ப­தற்கு மிகப்­பெரும் சான்­றாகும். எனவே நாமும் நபி­ய­வர்­களின் இந்த நடை­மு­றை­யை­செ­யற்­ப­டுத்த முயற்­சிப்போம். அதன் மூல­மாக ரமழான் மாதத்தின் முழு­மை­யான பயன்­களை அடைந்து கொள்ள ஒரு­ப­யிற்சி கிடைக்கும் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் கிடை­யாது.

நபி­ய­வர்கள் குறிப்­பிட்­டது போல் ஷஃபான் மாத­ வி­ட­யத்தில் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் பாரா­மு­க­மா­கவே இருக்­கி­றார்கள் என்­ப­தா­கவே நம்மால் அவ­தா­னிக்­க­மு­டி­கி­றது. அல்­லாஹ்­வி­டத்தில் அமல்கள் உயர்த்­தப்­ப­டு­கின்ற இம்­மா­தத்தில் நாமும் அதிகம் வணக்க வழி­பா­டு­க­ளில்­ஈ­டு­பட்டு ஷஃபானை நல்ல முறையில் பயன்­ப­டுத்த முயற்­சி­யெ­டுப்போம்.

எனக்கு ரமழான் மாதத்தில் விடு­பட்ட நோன்­பு­களை ஷஃபானில் தவிர நிறை­வேற்ற முடி­வ­தில்லை’ என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறி­னார்கள்.
நூல் : புஹாரி 1950 முஸ்லிம் 1146

தகுந்த கார­ணங்­களின் நிமித்தம் விடு­பட்ட நோன்­பு­களை ஸஹா­பாக்கள், குறிப்­பாக பெண்கள் கூட இம் ­மா­தத்­தில்­நோற்று தமது கட­மை­களை முழு­மை­யாக நிறை­வேற்றி விட்டு ரம­ழா­னுக்கு தயா­ரா­கி­யி­ருப்­பதை மேலுள்ள இந்த செய்­தியின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடி­கி­றது.

ரம­ழா­னுக்கு ஓரிரு நாட்கள் மாத்­திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழ­மை­யாக நோன்­பு­வைக்கும் ஒரு மனி­தரைத் தவிர, அவர் மாத்­திரம் அந்­நாளில் நோன்பு வைத்துக் கொள்ளட்டும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 1914

திங்கள், வியாழன் போன்ற நாட்களில் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவர் நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

புனிதமிக்க இந்த ஷஃபான் மாதத்தை நபிகளார் காட்டித்தராத விடயங்களில் வீணாக்கிவிடாமல் இறைத்தூதர் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைகளை கடைப்பிடித்து ஷஃபானிலிருந்தே ரமழானுக்குத் தயாராகி ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.