கேள்­விக்­குள்­ளாகும் உள்­ளூ­ராட்சி தேர்தல்

0 324

மர்சூக் அக­மது லெவ்வை

06 இதனால் அனே­க­மான வேட்­பா­ளர்கள் தங்­க­ளு­டைய தேர்தல் பணி­களை இன்னும் ஆரம்­பிக்­காமல் இருக்­கின்­றார்கள்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவை அழைத்தும் ஜனா­தி­பதி பேசினார். அதற்கு ஆணைக்­குழு “உங்­களால் மாத்­தி­ர­மல்ல, பாரா­ளு­மன்­றத்­தினால் கூட தேர்­தலை தடுத்து நிறுத்த முடி­யாது” என்று ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்­தது. பின்னர் தேர்­தலை நிறுத்தச் சொல்லிக் கோரி நீதி­மன்றம் சென்­றார்கள். இன்னும் அந்த வழக்கு நிலு­வை­யில்தான் உள்­ளது.
இதற்கு மேலும் தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு பணம் தர முடி­யாது என்றும் டீசல் தர­மு­டி­யாது என்றும் எதிர்­கா­லத்தில்  தேர்­த­லுக்கு பல தடை­களை ஏற்­ப­டுத்­து­வார்கள் என்றும், செயற்­கை­யாக கொரோ­னாவை உண்­டாக்கி தேர்­தலைத் தள்ளிப் போடு­வார்கள் என்றும் பல கதைகள் உலா­வு­கின்­றன.

தேர்­த­லுக்­கான பணத்தை வழங்­கு­வ­தற்கு திறை­சேரி ஏன் மறுக்க வேண்டும்? நாட்­டிலே பாட­சாலை நடாத்­து­வ­தற்கு பணம் இருக்­கி­றது. வைத்­தி­ய­சாலை நடாத்­து­வ­தற்கு பணம் இருக்­கி­றது. பொலிஸ் நிலை­யங்கள் நடாத்­து­வ­தற்கு பணம் இருக்­கி­றது. துருக்கி நாட்­டிற்கு மனி­தா­பி­மான உத­விகள் செய்­வ­தற்கு பணம் இருக்­கி­றது. கப்­பல்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­காக தாமதக் கட்­டணம் செலுத்தப் பணம் இருக்­கின்­றது. சீனாவின் கழிவு உரத்தை நாட்­டிற்குள் இறக்­கா­மலே பணம் கட்­டு­வ­தற்கு நிதி இருக்­கின்­றது. நாட்­டிலே இவ்­வா­றான முக்­கியம் வாய்ந்த திணைக்­களம் மாத்­தி­ர­மல்ல, முக்­கி­ய­மற்ற திணைக்­க­ளமும் இயங்கிக் கொண்­டுதான் இருக்­கின்­றன. அது­மாத்­தி­ர­மல்ல நாட்டுப் பணத்தை களவு கொடுப்­ப­தற்கும், கோடிக்­க­ணக்­கான பணம் அர­சாங்­கத்­திடம் இருக்­கின்­றது. உதா­ர­ண­மாக சீனி இறக்­கு­மதி ஊழலே 1600 கோடி கொள்­ளை­யி­டப்­பட்­டது. திறை­சேரி முறி­யிலே 1200 கோடி கள­வா­டப்­பட்­டது. இவ்­வாறு களவு கொடுப்­ப­தற்குப் பல ஆயிரம் கோடி இருக்­கின்­றது என்றால் தேர்தல் நடாத்த மட்டும் 1000 கோடி இல்­லையா?

தற்­போது இருக்­கின்ற உள்­ளு­ராட்சி சபை­களில் அங்­கத்­தர்­களின் எண்­ணிக்கை சுமார் 8,500ஆக இருக்­கின்­றது என்று சொல்லி இத­னு­டைய செலவு அதி­க­ரித்து விட்­டது. எனவே இத­னு­டைய தொகையை 4,000 ஆக குறைக்க வேண்டும் என்று ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அது இன்னும் நடை­மு­றைக்கு வர­வில்லை. 8,500 உறுப்­பி­னர்­களின் சம்­பள விட­யங்கள் கார­ண­மாக செலவு மிகவும் அதி­க­மா­க­வுள்­ளது என்று அர­சாங்கம் கூறிக் கொண்டு அத­னு­டைய பதவிக் காலத்தை ஏன் ஒரு வருடம் நீடித்­தார்கள். உள்­ளு­ராட்சி அதி­கார சபையின் காலம் 04 வரு­டங்கள் நிறைவு பெற்­றதும், உரிய நேரத்தில் அதனைக் கலைத்­தி­ருந்தால் அநா­வ­சிய செலவு அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருக்­காது. இவ்­வாறு காலத்தை நீடித்து அநி­யா­ய­மாக கோடிக்­க­ணக்­கான பணத்தை செலவு செய்ய அர­சாங்­கத்­திடம் பணம் இருக்­கி­றது, ஆனால் தேர்தல் நடாத்த அர­சாங்­கத்­திடம் பண­மில்லை. இது என்ன விந்தை.

தேர்தல் ஆணை­யாளர் என்ற அரச அதி­காரி, அர­சாங்­கத்தை எதிர்த்து இன்று தேர்­தலை நடாத்த முன்­வந்­துள்ளார். அவ்­வாறு அரச அதி­கா­ரிகள் அர­சாங்­கத்தை எதிர்த்து நியா­யத்தைச் செய்ய முன்­வ­ரு­கின்ற போது, நாங்கள் அவர்­க­ளு­டைய துணிச்­சலைப் பாராட்ட வேண்டும். இவ்­வாறு ஒவ்­வொரு அதி­கா­ரி­களும் துணிச்­ச­லோடு முன்­வ­ரு­கின்ற போதுதான் இந்தக் கள்­வர்­க­ளி­ட­மி­ருந்து இந்த நாட்டைப் பாது­காப்­பாக மீட்­க­மு­டியும்.
தேர்தல் என்­பது ஒரு நாட்­டிற்கு அச்­சாணி போன்­றது. தேர்­த­லி­லேதான் இந்த நாட்டை ஆட்சி செய்­வ­தற்­கு­ரிய அதி­கார வர்க்கம் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றது. அதி­கார வர்க்­கத்தின் தன்­மையைப் பொறுத்தே அந்­நாடு வழி­ந­டாத்­தப்­ப­டு­கின்­றது. அதி­கார வர்க்கம் சரி­யாக இருந்­தால்தான் நாடு சரி­யாக வழி நடாத்­தப்­படும். அதி­கார வர்க்கம் கள்­வர்­களால் சூழப்­பட்­டி­ருந்தால் நாடும் கள­வா­டப்­படும்.

ஆகவே நாட்டில் உள்ள எல்லா செல­வு­க­ளையும் தவிர்த்­து­விட்டு தேர்­த­லுக்­கு­ரிய செலவை மாத்­தி­ர­மா­வது செய்ய வேண்டும். வேண்­டு­மானால் பாட­சா­லை­களை ஒரு மாதத்­திற்கு மூடி­வைப்போம். பல்­க­லைக்­க­ழ­கங்­களை சில நாட்­க­ளுக்கு மூடி­வைப்போம். வைத்­தி­ய­சா­லைக்கு வரும் நோயா­ளர்­க­ளையும் பொறு­மை­யாக இருக்கச் சொல்லி கோருவோம். இவ்­வாறு சகல செல­வு­க­ளையும் நிறுத்தி விட்டு தேர்­தலை நடாத்­துவோம். இந்தச் செல­வு­களை தடுத்து நிறுத்­தி­விட்டு தேர்தல் செலவை மாத்­திரம் செய்து தேர்­தலை நடாத்தி சரி­யா­ன­வர்­களை தெரிவு செய்யத் தவ­று­வோ­மானால் பாட­சா­லைகள் வருடக் கணக்கில் இயங்க முடி­யாத சூழ்­நிலை வரும், வைத்­தி­ய­சா­லைகள் நிரந்­த­ர­மாக இழுத்து மூட­வேண்­டிய சூழல் வரும். பொலிஸ் நிலை­யங்கள் சட்ட ஒழுங்கை நிலை­நாட்ட நிதி­யில்­லாமல் செயல் இழந்து போகும். இவ்­வ­ளவு காலமும் எமது நாட்டில் சகல நட­வ­டிக்­கை­களும் நடந்து தேர்­தலை நடாத்­து­வ­தற்குப் போதிய பணம் இருந்­தது தானே. இப்­போது தேர்­தலை நடாத்த பணம் இல்­லாமல் போத­வற்கு கார­ண­மா­ன­வர்கள் யார்? என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு ஒரு தேர்தல் இடம்­பெற்று ஆட்சி மாற்றம் ஏற்­பட்டால் மாத்­திரம் தானே இதற்குக் கார­ண­மா­ன­வர்­களை கண்­ட­றிந்து தண்­டிக்க முடியும். களவு போன பணத்தை மீட்­டெ­டுக்க முடியும்.

இன்னும் இன்னும் கள்­வர்­களே இருந்து கொண்டு தேர்தல் நடாத்த பணம் இல்­லை­யென்று சொல்லி அவர்­களே ஆண்டு கொண்­டி­ருப்­பது நியா­யமா? தேர்தல் நடாத்­தினால் மக்கள் பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­படும் என்று அச்­சு­றுத்­து­வது சரியா?
தேர்தல் கட­மை­களில் ஈடு­படும் அரச ஊழி­யர்­களின் தேர்தல் கொடுப்­ப­னவை கொடுக்கத் தேவை­யில்லை. அல்­லது அரச ஊழி­யர்கள் கொடுப்­ப­னவு இல்­லாமல் தேர்தல் கட­மை­களை புரிய முன்­வ­ரலாம். இம்­முறை வியா­ழக்­கி­ழமை அதா­வது வேலை நாட்­களில் தேர்தல் இடம்­பெ­று­வதால் தேர்தல் வேலைக்கு மேல­திக கொடுப்­ப­ன­வுகள் கொடுக்கத் தேவை­யில்லை. எனெனில் அரச ஊழி­யர்கள் தாங்கள் வழ­மை­யாக மேற்­கொள்­கின்ற கட­மை­களை நிறுத்­தி­விட்­டுத்தான் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.

தேர்தல் கட­மை­யென்­பது ஒரு அரச ஊழி­ய­ருக்கு கட்­டாயக் கடமை. தேர்தல் கட­மையை எந்த அரச ஊழி­யனும் தவிர்க்க முடி­யாது. அவ்­வாறு அரச ஊழி­யர்­க­ளுக்கு தேர்தல் கொடுப்­ப­னவு கொடுக்­கத்தான் வேண்­டு­மென்றால் அக் கொடுப்­ப­னவை உடனே கொடுக்­க­வேண்டும் என்­ப­தில்லை. அடுத்த வரு­டமோ அல்­லது அதற்­க­டுத்த வரு­டமோ அல்­லது காசு கிடைக்­கின்ற போதோ அக் கொடுப்­ப­னவை வழங்­கலாம். இதனால் தேர்தல் செலவு குறையும்.

தேர்­தலை நடத்­தாமல் விடு­வ­தற்கு உலக நாடுகள் ஒரு போதும் அனு­ம­திக்கப் போவ­தில்லை. ஐரோப்­பிய யூனியன் இதனை ஏற்­கப்­போ­வ­தில்லை. ஐ.எம்.எப். இதனை ஏற்றுக் கொள்­ளாது. ஐ.எம்.எப்.  உம் எமது இலங்கை மக்­க­ளுக்­குத்தான் உதவி செய்ய நினைக்­கின்­றது. ஐ.எம்.எப்.  இலங்கை மக்­க­ளுக்­காக செய்­ய­வி­ருக்­கின்ற உதவி இலங்­கை­யிலே ஆட்­சி­யிலே இருக்­கின்ற கொள்­ளை­யர்­களின் கைகளில் சிக்­கி­விடும் அபாயம் இருப்­ப­த­னால்தான் தேர்தல் நடை­பெற்று ஆட்சி மாற்­றத்தின் பின்பு அந்த உத­வியைச் செய்ய விரும்­பு­கின்­றது. இதற்­கெல்லாம் தேர்தல் நடை­பெ­று­வ­துதான் முக்­கியம்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரைக்கும் இந்தத் தேர்தல் நடந்­தாலும் ஒன்­றுதான், நடக்­கா­விட்­டாலும் ஒன்­றுதான். தேர்தல் நடை­பெற்றால் நாடு இருக்கும் இன்­றைய சூழலில் மொட்டுக் கட்­சி­யினர் படு­தோல்வி அடை­வார்கள். எதிர்­வரும் மார்ச்சில் ரணி­லுக்கு பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் வந்­து­விடும். மொட்டுக் கட்­சியின் உள்­ளு­ராட்சி தேர்­தலில் ஏற்­பட்ட படு­தோல்­வியைத் தொடர்ந்து ரணில் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்தால் நிச்­சயம் மொட்டுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் படு தோல்வி அடை­வார்கள்.

எனவே ரணில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பதைத் தடுப்­ப­தற்­காக ரணில் சொல்­கின்ற எந்­த­வே­லை­யையும் மொட்டுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மார்ச்­சுக்குப் பின்னர் செய்­வார்கள். தற்­போது சூழ்­நிலைக் கைதி­யாக மொட்டுக் கட்­சி­யிடம் சிறைப்­பட்­டி­ருக்கும் ரணில் அதி­லி­ருந்து விடு­பட்டு சுயா­தீ­ன­மாக செயற்­படத் தொடங்­குவார். ஏனெனில் இந்த நாட்­டிற்கு ரணிலை விட்டால் வேறு கெதி கிடை­யாது. ரணி­லுக்கு பிள்ளை குட்­டிகள் இல்லை. ரணி­லுக்கு கட்­சியும் கிடை­யாது. நாமல் ராஜ­ப­க்ஷவின் எதிர்­காலம் பாதிக்­கப்­படும் என்று மகிந்த ராஜ­பக்ஸ கவ­லைப்­பட்டு செயற்­ப­டு­வது போல ரணி­லுக்கு பிள்­ளைகள் இல்­லாத கார­ணத்­தினால் தனது பிள்­ளையின் எதிர்­காலம் பாதிக்­கப்­பட்­டு­விடும் என்று பயப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. எல்­லையே தெரி­யாத அதல பாதா­ளத்­தி­லி­ருந்து இலங்­கையை மீட்­டெ­டுப்­ப­தற்­காக வரி அதி­க­ரிப்பு உட்­பட சகல நட­வ­டிக்­கை­க­ளையும் செய்யக் கூடிய தைரியம் ரணி­லுக்கு மட்­டும்தான் உண்டு. இதனால் பல துன்­பங்­களை மக்கள் சந்­திப்­பார்கள். ஆனால் காலப்­போக்கில் நாடு பலம் பெறும். எல்­லோரும் ரணி­லுக்கு ஏசு­வார்கள். “இந்த நாட்டை உயர்ந்த இடத்­திற்கு நிச்­சயம் கொண்டு வருவேன். அதற்­காக என்னை பாராட்­ட­மாட்­டார்கள்” என்று ரணில் ஒரு தடவை சொன்னார்.

பசில் ராஜ­பக்­ஸ­வுக்கும் இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்­டிய அவ­சியம் இருக்­கின்­றது. ஏனெனில் தற்­போது மொட்டுக் கட்சி தன்­னு­டைய கையை­விட்டுப் போய்­விட்­டது என்ற கவ­லை­யோடு பசில் இருக்­கின்றார். இத் தேர்தல் நடை­பெற்றால் மொட்டுக் கட்சி தோற்கும். படு­தோல்­வி­ய­டைந்த மொட்டுக் கட்­சியை கட்­டி­யெ­ழுப்ப பசிலின் உதவி தேவைப்­படும். அப்­போது மீண்டும் மொட்டுக் கட்சி தனது கைக்குள் வந்­து­விடும் என்று பசில் எதிர்­பார்க்­கின்றார்.

கோட்­ட­பாய ராஜ­பக்ஸ அதி­கா­ரி­களின் கதை­களைக் கேட்டு செயற்­பட்­ட­தால்தான் நாடு இந்த அள­விற்கு மோச­மாகப் போனது என்று கோட்­ட­பா­யவின் தரப்பு சில நியா­யங்­களைச் சொல்­கின்­றது. அதில் ஒரு விடயம் தான் ஜனா­ஸாக்­களை எரித்­தது. சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­களின் பேச்சைக் கேட்­டுத்தான் ஜனா­ஸாக்­களை எரித்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. உலக நாடுகள் அனைத்தும் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யலாம் என்று கூறின. உலக சுகா­தார அமைப்பும் ஜனா­ஸாக்­களை விரும்­பினால் அடக்கம் செய்­யலாம் என்று கூறி­யது. இவ்­வாறு உல­கமே ஜனா­ஸாக்­களை அடக்­கலாம் என்ற போது எமது நாட்டு சுகா­தார அதி­கா­ரி­க­ளுக்கு மட்டும் ஜனாஸாக்களை எரிக்கத்தான் வேண்டும் என்று கூறும் அளவிற்கு எங்கிருந்துதான் அறிவு வந்தது என்று யோசிக்கக்கூட முடியாதளவிற்கு கோட்டாவுடைய மூளை மழுங்கடிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு கண்ணையும், மூளையையும் மூடிக் கொண்டு தனக்குக் கீழுள்ள அதிகாரிகளின் சொற்கேட்கின்ற அளவுக்குத்தான் எங்கள் ஜனாதிபதி கோட்டா இருந்தாரா? பரிதாபம்.

அண்மையில் ரணில் “பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்” என்று கூறும் போது அதைக் கேட்டுக் கொண்டு சாதுக்கள் சாதுவாக நடந்து கொள்வார்கள் என்று ரணில் எதிர்பார்த்தது ரொம்பப் பிழை. இந்த நாட்டிலே இவ்வளவு கஸ்டங்கள் வந்தபோதிலும் இன்னும் பேரினவாதம் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. இந்த நாட்டில் இன்னும் பஞ்சம் வந்து உண்பதற்கு மரவெள்ளிக் கிழங்கு மாத்திரம் இருக்கும் போது அதனை உட்கொண்டு “அநியாயமாக இவ்வளவு காலமும் மற்ற இனங்களோடு சண்டை பிடித்து சண்டை பிடித்தே இந்த நிலைக்கு வந்தோம்” என்று யோசிக்கும் போதுதான் இவர்களுக்குப் புரியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.