ஹஜ் முகவர்களுக்கான நியமனங்கள் வழங்க அரச ஹஜ் குழு நடவடிக்கை

0 286

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் முக­வர்­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. ஹஜ் முகவர் நிய­ம­னங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு நேற்று முன்­தினம் பெப்­­ர­வரி 28ஆம் திக­தி­யுடன் விண்­ணப்­பிக்கும் இறுதித் திகதி முற்றுப் பெற்­றுள்­ளது.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களைத் திட்­ட­மி­டு­வது தொடர்­பி­லான விஷேட கலந்­து­ரை­யா­ட­லொன்று புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வுக்கும் அரச ஹஜ் குழு­விற்கும் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.பைச­லுக்­கு­மி­டையில் நேற்­று­முன்­தினம் அமைச்சில் இடம்­பெற்­றது.

இக்­க­லந்­து­ரை­யா­டலின் போது இவ்­ வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முக­வர்கள் நிய­மனம் தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

ஹஜ் முகவர் நிய­ம­னத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களின் அலு­வ­ல­கங்­க­ளுக்கு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு அலு­வ­ல­கங்­களின் வச­திகள் தொடர்பில் தக­வல்­களைத் திரட்­ட­வுள்­ளனர். பின்பு அவர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை நடாத்­தப்­பட்டு தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.பைசல் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.