வளர்ப்புத் தந்தையின் வெறித்தனமான தாக்குதலில் உயிர் நீத்த சிறுவன்

முழு கிராமமும் சோகத்தில்

0 370

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கிழக்கு பிர்தௌஸ் நகரில் வசிக்கும் சிறுவன் ஒரு­வனின் கொலைச் சம்­பவம் அக் கிரா­மத்­தையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

வளர்ப்புத் தந்­தையின் வெறித்­த­ன­மான தாக்­கு­த­லுக்கு இலக்­காகி மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் 11 வய­து­டைய முகம்­மட்­ அஸ்மீர் முகம்மட் அரீப் எனும் சிறுவன் கடந்த (09) வியா­ழக்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளான்.

இந்த சம்­பவம் அக் கிரா­மத்தை மாத்­தி­ர­மல்ல பல­ரையும் கண் கலங்கச் செய்­துள்­ளது.
மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கிழக்கு பிர்தௌஸ் நகர் கிராமம் என்­பது 1985ம் ஆண்டு ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ் நிலை­யினால் மட்­டக்­க­ளப்பு கல்­லி­யன்­காடு பிர­தே­சத்­தி­லி­ருந்து இடம் பெயர்ந்த மக்கள் வசிக்­கின்ற ஒரு கிரா­ம­மாகும்.

காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட நாவற்­குடா கிழக்கு பிர்தௌஸ் நகர் கிரா­மத்தைச் சேர்ந்த இச் சிறு­வ­னுக்கு ஒரு சகோ­த­ரியும் ஒரு சகோ­த­ர­னு­முள்­ளனர்.
இந்த சிறு­வனின் தாய் தனது கண­வரை விவா­க­ரத்து செய்து விட்டு மாத்­த­ளையைச் சேர்ந்த அப்ரி அஹமட் என்­ப­வரை (வயது 28) கடந்த 2022ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தி­ருந்தார்.

இந்த தாய்க்கு முதல் திரு­ம­ணத்தில் மூன்று பிள்­ளைகள் உள்­ளனர்.
தனது புதிய கண­வ­ரிடம் தனது மூன்று பிள்­ளை­களில் குறித்த 11 வய­து­டைய மகனை கொடுத்து விட்டு வெளி­நாடு (குவைத்) சென்­றுள்ளார்.

ஏனைய இரண்டு பிள்­ளைகளில் ஒரு பெண் பிள்ளை சிறுவர் விடுதி காப்­பகம் ஒன்றில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­துடன் மற்­று­மொரு மகனை முன்னாள் கண­வரும் அவ­ரது குடும்­பத்தினரும் பொறுப்­பேற்று வளர்த்து வரு­கின்­றனர்.

இந்த நிலையில் புதிய கணவர் மேற்­படி சிறு­வனை (வளர்ப்பு மகனை) கர்­பலா கிரா­மத்­தி­லுள்ள வாடகை வீடொன்றில் வளர்த்தது வந்த நிலையில் மிக கடு­மை­யாக சிறு­வனை கடந்த திங்­கட்­கி­ழமை (06) தாக்­கி­யுள்ளார்.

படு­கா­யங்­க­ளுக்­குள்­ளான சிறுவனை மயக்கமடைந்­தி­ருந்த நிலையில் திங்­கட்­கி­ழமை மாலை காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற வளர்ப்புத் தந்தை சிறுவன் விபத்தில் விழுந்­த­தாக பொய் கூறி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ள­துடன் போலி­யான முக­வ­ரி­யொன்­றையும் கொடுத்­துள்ளார்.

உட­னேயே காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­யர்கள் சிறு­வனை மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­யுள்­ளனர். மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட சிறுவன் அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தான்.

சிறு­வனின் உடம்பில் தாக்­கப்­பட்ட பலத்த காயங்கள் காணப்­பட்­ட­தை­ய­டுத்து சந்­தேகமுற்ற வைத்­தி­ய­சாலை வைத்­தி­ய­ர்கள், சிறுவர் பிரிவு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதி­கா­ரிகள் சிறு­வனின் தந்தை மற்றும் குடும்­பத்­தி­ன­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னர். அத்துடன் வைத்­தி­ய­சாலை பொலி­சா­ருக்கும் இந்த விடயம் தெரிய வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து சிறு­வனை தாக்­கிய வளர்ப்­புத்­தந்தை (சிறு­வனின் தாயின் கணவர்) அப்ரி அஹமட் (வயது 28) காத்­தான்­குடி பொலி­சா­ரினால் செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்டார்.

இதே நேரம் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் சிறு­வனின் தந்­தை­யி­னாலும் முறைப்­பாடு ஒன்று பதிவு செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி துமிந்த நய­ண­சி­றியின் மேற்­பார்­வை­யிலும் ஆலோ­ச­னையின் பேரிலும் குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ஏ.எம்.எஸ்.ரஹீம் தலை­மையில் விசா­ர­ணைகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
சிறு­வனை தான் தாக்­கி­தாக வளர்ப்புத் தந்தை பொலி­சாரின் விசா­ர­ணையின் போது ஒப்புக் கொண்­ட­தாக காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர்.

இந்த நிலையில் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிறுவன் வியா­ழக்­கி­ழமை (09.02.2023) மாலை உயி­ரி­ழந்து விட்டார் என்ற செய்தி கிடைத்­தது.

இதை­ய­டுத்து குடும்பமும் அக்கிராமமும் பெரும் சோகத்தில் உறைந்து போனது.
சிறு­வனை தாக்­கி­ய­தாக கூறப்­படும் கர்­பலா கிரா­மத்தில் வாட­கைக்கு இருந்த உரிய வீட்­டுக்கு (10) வெள்­ளிக்­கி­ழமை காலை காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி துமிந்த நய­ண­சி­றியின் தலை­மையில் குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ஏ.எம்.எஸ்.ரஹீம் ஆகியோர் சகிதம் சென்ற மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் எஸ்.தியா­கேஸ்­வரன் அந்த வீட்­டினை பார்­வை­யிட்­ட­துடன் சம்­பவம் இடம் பெற்ற இடத்­தி­னையும் பார்­வை­யிட்ட பின்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சென்று உயி­ரி­ழந்த சிறு­வனின் சட­லத்­தையும் பார்­வை­யிட்டார். அங்கு விசா­ர­ணை­களை மேற் கொண்ட பின்னர் பிரேதப் பரி­சோ­தனைக்கு உத்­த­ர­விட்டார்.

இதன் பின்னர் உரிய இடத்­துக்கு வந்த மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி குறித்த வீட்­டையும் இடத்­தி­னையும் பார்­வை­யிட்டார்.
குறித்த வீட்­டி­லி­ருந்து உயி­ரி­ழந்த சிறு­வனின் ஆடைகள் மற்றும் தாக்­குவதற்கு பயன்படுத்தியதாக சந்­தே­கிக்­கப்­படும் குழாய் ஒன்றும் சில பொருட்­களும் இதன் போது மீட்­கப்­பட்­டன.

இங்கு பொலிஸ் தடய­வியல் குழு­வி­னரும் ஸ்தலத்­துக்கு சென்று தடய­வியல் விசா­ர­ணை­க­ளையும் மேற் கொண்­டனர்.

சிறு­வனை தாக்­கிய சந்­தேக நப­ரான குறித்த வளர்ப்பு தந்தை மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் (9.02.2022) வியா­ழக்­கி­ழமை ஆஜர்­ப­டுத்தபட்ட போது சந்­தேக நபரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் உத்­த­ர­விட்­ட­தாக காத்­தான்­குடி பொலிசார் குறிப்­பிட்­டனர்.

குறித்த சந்­தேக நபரை நீதி­மன்­றத்­துக்கு வெள்­ளிக்­கி­ழமை(10)அழைத்து வந்து சட்­ட­வைத்­திய அதி­காரி விசா­ர­ணை­களை மேற் கொள்­ளத்­தே­வை­யான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற் கொண்­ட­தாக காத்­தான்­குடி பொலிசார் குறிப்­பிட்­டனர்.

இதை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற் கொண்ட மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி சட்ட வைத்­திய நிபு­ணரின் முன்­னி­லையில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று(14) பிரேதப் பரி­சோ­த­னையை மேற் கொள்ள தீர்­மா­னித்த பின்னர் சிறு­வனின் சடலம் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­ச­ாலையின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டது. எனினும் பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நிரு­வாகம் மேற் கொண்ட முயற்­சியின் பய­னாக திங்­கட்­கி­ழமை (13.02.2023) யன்று சட்ட வைத்­திய நிபு­ணரின் முன்­னி­லையில் சட்ட வைத்­திய அதி­கா­ரி­க­ளினால் சிறு­வனின் பிரேதப் பரி­சோ­தனை மேற் கொள்­ளப்­பட்ட பின்னர் ஜனாசா சிறு­வனின் தந்தை மற்றும் அவ­ரது உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

சிறு­வனின் ஜனாசா (13) திங்­கட்­கி­ழமை மாலை பெருந்­தி­ர­ளான மக்கள் கண்ணீர் மல்க பூநொச்­சி­முனை முகைதீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வ­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

அந்தக் கிரா­மத்­தி­லுள்ள பிர்தௌஸ் பள்­ளி­வாசலில் ஜனாசா தொழு­கையும் இடம் பெற்­றது.

குறித்த இந்த சிறுவன் நடை­பெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்­சையில் 127 புள்­ளி­களை பெற்­றி­ருந்­த­தாக சிறுவன் கல்வி கற்ற பாட­சா­லையின் அதிபர் அப்துர் ரஹ்மான் தெரி­விக்­கின்றார்.

அமை­தி­யான சுபாவம் கொண்ட ஒரு சிறு­வ­னாக திகழ்ந்தார் என அதிபர் சுட்டிக் காட்­டு­கின்றார்.

இந்த சிறுவன் கல்வி கற்ற பாட­சா­லை­யான அமீர் அலி வித்­தி­யா­லத்­துக்கும் சிறுவன் கடை­சி­யாக வசித்த கர்­பலா கிரா­மத்­துக்­கு­மி­டையில் நீண்ட தூர­மாகும்.
சில நேரங்­களில் சிறுவன் கால் நடை­யா­கவும் பாட­சா­லைக்கு வந்­ததை தான் கண்­ட­தாக அதிபர் சுட்­டிக்­காட்­டு­கின்றார். எமது பாட­சா­லைக்கு பெரு­மையை தேடித் தந்த ஒரு சிறு­வனை நாங்கள் இழந்­துள்ளோம் எனவும் அதிபர் குறிப்­பிட்டார்.

இந்த சிறு­வனின் வகுப்­பா­சி­ரியர் திரு­மதி சுபா­சினி குறிப்­பி­டு­கையில், இந்த சிறுவன் அமை­தி­யா­கவே காணப்­ப­டுவார். கல்­வியை சிறப்­பாக முன்­னெ­டுத்தார்.
எனது வகுப்பு மாணவன் ஒருவன் இவ்­வாறு மர­ணித்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­யாக உள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் 27ஆம் திகதி அவ­ரது பிறந்த தினத்­துக்­காக கேக் தந்தார். சக மாண­வர்­க­ளுடன் மிகவும் ஒற்­று­மை­யாக நடந்து கொள்வார்.
ஒரு நாள் இவரில் காயம் ஒன்று காணப்­பட்­டது இந்த காயம் எப்­படி எனக் கேட்ட போது தான் விழுந்­த­தாக தெரி­வித்தார்.

இவ­ரது வள­ர்ப்பு தந்தை தன்னை கொடு­மைப்­ப­டுத்­து­கின்றார் என்று சொல்­லி­யி­ருந்தால் நான் அதனை அதி­ப­ரிடம் சொல்லி நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்பேன். ஒரு போதும் அந்த மாணவன் என்­னிடம் இது பற்றி கூறவில்லை என்று கூறி கண்ணீர் மல்­கினார்.
இந்த சிறு­வ­னது வகுப்பு நண்­பர்கள் பலரும் ஜனாசா தொழு­கை­யிலும் நல்லடக்கத்திலும் கலந்து கொண்­டனர்.

இவ்­வாறு கலந்து கொண்ட சிறு­வ­னது வகுப்பில் அருகில் இருந்த நண்பர் ஒரு­வ­ரிடம் கேட்ட போது எனது நண்பர் அரீப் என்­னுடன் தான் அதிகம் பேசுவார். வகுப்பில் எனது அருகில் இருப்­பவர்.

இவர் ஒரு நாள் என்­னிடம் கையில் சத்­தியம் செய்து கேட்டார். ஒரு விட­யத்தை சொல்வேன் ஒரு­வ­ரிடம் சொல்லக் கூடாது என்று சத்­தியம் செய்து கேட்டார்.
நானும் அவ­ரது கையில் சத்­தியம் செய்து கொடுத்தேன். பின்னர் தனது வளர்ப்பு தந்தை தன்னை அடிக்­கடி தாக்­கு­வ­தா­கவும் தன்னை இரவு நேரங்­க­ளி­லேயே தாக்­கு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

நான் ஒரு நாள் வகுப்­பா­சி­ரி­ய­ரிடம் இதைக் கூற முற்­பட்ட போது நான் இனி உன்­னுடன் பேச மாட்டேன் என்று கூறினார். அதனால் நான் இதனை ஆசி­ரி­யை­யிடம் சொல்லவில்லை என தெரி­வித்தார்.

இன்னும் சில மாண­வர்கள் தெரி­விக்­கையில், இந்த மாணவனில் சில காயங்கள் காணப்பட்டன. இந்த காயம் ஏன் வந்தது எனக் கேட்டபோது விழுந்ததினால் வந்தது எனத் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டுள்ள சிறுவன் வளர்ப்புத் தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். நீண்ட குழாய் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளான். தலையில் தாக்கியுள்ளதால் சிறுவனது சிறு நீரகம் உட்பட பல அவயங்கள் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என தெரிவித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

குறித்த வளர்ப்புத் தந்தையான சந்தேக நபர் விளக்க மறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
எதுவுமறியாத அப்பாவியான இச் சிறுவனின் பரிதாபகரமாக மரணம் மிகவும் கவலையளிக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.