உம்ரா விவகாரம் நிர்க்கதிக்குள்ளானவர்கள் சவூதி சென்றடைந்தனர்

0 668

காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து உம்ரா பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்­காக கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு முகவர் நிலைய மொன்­றினால் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருந்த 38 பய­ணி­களும் 6 நாட்­களின் பின்பு நேற்று மாலை உம்ரா கட­மைக்­காக சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர்.

குறிப்­பிட்ட உம்ரா பய­ணி­க­ளுக்­கான விமான டிக்­கட்­டு­களைப் பதிவு செய்த கொழும்பைச் சேர்ந்தஅம்ஜா டிர­வல்­ஸுக்கு காத்­தான்­கு­டியைச் சேர்ந்த உம்ரா முகவர் நிலைய உரி­மை­யாளர் விமான டிக்கட் கட்­ட­ணங்­களை வழங்­கா­மை­யி­னா­லேயே பய­ணிகள் இவ்­வாறு நிர்க்­க­திக்­குள்­ளாக்­கப்­பட்­டனர்.

விமான டிக்­கட்­டு­களை ஏற்­பாடு செய்த அம்ஜா டிர­வல்­ஸுக்கு காத்­தான்­குடி முகவர் நிலைய உரி­மை­யா­ளரின் மனைவி மற்றும் உற­வி­னர்கள் உரிய பணத்தில் ஒரு பகு­தியை வழங்­கி­யுள்­ள­தாலே பய­ணி­களின் கட­வுச்­சீட்­டு­களும் டிக்கட் உட்­பட பயண ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உம்ரா பய­ணிகள் 38 பேரும் நேற்று பிற்­பகல் 2.35 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமா­னத்தில் சவூதி நோக்கி பய­ண­மா­னமை குறிப்­பி­டத்­தக்­கது. இவர்­களில் 18 பேர் பெண்­க­ளாவர்.

38 பேர் உம்ரா குழுவின் வழி­காட்­டி­யான மௌலவி ஏ.சி.எம். இர்சாத் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

‘சவூதி மக்கா, மதீ­னாவில் பய­ணி­க­ளுக்குத் தேவை­யான ஹோட்டல் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு பெற்­றுத்­தந்­த­மைக்­கா­கவும் அம்ஜா டிரவல்ஸ் உரி­மை­யா­ள­ருக்கு நன்றி தெரி­விக்­கிறோம் என்றார். உம்ரா  பய­ணி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்வு பெற்றுக் கொடுப்­ப­தற்­காக அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.