உம்ரா முகவரின் தவறால் யாத்திரிகர்கள் நிர்க்கதி

0 916

காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து உம்ரா பய­ணத்­துக்­காக உம்ரா முகவர் நிலை­ய­மொன்­றினால் அழைத்­து­வ­ரப்­பட்ட 40 உம்ரா பய­ணிகள் உம்ரா முகவர் நிலை­யத்தின் தவ­றினால் கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் தொடர்ந்தும் நிர்க்­க­திக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் தொடர்ந்தும் மாபோலை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருக்­கின்­றனர்.
குறிப்­பிட்ட 40 உம்ரா பய­ணி­களில் 12 பேர் பெண்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இவர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தியில் முகவர் நிலை­யத்­தினால் ஏமாற்­றப்­பட்டு தங்­க­ளது உம்ரா பயணம் நிறை­வே­றுமா என்ற சந்­தே­கத்தில் காத்­தி­ருக்­கின்­றனர்.

உம்ரா பய­ணி­களை நிர்க்­க­தி­யாக்­கி­யுள்ள உம்ரா முகவர் நிலையம் காத்­தான்­கு­டியைத் தள­மாகக் கொண்­ட­தாகும். பய­ணி­களை நிர்க்­க­தி­யாக்கி விட்டு முகவர் தலை­ம­றை­வா­கி­ய­தை­ய­டுத்து முகவர் நிலைய உரி­மை­யா­ளரின் மனைவி மற்றும் உற­வி­னர்கள் பய­ணி­க­ளுக்கு அவ­சி­ய­மான விமான டிக்­கட்­டு­களை ஏற்­பாடு செய்து நாளை செவ்­வாய்க்­கி­ழமை பய­ணி­களை உம்ரா கட­மைக்­காக அனுப்பி வைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக தற்­போது மாபோலை பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருக்கும் உம்ரா பய­ணி­களின் வழி­காட்­டி­யான மௌலவி இர்சாத் தெரி­வித்தார்.

சம்­பவம் அறி­விக்­கப்­பட்­டதும் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ரான மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் மாபோலை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்து நிர்க்­க­திக்­குள்­ளா­கி­யுள்ள உம்ரா பய­ணி­களைச் சந்­தித்து விப­ரங்­களை அறிந்து, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக்­கிற்கு அறி­வித்தார். பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக் இது தொடர்­பான முழு விப­ரங்­களைப் பெற்று தனக்கு அறி­விக்­கு­மாறு வேண்­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சம்­பவம் தொடர்பில் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் கருத்து தெரி­விக்­கையில்;
‘காத்­தான்­குடி, அக்­க­ரைப்­பற்று மற்றும் நிந்­தவூர் பகு­தி­க­ளி­லி­ருந்து காத்­தான்­கு­டியைச் சேர்ந்த முகவர் நிலை­ய­மொன்றின் மூலம் கடந்த வியா­ழக்­கி­ழமை உம்ரா பய­ணத்­துக்­காக 40 பேர் வருகை தந்­துள்­ளனர். அவர்கள் விமான நிலையம் சென்­ற­போதும் அவர்­க­ளுக்­கான விமான டிக்கட் முக­வ­ரினால் வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து விமான நிலை­யத்­தி­லி­ருந்து அவர்கள் திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான விமான டிக்­கட்­டுகள் மற்­றுமோர் முகவர் நிலை­யத்­தி­னா­லேயே பதிவு செய்­யப்­பட்­டது. ஆனால் காத்­தான்­குடி முகவர், டிக்­கட்­டு­க­ளுக்­கான பணத்தை டிக்கட் முக­வ­ரா­ன­வ­ருக்கு செலுத்­தா­மை­யி­னா­லேயே டிக்­கட்­டுகள் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து விமான நிலை­யத்­தி­லி­ருந்து திருப்பி அனுப்­பப்­பட்ட யாத்­தி­ரி­கர்கள் மாபோலை பள்­ளி­வா­சலில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். இவ் விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் எம்.ஆர்.எம். மலிக் முன்னாள் அமைச்­சர்கள் ஹலீம், பௌசி ஆகி­யோ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டன.

இவ்­வா­றான மோச­டி­களில் ஈடு­பட்டு பய­ணி­களை நிர்க்­க­திக்­குள்­ளாக்கும் முக­வர்கள், நிலை­யங்கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்’ என்றார்.

உம்ரா பய­ணி­களின் வழி­காட்­டி­யாக பத­வி­யேற்று வருகை தந்து தற்­போது மாபோலை பள்­ளி­வா­சலில் தங்­கி­யி­ருக்கும் மௌலவி இர்சாத் சம்­பவம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில்;

‘மாபோலை பள்­ளி­வா­சலில் தற்­போது 38 பய­ணிகள் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். 40 பேரில் இருவர் வேறு முகவர் நிலை­யத்­தி­னூ­டாக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்று விட்­டனர். கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யி­லி­ருந்து அவர்கள் சாப்­பாடு மற்றும் ஏனைய தேவை­க­ளுக்கு தமது சொந்தப் பணத்­தையே செலவு செய்து வரு­கின்­றனர். இந்தச் செல­வினை முகவர் நிலை­யமே பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும்.

நாளை செவ்­வாய்க்­கி­ழமை பய­ணிகள் அனை­வ­ரையும் உம்­ரா­வுக்கு அனுப்பி வைப்­ப­தா­கவும் அதற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தாக உம்ரா முகவர் நிலைய உரி­மை­யா­ளரின் மனைவி உட்­பட உற­வி­னர்கள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளார்கள். அது­வரை நாம் காத்­தி­ருக்­கிறோம். கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் யாத்திரிகர்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவழித்து வருகிறார்கள். இந்தப் பணத்தையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்றார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக்கை தொடர்பு கொண்டு வினவியபோது;
‘உம்ரா பயணிகளின் நிர்க்கதியான நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.