பௌசி, கமகே, மனு­ஷ­வுக்கு அமைச்சுப் பதவி வழங்கேன்

ஜனா­தி­பதி திட்­ட­வட்டம்

0 1,267

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து ஐக்­கிய தேசியக் கட்­சிக்குத் தாவிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌசி, பிய­சேன கமகே மற்றும் மனுஷ நாண­யக்­கார ஆகி­யோ­ருக்கு புதிய அமைச்­ச­ரவை நிய­ம­னத்­தின்­போது அமைச்சுப் பத­விகள் வழங்க அனு­ம­திக்­க­மாட்டேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு, மஹிந்த ராஜ­பக்­சவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைத் தொடர்ந்து ஏற்­பட்ட அர­சியல் நெருக்­கடி நிலை­மையின் போது, மேற்­படி மூன்று எம்.பி.க்களும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தனர். இந் நிலையில் தற்­போது மஹிந்த ராஜ­பக் ஷ தனது பிர­தமர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ததைத் தொடர்ந்து, ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று புதிய பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை ஐக்­கிய தேசியக் கட்சி மேற்­கொண்டு வரு­கி­றது. இதன்­போது அர­சியல் நெருக்­கடி காலத்தில் தமக்கு ஆத­ரவு வழங்­கிய மேற்­படி 3 எம்.பி.க்களுக்கும் அமைச்சுப் பத­வி­களை வழங்க ஐ.தே.கட்சி விருப்பங் கொண்­டுள்­ளது. எனினும் தனது தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்று ஐ.தே.கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்த இம் மூன்று எம்.பி.க்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்க அனுமதிக்கமாட்டேன் எனும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளதாக ஐ.தே. கட்சியின் சிரேஷ்ட அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.