தேசமான்ய, தேசபந்து பட்டங்களை ஜனாதிபதி மட்டுமே வழங்க முடியும்

பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவும் தீர்மானம்

0 305

தேச­மான்ய தேச­பந்து போன்ற தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்­களை முறை­சா­ராத வகையில் மூன்றாம் தரப்­பி­னரால் (வேறு நிறு­வ­னங்­க­ளினால்) வழங்­கு­வதைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. ஜனா­தி­ப­தி­யினால் மாத்­திரம் வழங்­கப்­பட வேண்­டிய இந்த தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்கள், மூன்றாம் தரப்­பினால் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்டு வரு­வதை தடுப்­ப­தற்­கான சட்ட மூலத்­தினை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கண்­டியில்

இடம்­பெற்­றது. இதன்­போது, தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட யோச­னைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

“தேச­மானி, தேச­பந்து போன்ற தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்­களை ஜனா­தி­பதி அன்றி, வேறு தரப்­புக்­க­ளினால் வழங்­கப்­ப­டு­வது சட்­ட­வி­ரோ­த­மாகும்” என்ற விடயம் தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்­கான ஜனா­தி­பதி செய­ல­கத்தின் பதிலின் ஊடாக அண்­மையில் வெளிக்­கொ­ண­ரப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யி­லேயே தேசிய நன்­ம­திப்புப் பட்­டங்­களை முறை­சா­ராத வகையில் வேறு நிறு­வ­னங்­க­ளினால் வழங்­கு­வதை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, தேசிய விரு­து­களில் தற்­போது காணப்­ப­டு­கின்ற வெற்­றி­டங்­களை நிரப்ப அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக முறை­சார்ந்த நடை­மு­றை­களைக் கடைப்­பி­டித்து தகை­மை­யு­டை­ய­வர்­களை குறித்த விரு­துக்கு தெரி­வு­செய்­ய­வுள்­ள­தா­கவும் அரசாங்கம் தெரிவித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.