ஹஜ் யாத்திரைக்கான முற்பணத்தையோ கடவுச்சீட்டுகளையோ வழங்க வேண்டாம்

முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள்

0 238

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
புதி­தாக அரச ஹஜ் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டதன் பின்பே 2023 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் முக­வர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். எனவே இவ்­வ­ருட ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக காத்­தி­ருப்­ப­வர்கள் முக­வர்­க­ளிடம் தங்கள் கட­வுச்­சீட்­டி­னையோ, பயண சீட்­டி­னையோ, பய­ணத்­துக்­கான முற்­ப­ணத்­தையோ வழங்­க­வேண்டாம் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட் ஏ.எம்.பைஸல் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்ளார். “ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பின்றி மேற்­கொள்ளும் எவ்­வித கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்கும் திணைக்­களம் பொறுப்­பேற்க மாட்­டாது எனவும் அவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில் ‘புதிய அரச ஹஜ் குழு நிய­மிக்­கப்­பட்­டதும், இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும். எனவே ஹஜ் கட­மையைத் திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அது­வரை பொறுத்­தி­ருக்­க­வேண்டும். ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டதன் பின்பே இவ்­வ­ருட ஹஜ்­கட்­டணம் பற்­றியும் தீர்­மா­னிக்­கப்­படும்.

விரைவில் அரச ஹஜ்­கு­ழு­வினை நிய­மிக்­கு­மாறு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரமநாயக்­க­விடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளேன் என்றார்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.