சம்மாந்துறை செந்நெல் கிராம கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

குட்டையை மூடுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை

0 338

பாறுக் ஷிஹான்

சம்­மாந்­துறை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட அரபா பள்­ளி­வாசல் வீதி செந்நெல் கிராமம்- 1 பிரி­வினை சேர்ந்த 11 வய­து­டைய அமீர் அன்சீப் என்ற சிறு­வன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கல்குவாரி குட்­டை ஒன்றில் குளிக்கச் சென்­ற­போது உயி­ரி­ழந்­தார். சம்­மாந்­துறை செந்நெல் சாஹிரா வித்­தி­யா­ல­யத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்ற இம்­மா­ணவன் குடும்­பத்தில் 10 ஆவது பிள்­ளை­யாவார்.

இம்­மா­ண­வரின் வீட்­டிற்கு அரு­கி­லேயே குறித்த கல்­கு­வாரி குட்டை காணப்­ப­டு­கின்­றது. இக்­கல்­கு­வாரி குட்­டையில் 11 அடி ஆழத்தில் மழை நீர் நிரம்பி இருந்­துள்­ளது. மேலும் இந்த நீர்­மட்­டத்தில் இருந்து 11 அடி உய­ரத்தில் மலை ஒன்றும் உள்­ளது. வழ­மை­யாக இம்­ம­லையில் இறங்­கியே குளிப்­பது வழ­மை­யாகும். ஆனால் தற்­போது நீர்­மட்டம் அதி­க­ரித்து காணப்­பட்­ட­தனால் எவரும் குளிப்­ப­தற்கு அவ்­வி­டத்­திற்­கு­ செல்­வ­தில்லை.

சம்­பவ தின­மான கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.30 மணியளவில் குறித்த மர­ண­ம­டைந்த மாணவன் வீதியில் நின்­றுள்ளார். இம்­மா­ண­வனின் வய­தினை ஒத்த இரு நண்­பர்கள் அவ்­வீ­தி­யி­னூ­டாக அருகில் உள்ள கடைக்கு இனிப்பு பண்டம் வாங்க சென்­றுள்­ளனர்.

அவ்­வாறு செல்லும் போது மர­ண­ம­டைந்த மாண­வ­னுக்கும் இனிப்புப் பண்டம் வாங்கி கொடுத்­துள்­ளனர். அந்­நேரம் மர­ண­ம­டைந்த மாணவன் தனது இரு நண்­பர்­க­ளி­டமும் தான் குவாரி குட்­டையில் இறங்கி குளிக்க போவ­தாக கூறி­யுள்ளார். எனினும் நண்­பர்கள் மர­ண­ம­டைந்த மாண­வ­னிடம் இங்கு பேய் உள்­ளது குளிக்க வேண்டாம் என தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அம்­மா­ணவன் தனது ஆடை­களை களைந்து நண்­பர்­களின் சொல் கேளாது குட்­டையில் குளிப்­ப­தற்­காக பாய்ந்­துள்ளார். இவ்­வாறு பாய்ந்­த­வ­ருக்கு மூச்சுத் திணறவே நீர்­மட்­டத்தில் மேலே வந்து அப­யக்­குரல் எழுப்­பி­யுள்ளார். இதன் போது அம்­மா­ண­வனின் நண்பன் ஒரு­வ­னுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்ற கார­ணத்­தினால் குறித்த குட்­டையில் நண்­பனை காப்­பாற்றும் நோக்கில் குதித்­துள்ளார். இவ்­வாறு குதித்த நண்பன் குட்டை சக­தியில் சிக்­கிய அம்­மா­ண­வனை மீட்க போரா­டிவிட்டு, அருகில் உள்ள அம்­மா­ண­வனின் வீட்­டிற்கு சென்று உற­வி­னர்­களை உத­விக்கு அழைத்­துள்ளார்.
அங்கு வந்த உற­வி­னர்கள் உட­ன­டி­யாக குட்­டையில் இறங்கி குட்டை சதுப்பு நிலத்தில் 20 நிமி­டங்­க­ளுக்கு மேலாக தேடுதல் மேற்­கொண்டு ஆழ­மான பகு­தியில் சிக்கி உணர்­வற்று காணப்­பட்ட அம்­மா­ண­வனை மீட்டு முத­லு­தவி சிகிச்­சை­களை வழங்­கிய பின்னர் சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு உட­ன­டி­யாக எடுத்து சென்­றுள்­ளனர்.
இருந்த போதிலும் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த மாண­வ­னது உயிர் பிரிந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்ட சிறுவன் மர­ண­ம­டைந்த நிலையில் சடலம் சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்டு நீதி­மன்ற நீதி­வானின் கட்­ட­ளையின் பிர­காரம் மரண விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. பிர­தேச மரண விசா­ரணை அதி­காரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர், இச்­சி­றுவன் நீரில் மூழ்­கி­ய­தனால் மூச்சு திணறி உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிக்கை வழங்கினார். இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை மதியம் சிறு­வனின் ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.
சம்­பவ இடத்­திற்கு சென்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் நௌபர் மற்றும் சார்ஜன்டுகளான ஏ.எம் மஜீட் எம்.ஹனீபா ஆகிய பொலிஸ்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல் காணப்படுவதாகவும் சுமார் 30 அடி ஆழமுடையது எனவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குட்டையை மூட நடவடிக்கை
இதேவேளை சிறுவன் உயி­ரி­ழந்­த சம்­ப­வத்தையடுத்து குறித்த குட்­டையை மூடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­மாந்­துறை பிர­தேச சபையின் தவி­சாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலை­மையில் சம்­மாந்­துறை பிர­தேச செய­லாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்­மாந்­துறை சுகா­தார வைத்­திய அதி­காரி டாக்டர் எம்.எம்.கபீர், சம்­மாந்­துறை பிர­தேச சபை செய­லாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளான பீ.எம்.றியாழ், எஸ்.நளீம், முன்னாள் பிர­தேச சபை உறுப்­பினர் ஏ.சி.எம்.சஹீல், மேற்­பார்வை சுகா­தார பரி­சோ­தகர் ஐ.எல்.றாசீக், கிரா­ம­சேவை உத்தி­யோ­கத்தர் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் குறித்த இடத்­திற்கு கடந்த திங்­கட்­கி­ழமை நேரில் சென்று பார்­வை­யிட்­டனர்.

சுற்­றுப்­புறச் சூழ­லுக்கு பாதிப்­பற்ற வகையில் குறித்த குட்­டையை மூடினால் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் இடம்­பெ­றாமல் பாது­காக்க முடியும் என இதன்­போது பொது­மக்கள் தவி­சா­ள­ரிடம் குறிப்­பிட்­டனர்.

இதனை மூடு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்கைகளை மேற்­கொள்­­வ­தற்­காக சம்­மந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் உட­னடி­யாக விசேட கலந்­து­ரை­யா­டலை ஏற்­பாடு செய்­யு­மாறு பிர­தேச செய­லா­ள­ருக்கு பணிப்­புரை வழங்­கி­ய­துடன், முடி­யு­மான வரை நிவர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தவி­சாளர் உறு­தி­ய­ளித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.