­ஜனா­தி­ப­தி­யு­­டன் பேச முஸ்­லிம்கள் தயா­ரா?

0 457

நாட்டின் 75 ஆவது சுதந்­திர தினத்தை விமர்­சை­யாக கொண்­டா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கி­றது. இதற்­காக சுமார் 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இக் கால கட்­டத்தில் இவ்­வா­றா­ன­தொரு சுதந்­திர தின கொண்­டாட்டம் தேவையா என பல்­வேறு தரப்­பி­னரும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். எனினும் 75 ஆவது சுதந்­திர தினம் என்­ப­தாலும் இலங்கை சுதந்­திர தினத்தை விமர்­சை­யாக கொண்­டாடக் கூடிய இய­லு­மையைக் கொண்­டுள்­ளது என்­பதை சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காண்­பிக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வுமே இந்த ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இம்­முறை சுதந்­திர தின நிகழ்­வுகள் அதிக முக்­கி­யத்­துவம் பெறு­வ­தற்கு காரணம், 2048 ஆம் ஆண்டு கொண்­டா­டப்­ப­ட­வுள்ள 100 ஆவது சுதந்­திர தினம் வரை மாறாத அரச கொள்­கையை அமுல்­ப­டுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் புதிய சீர்­தி­ருத்த நிகழ்ச்­சித்­திட்டம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­மை­யாகும். காலத்­திற்கு காலம் மாறி மாறி ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள், தமக்கு விரும்­பி­ய­வாறு தேசிய கொள்­கை­களை மாற்றி வரு­வதன் கார­ண­மா­கவே நாடு தொடர்ந்தும் பின்­ன­டைவைச் சந்­தித்து வரு­கி­றது. இந் நிலை மாற்­றப்­பட வேண்டும். அந்த வகையில் இம்­முறை ஜனா­தி­ப­தி­யினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய கொள்­கையை ஆகக் குறைந்­தது அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்­கா­வது மாற்­ற­மு­றாது நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வர வேண்­டி­யது சகல அர­சியல் தரப்­பு­க­ளி­னதும் கடப்­பா­டாகும். அந்த வகையில் இந்த 75 ஆவது சுதந்­திர தினத்தின் பின்­ன­ரா­வது சகல தரப்­பு­களும் இது­வி­ட­யத்தில் ஒன்­று­பட்டுச் செயற்­பட வேண்டும் என வலி­யு­றுத்­து­கிறோம்.

இவ்­வ­ருட சுதந்­திர தினம் முக்­கி­யத்­துவம் பெறு­வ­தற்­கான மற்­றொரு காரணம், நாட்டில் நீண்ட கால­மாக புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முன்­னெ­டுத்து வரு­வ­தாகும். சுதந்­திர தினத்­திற்கு முன்னர் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­வைப்பேன் என அவர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். இதற்­காக சர்வ கட்சிக் கூட்­டங்­க­ளையும் நடாத்­தி­யி­ருந்தார். சுமார் மூன்று தசாப்­தங்­க­ளாக நீடிக்கும் இனப் பிரச்­சி­னைக்கு குறு­கிய கால பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்­வு­களைக் காண முடி­யாது என்ற போதிலும் ஜனா­தி­ப­தியின் இந்த முன்­ன­கர்வை பயன்­ப­டுத்தி சிறு­பான்மை மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முனை­வது காலத்தின் தேவை­யாகும்.

அந்த வகையில் தமிழ் கட்­சி­க­ளுடன் நடாத்­திய பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த ஜனா­தி­பதி இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. இது தென்­னி­லங்­கையில் சல­ச­லப்பை தோற்­று­வித்­துள்ள நிலையில், தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வுப் பொதியை எதிர்­வரும் சுதந்­திர தின உரையில் ஜனா­தி­பதி முன்­வைப்­பாரா என்­பதைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது. வடக்கு கிழக்கில் இரா­ணுவம் கைப்­பற்றி வைத்­துள்ள தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் தமிழ் கட்­சி­களால் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் எதிர்­வரும் 11 ஆம் திக­திக்குள் 100 ஏக்கர் காணி­களை விடு­விக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமையை முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு விட­யங்கள் இவ்­வா­றி­ருக்க, முஸ்லிம் சமூ­கத்­திற்­கான தீர்­வுகள் குறித்தும் தான் கவனம் செலுத்­து­வ­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார். உலமா சபையின் நூற்­றாண்டு விழாவில் உரை­யாற்­றிய அவர், முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி தீர்­வு­களை வழங்க தான் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் அது தொடர்பில் தனக்கு அறி­யத்­த­ருமாறும் உலமா சபையை முன்னிறுத்தி முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் போதுமான கலந்துரையாடல்களோ செயற்திட்டங்களோ முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் வெல்வதையே தமது பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் தேசிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­குகின்ற காணி மற்றும் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னைகள், தொல்­பொ­ருளின் பெயரால் இடம்­பெறும் ஆக்­கி­ர­மிப்­புகள், யுத்த காலத்தில் இடம்­பெற்ற கடத்­தல்கள், காணா­மல்­போ­தல்கள், படு­கொ­லைகள் என்­பன முறை­யாக தொகுக்­கப்­பட வேண்டும். அதே­போன்று யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கி­ளம்­பிய இன­வா­தத்­தினால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­குதல், வன்­மு­றை­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களைத் தண்­டித்தல் போன்ற கோரிக்­கைகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியும் நஷ்­ட­யீடும் வழங்­கப்­பட வேண்டும், எதிர்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரங்கள், வன்­மு­றைகள் தோற்றம் பெறா­த­வாறு பாது­காப்­ப­தற்­கான பொறி­முறை ஒன்­றுக்கு அர­சாங்கம் உத்­த­ர­வாதம் வழங்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்­காது அதனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முஸ்லிம்களின் சம்மதத்துடன் திருத்தம் செய்ய வேண்டும்.என்பன போன்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவேதான் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தரப்புகள் தமது வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் முன்வைக்கக் கூடிய தீர்வுப் பொதி ஒன்றை தயாரிக்க முன்வர வேண்டும். அத­னை ஜனா­தி­ப­தியிடம் கைய­ளித்து தீர்வைக் கோர வேண்டும் இதற்­கான முன்­னெ­டுப்­பு­களை விரைந்து மேற்­கொள்ள வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.