வாராந்தம் மூன்று தினங்கள் கூடி பிரச்சினைகள் தீர்க்கப்படும்

புதிய வக்பு சபை நடவடிக்கை

0 310

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­ளத்தில் பதி­வுக்­காக காத்­தி­ருக்கும் நூற்­றுக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்­களின் பதி­வு­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கும், சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் வக்பு சொத்­துக்­களை தாம­திக்­காது மீட்­டெ­டுப்­ப­தற்கும் முன்­னு­ரிமை வழங்க புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது.
நேற்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் அதன் பணிப்­பாளர் பைசல் ஆப்தீன் தலை­மையில் நடை­பெற்ற வக்பு சபைக்­கூட்­டத்­திலே இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அத்­தோடு வக்பு சபையில் வரு­டக்­க­ணக்கில் நிலு­வை­யாக இருக்கும் வழக்­குகள் சுமுக­மான முறையில் தீர்க்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
இந்­தப்­ப­ணி­களை விரைவுபடுத்­து­வ­தற்­காக வக்பு சபை வாரம் மூன்று தினங்கள் தனது அமர்­வு­களை நடாத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் வக்பு சபை ஒவ்­வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியா­ழக்­கி­ழ­மை­களில் ஒன்­று­ கூ­ட­வுள்­ளது. விசே­ட­மாக வியா­ழக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வாசல் பதி­வுகள் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் மற்றும் வக்பு சபைக்கு தீர்­வு­க­ளுக்­காக முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னை­களை தாம­த­மின்றி விரை­வாக தீர்த்து வைக்­கும்­படி அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க கோரி­யுள்­ளதால் வக்­பு­சபை வாரம் மூன்று தினங்கள் ஒன்­று­கூடி செயலில் இறங்­க­வுள்­ளது என முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

வக்பு சபையின் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.மதீன் வக்பு சபையின் தீர்­மா­னங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில் “வக்பு சபையில் சில வழக்­குகள் தீர்க்­கப்­ப­டாது 2007 ஆம் ஆண்டு முதல் நிலு­வையில் உள்­ளன.இவ்­வா­றான வழக்­குகள் துரித கதியில் தீர்த்து வைக்­கப்­படும்.

பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள் தங்கள் நிர்­வா­கத்­துக்குள் மற்றும் பள்­ளி­வா­சலில் உரு­வாகும் பிரச்­சி­னை­களை வக்பு சபை மற்றும் திணைக்­க­ளத்­துடன் சேர்ந்து சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்ள முடியும்.

வக்பு சபைக்கு முன்­வைக்­கப்­படும் பல்­வேறு பிரச்­சி­னை­களை வழக்கு பதிவு செய்­யாது சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இதன் மூலம் கால­தா­ம­தத்தை தவிர்க்க முடி­வ­துடன் வீணாக சட்­டத்­த­ர­ணி­க­ளுக்­காக செல­வி­டப்­படும் பணத்­தையும் தவிர்த்­துக்­கொள்ள முடியும்.

வக்பு சபை பார­பட்­ச­மற்ற தீர்­வு­க­ளையே வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாக சபை நியமனம் தொடர்பில் உரிய விதிமுறைகள் கண்டிப்பாக அமுல் நடத்தப்படும் என்றார்.

நேற்றைய கூட்டத்தில் வக்புசபையின் தலைவர் மொஹிதீன் ஹுசைன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.