வக்பு சபையில் பிரச்சினைகள் காலதாமதமின்றி சுமுகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்

புதிய அங்கத்தவர்களிடம் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்து

0 278

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“தீர்­வுகள் வேண்டி வக்பு சபையில் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னைகள் காலம் தாழ்த்­தப்­ப­டாமல் இயன்ற அளவில் சுமு­க­மாக தீர்த்­து­வைக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கோரி கிழக்கு மாகாணம் போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வருகை தரும் மக்கள் கொழும்பில் சில­நாட்கள் தங்க வேண்­டி­யேற்­ப­டு­கின்­றமை தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்’’ என புத்­த­சா­சன, சமய, மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரமநாயக்க புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள வக்­பு ­ச­பையின் தலைவர் மற்றும் அங்­கத்­த­வர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கினார்.

வக்பு சபையின் புதிய அங்­கத்­த­வர்­க­ளுக்கும் அமைச்சருக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமைச்சின் அலு­வ­ல­கத்தில் இடம் பெற்­றது. இந்­தச்­சந்­திப்­பின்­போதே அமைச்சர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு அறி­வுரை வழங்­கினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், “வக்பு சபைக்கு சமர்ப்­பிக்­கப்­படும் பிரச்­சி­னைகள் அவ­ச­ர­மாக தீர்த்து வைக்­கப்­ப­ட­வேண்டும். பாமர மக்­க­ளுக்கும், ஏழை மக்­க­ளுக்கும் கஷ்­டங்கள் ஏற்­ப­டா­த­வண்ணம் துரித கதியில் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். வக்பு சபை நல்­லி­ணக்க மைய­மாக செயற்­பட வேண்டும். பிரச்­சி­னைகள் சுமு­க­மாக தீர்த்­து­ வைக்­க­ப்ப­டும்­போது அங்கு சட்­டத்­த­ர­ணி­களின் பிர­சன்னம் அவ­சி­ய­மற்­ற­தா­கி­றது.செல­வு­களும் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன. பல வழக்­குகள் வரு­டக் ­க­ணக்கில் நிலு­வையில் உள்­ள­தாக அறி­கிறேன். இவற்­றுக்கு துரித கதியில் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

வக்பு சபையின் புதிய தலைவர் மொஹிதீன் ஹுசைனை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

வக்பு சபை எதிர்­கா­லத்தில் பிரச்­சி­னை­களில் சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்தும் வகையில் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வதில் கவனம் செலுத்தும், எமக்குள் கொள்­கை வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் சமய ரீதியில் நாம் ஒன்­று­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்பதற்கு நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்கள் தகு­தி­யா­ன­வர்­க­ளா­கவும் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா கவும் இருக்கவேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முதலிடம் வழங்கி தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.