உடுநுவரயை உலுக்கிய மூன்று உயிரிழப்புகள்

0 330

எம்.எம்.எம். ரம்ஸீன்

வாழ்க்­கையில் மரணம் என்­பது தவிர்க்க முடி­யாத விட­ய­மா­யினும் குடும்­பத்­தினர், நண்­பர்கள் மத்­தியில் உற­வு­களின் இழப்பு தாங்­கிக்­கொள்ள முடி­யாத சோகத்தை விட்டுச் செல்­வ­துண்டு. அதிலும், இள­வ­யது மர­ணங்கள் குடும்­பங்­களில் நிரப்ப முடி­யாத வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்தி விடு­வதைக் காணலாம். எனினும், இம்­ம­ர­ணங்கள் பூமியில் வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு வாழ்­வி­யலின் பாடத்தைக் கற்­றுத்­தர தவ­று­வ­தில்லை.
கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர பகு­தியில் கடந்த இரு வாரங்­க­ளுக்குள் கோர விபத்­துக்­களால் இடம்­பெற்ற மூன்று வாலி­பர்­களின் அடுத்­த­டுத்த இழப்­புக்கள் இப்­ப­குதி மக்­களை பெரும் அதிர்ச்­சி­யிலும் சோகத்­திலும் ஆழ்த்தி விட்­டது.

உடு­நு­வர எல­மல்­தெ­னிய பகு­தியை சேர்ந்த எம்.ஐ.எம். இன்சாப் என்ற வாலிபன் பொலன்­ன­று­வையை அண்­டிய புனானை பகு­தியில் ஓட்டிச் சென்ற லொறி பஸ் வண்­டி­யொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யதில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

இச்­சம்­பவம் இடம்­பெற்று அடுத்த நாள் பெப்­ர­வரி 1 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் கம்­பளை – நாவ­லப்­பிட்டி பிர­தான வீதியில் இடம்­பெற்ற மற்றொரு கோர விபத்தில் உடு­நு­வர வெலம்­பொடை பகு­தியை சேர்ந்த 19 மற்றும் 20 வயது இளை­ஞர்கள் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தனர்.

வெலம்­பொடை பாட­சாலை வீதியை சேர்ந்த எம்.எஸ். சபீக் மற்றும் லியங்­க­ஹ­வத்தை சேர்ந்த எம்.ஜி.எம். அர்சாட் ஆகி­யோரே இவ்­வி­பத்தில் சிக்கி பலி­யா­கினர். இச்­சம்­ப­வத்தில், எம்.எஸ். சபீக் தனது தந்தை நாவ­லப்­பிட்­டியில் பணி­யாற்றும் தேயிலைத் தொழிற்­சா­லைக்கு சென்று தந்­தை­யிடம் மடிக்­க­ண­னியை கொடுத்து விட்டு நண்­ப­னான எம்.ஜி.எம். அர்­சா­துடன் மோட்டார் சைக்­கிளில் வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த போது கம்­பளை ஹெட்­காலை எனும் இடத்தில் விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

இவர்கள் இரு­வரும் பய­ணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்­டி­ருந்த வாக­ன­மொன்றை முந்திச் செல்ல முற்­பட்ட போது கம்­ப­ளையில் இருந்து நாவ­லப்­பிட்டி நோக்கி சென்று கொண்­டி­ருந்த காருடன் மோதியே விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது.

மேற்படி ­வி­பத்­துக்­களில் உயி­ரி­ழந்த எல­மல்­தெ­னிய எம்.ஐ.எம். இன்­சாபின் ஜனாஸா நல்­ல­டக்கம் வர­ஹந்­தெ­னிய ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டி­யிலும் எம்.எஸ். சபீக் மற்றும் எம்.ஜி.எம். அர்சாட் ஆகி­யோரின் ஜனாஸா நல்­ல­டக்கம் வெலம்­பொடை ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டி­யிலும் பெருந்­தி­ர­ளா­னோரின் பங்­கு­பற்­று­த­லுடன் இடம்­பெற்­றன.

முச்­சக்­க­ர­வண்­டி பள்ளிவாசலுக்கு கையளிக்கப்பட்டபோது….

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்லும் எண்­ணத்­துடன் இருந்த எம்.எஸ். சபீக்கின் முச்­சக்­க­ர­வண்­டியை அவரின் பெற்றோர் மகனின் இழப்­புக்குப் பின்னர் வெலம்­பொடை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் இயங்கும் மக்­களை வட்­டியில் இருந்து பாது­காக்கும் அழகிய கடன் திட்டத்திற்கு நிலையான தர்மமாக வழங்கியுள்ளனர். இக்கடன்திட்டம் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட வெலம்பொடை பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.