வக்பு சபையின் பதவி காலம் நிறைவடைந்தது

புதிய நியமனம் வழங்க நடவடிக்கை

0 340

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக பத­வியில் இருந்த சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பத­விக்­காலம் கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளது. இந்­நி­லையில் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் வக்பு சபைக்கு புதிய நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார்.

வக்பு சபை வர­லாற்றில் கடந்த மூன்று வருட காலத்தில் 1 ½ வரு­ட­காலம் கொவிட்நோய் பரவல் கார­ண­மாக சபை அமர்­வு­களை தொடர்ச்­சி­யாக நடத்த முடி­யாத நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தாலும் இச்­சபை 87 அமர்­வு­களை நடாத்தியுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

எமது காலத்தில் வக்பு சபை பல முன்­னேற்­ற­க­ர­மான திட்­டங்­களை வடி­வ­மைத்­தி­ருந்­தன. என்­றாலும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் சில­ரின் ஒத்­து­ழைப்பு இன்மை கார­ண­மாக அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­மற்­போ­னது. இவற்றை தற்­போது பத­வி­யேற்­றுள்ள திணை­க்க­ளத்தின் பணிப்­பாளர் நடை­மு­றைப்­ப­டுத்­துவார் என எதிர்­பார்ப்­ப­தா­கவும், ஒத்துழைப்பு வழங்கியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வக்பு சபையின் முன்னாள் தலைவர் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.