உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: பெப்.28 இல் விசாரணையை ஆரம்பிக்க தீர்மானம்

0 256

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ரான விசா­ர­ணை­களை எதிர்­வரும் 28 ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தாக சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் நேற்று (01) அறி­வித்­தது.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு இந்த குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜ மற்றும் நவ­ரத்ன மார­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே இந்த அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது.

கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், நீதி­மன்றின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பொலி­சாரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
குறிப்­பாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்த கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் மூன்றாம் தரப்­பினர் உள் நுழைய அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற செய்­தி­யா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே சோதனை செய்­யப்­பட்ட பின்­ன­ரேயே நீதி­மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந் நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­களும் நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு, போகம்­பறை உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் அவர்­களில் 24 பேர் அழைத்து வரப்­பட்­டனர்.

நேற்று, நீதி­மன்றில் ஒரு பிர­தி­வாதி ஆஜர் செய்­யப்­ப­டாத நிலையில், அவர் சுக­யீனம் கார­ண­மாக சிகிச்சை பெறு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந் நிலையில், அவர் தொடர்பில் பூரண மருத்துவ அறிக்கையை மன்றில் முன்னிலைபப்டுத்த ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையிலேயே வழக்கானது எதிர்வரும் 28 வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.