தேசிய மக்கள் சக்தியும் முஸ்லிம்களும்

0 453

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

தேர்தல் போதை­யிலே மக்கள் மயங்­கி­யுள்­ளதை தூரத்­தி­லி­ருந்தே உண­ர­மு­டி­கி­றது. அந்தத் தேர்தல் நடை­பெ­று­வதை எவ்­வா­றா­யினும் தடுக்­க­வேண்டும் என்ற எண்­ணத்தில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரும் ராஜ­தந்­தி­ரி­யு­மான கலா­நிதி ஜெய்­ஷங்கர் சுப்­பி­ர­ம­ணியம் அவிழ்த்­து­விட்ட இலங்­கைக்­கான பொரு­ளா­தார உதவிப் பட்­டி­யலும் உற்­சா­க­மான உறு­தி­மொ­ழி­களும் பொரு­ளா­தார மீட்­சி­பற்­றிய நம்­பிக்­கைக்கு பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது என்றால் அது மிகை­யா­காது.

இலங்­கையின் கடன் இறுப்பு சம்­பந்­த­மான பேச்­சு­வார்த்­தை­களில் தயக்கம் காட்­டிய சீனா­வையே விழித்­தெ­ழச்­செய்து தனக்கு இலங்கை இறுக்­க­வி­ருக்கும் கடனை இரண்­டு­ வ­ரு­டங்­க­ளுக்குத் தள்­ளிப்­போட முன்­வந்­த­மையும் அதனால் சர்­வ­தேச நாணய நிதியின் 2.9 பில்­லியன் டொலர் அவ­ச­ர­கால நிதி­யு­த­வியும் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்ற ஒரு நம்­பிக்­கையும் சுடர்­விடத் தோன்­றி­யுள்­ளது. இவை யாவும் பொரு­ளா­தார மீட்­சிக்கு அனு­கூ­ல­மாக இருப்­ப­தனால் வெண்ணெய் திரண்டு வரும்­போது தாழியை உடைக்­க­லாமா என்­ப­து­போல தேர்­தலை நடத்தி ஏன் இந்தச் சூழலைக் குலைக்­க­வேண்டும் என்ற ஒரு வாதம் வலு­வோங்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்த வாதத்தை அன்­னியச் சக்­தி­களும் சரி­கா­ணு­மானால் அடுத்த சில வாரங்­க­ளுக்குள் ஊராட்­சி­மன்றத் தேர்­தலை நிறுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம். அர­சி­யலில் சில வாரங்­க­ளென்ன, சில நாட்­களே பல வரு­டங்­க­ளுக்குச் சமன்.

இவற்­றை­யெல்லாம் மீறி தேர்­த­லொன்று நடை­பெ­று­மானால் அதை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு எதிர்­கொள்ள வேண்டும், அதிலும் முக்­கி­ய­மாக அனுர குமார திஸ­ாநா­யக்­கவின் தலை­மையில் இயங்கும் தேசிய மக்கள் சக்­தியை எவ்­வாறு முஸ்­லிம்கள் புரிந்­து­கொள்ள வேண்டும் என்­ப­ன­ பற்­றிய சில சிந்­த­னை­களை இக்­கட்­டுரை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது.

எதிர்­வரும் தேர்தல் எந்த மட்­டத்தில் நடை­பெற்­றாலும் அதன் தலை­யாய விவா­தக்­க­ரு­வாக அமை­யப்­போ­வது நாட்டின் பொரு­ளா­தார நிலை என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. இன்­றைய நெருக்­க­டியைத் தீர்த்து பொரு­ளா­தா­ரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்­டுச்­செல்ல சர்­வ­தேச நாணய நிதி வகுத்­துள்ள வழி­வ­கை­களை ஆளும் கட்­சிகள் உட்­பட அனைத்துக் கட்­சி­களும் ஏற்றுக் கொண்­டுள்­ளன என்­பதை யாவரும் உணர்தல் வேண்டும். தேசிய மக்கள் சக்­தியும் சர்­வ­தேச நாணய நிதி வகுத்­துள்ள மீட்சிப் பாதையை நிரா­க­ரிக்­க­வில்லை என்­ப­தையும் இங்கே குறிப்­பிடல் வேண்டும். அண்­மையில் நாடா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் என்ற பொறுப்பில் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்ஹ சமர்ப்­பித்து பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்ட 2023ஆம் ஆண்­டுக்­கான வர­வு­ செ­லவுத் திட்டம் சர்­வ­தேச நாணய நிதியின் நிய­தி­க­ளுக்­க­மைய தீட்­டப்­பட்ட ஓர் அறிக்கை என்­பதில் எந்தச் சந்­தே­கமும் இல்லை.

அந்த அறிக்­கையின் முக்­கிய அம்­சங்­க­ளாக சில வரி­களை உயர்த்தி, வேறு சில வரி­களைப் பர­வ­லாக்கி, அர­சாங்கச் செல­வி­னங்­களைக் குறைத்து, திற­னற்று நட்­டத்தில் இயங்கும் அர­சாங்கப் பொரு­ளா­தார நிறு­வ­னங்­களை ஒன்றில் தனியார் துறைக்கு விற்றோ அல்­லது அத­னுடன் பங்­கா­ளி­யாகச் சேர்த்தோ மாற்­றி­ய­மைத்து, பொதுத்­துறை ஊழி­யர்­களின் தொகை­யையும் பாது­காப்புத் துறை­யி­னரின் எண்­ணிக்­கை­யையும் குறைத்து, உள்­நாட்டு நாண­யத்தின் பெறு­ம­தி­யையும் சந்தைச் சக்­தி­களின் பொறுப்பில் விட்டு இறக்­கு­ம­தி­களைக் குறைத்து ஏற்­று­ம­தி­களைப் பெருக்கும் தோர­ணையில் பல நட­வ­டிக்­கைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நட­வ­டிக்­கைகள் அமு­லாகும் பட்­சத்தில் நடுத்­தர, அடித்தர வரு­மான மட்­டங்­களில் வாழும் மக்­களின் பொரு­ளா­தார நிலை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளாகும் என்­ப­து­மட்டும் உறுதி. அவர்­க­ளுக்­காக வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் சொற்ப நிவா­ர­ணங்கள் அவர்­க­ளது அவ­லத்தை நீக்கப் போ­து­மா­னதா என்­பதும் கேள்­விக்­குறி. என­வேதான் இந்த நட­வ­டிக்­கை­களை எதிர்த்து தொழிற் சங்­கங்­களும் சாதா­ரண குடி­மக்­களும் பட்­ட­தாரி மாண­வர்­களும் ஏற்­க­னவே போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர். எதிர்­பார்ப்­ப­துபோல் ஊராட்­சி­மன்றத் தேர்தல் நடை­பெ­று­மானால் இந்தக் கிளர்ச்சி கல­வ­ரங்­களை உண்­டாக்கி நாட்டின் அமை­தி­யையும் குலைக்­கலாம். ஆனால், அந்தத் தேர்தல் ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­ஹவின் ஆட்­சிக்கும் அவ­ரது அர­சாங்­கத்தின் செல்­வாக்­குக்கும் பாத­க­மாக அமையும் என்­ப­தையே கருத்துக் கணிப்­புகள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

ஜனா­தி­ப­தியின் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அது கூட்­டணி சேர்ந்­துள்ள ராஜ­பக்­சவின் மொட்­டுக்­கட்­சியும் ஊராட்­சி­மன்றத் தேர்­தலில் படு­தோல்வி அடை­யு­மானால் அவை நாடா­ளு­மன்­றத்தில் தொடர்ந்தும் ஆட்­சியில் இருப்­பதை மக்கள் சரி­காணார். ஆகவே விரைவில் பொதுத் தேர்­தலும் அதற்கு முன்­னரோ பின்­னரோ ஜனா­தி­பதித் தேர்­தலும் நடை­பெறும் சாத்­தி­யங்கள் அதி­க­ரிக்கும்.

அவ்­வாறு பொதுத் தேர்தல் ஒன்று நடை­பெறும் பட்­சத்தில் வாக்­கா­ளர்கள் எந்தக் கட்­சிக்கு அல்­லது கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­ப­துதான் சிந்­திக்­கப்­பட வேண்­டிய ஒரு விடயம். பின்­வரும் சிந்­த­னைகள் முஸ்லிம் சமூ­கத்தை முன்­னி­றுத்தி சமர்ப்­பிக்­க­ப்ப­டு­வ­ன­வாகும். இவற்றை முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­க­ளா­வது கரி­ச­னையிற் கொள்­ள­வேண்டும் என்­பதே இக்­கட்­டு­ரை­யா­ளரின் அவா.

ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டி­யது போன்று எந்­தக்­கட்சி அல்­லது கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தாலும் சர்­வ­தேச நாணய நிதியின் பொரு­ளா­தாரக் கட்­டுப்­பா­டு­களை மீற முடி­யாது. அவ்­வாறு மீறினால் நிதி­யு­த­விகள் தடைப்­படும். எனவே எந்­தக்­கட்சி அல்­லது கூட்­டணி நாணய நிதிக் கட்­டுப்­பா­டு­களின் மத்­தி­யிலும் மக்­களின் கஷ்­டங்­களை இல­கு­வாக்­கவும், அதே­வேளை நாட்டின் நீண்­ட­கால சுபீட்­சத்­துக்கு வழி­ச­மைக்­கவும், பல்­லின மக்­களின் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்குப் பாது­காப்­ப­ளித்து அர­சாங்­கங்­களின் அத்­து­மீ­றல்­க­ளுக்குத் தடை­போ­டவும், சந்தைச் சக்­தி­களை மக்கள் நலன் ­க­ருதி இயங்கச் செய்­யவும், இன நல்­லி­ணக்­கத்­துக்கு வழி­கோ­லவும், இவற்­றை­யெல்லாம் உள்­ள­டக்­கி­ய­வாறு நாட்டின் அர­சியல் யாப்­பினை மாற்­றி­ய­மைக்­கவும், எல்­லா­வற்­றுக்கும் மேலாக செயற்­றி­றனும் கல்­வித்­த­ரமும் உள்ள ஒரு செய­ல­ணி­யையும் கொண்­டுள்­ளதோ அந்தக் கட்­சிக்கே அல்­லது கூட்­ட­ணிக்கே மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும். ஏனெனில் மேலே கூறப்­பட்­டுள்ள அனைத்­தையும் அமு­லாக்­கி­னா­லன்றி இந்த நாட்டை எழு­பத்­தைந்து ஆண்­டு­க­ளாகச் சீர­ழித்­து­வ­ரு­கின்ற அமைப்பை மாற்ற முடி­யாது. அந்த அமைப்பு மாறாமல் ஆட்­சி­யா­ளர்­களை மட்டும் மாற்­று­வதால் எந்தப் பயனும் இல்லை. இது வர­லாறு புகட்டும் பாடம்.
இவற்­றை­யெல்லாம் செயற்­ப­டுத்­தக்­கூ­டிய திட்­டங்­களும் தகை­மை­களும் தேசிய மக்கள் சக்­தி­யி­டமே உண்­டென்­பதை ஒழி­வு­ம­றை­வின்றி இக்­கட்­டுரை முன்­வைக்­கி­றது. இதுவும் ஒரு கூட்­டணி என்­ப­தையும் மறைக்­க­வில்லை. ஆனால் அந்தக் கூட்­டணி தேர்­த­லைக்­க­ருதி ஏற்­பட்­ட­தொன்­றல்ல. மாறாக அர­சியல் பொரு­ளா­தார சமூகத் தத்­து­வங்­களின் அடிப்­ப­டையில் உரு­வா­ன­தொன்று. இன, மத, மொழி பேதங்­க­ளுக்­கப்பால் நின்று இந்த நாட்டின் இறை­மை­யையும் எதிர்­காலச் சந்­த­தி­களின் நல்­வாழ்­வையும் நாட்­டுக்கே சொந்­த­மான வளங்­களைப் பாதுகாத்து அவற்றை விருத்தி செய்­வ­தையும் மையக்­க­ருத்­தாகக் கொண்டு அமைக்­கப்­பட்ட கூட்­ட­ணியே இது.

ஆனாலும் இக்­கூட்­ட­ணி­ பற்­றிய சில விஷ­மப்­பி­ரச்­சா­ரங்­களும் உண்டு. முக்­கி­ய­மாக, அதன் தலைவர் அனுர குமார திஸ­ாநா­யக்க தேசிய விடு­தலை முன்­ன­ணியின் முன்னை நாள் தலைவர் ரோஹண விஜ­ய­வீ­ரவின் அடி­வ­ருடி என்றும் அவ­ரு­டைய கட்சி இன­வாதக் கட்சி என்றும் அதன் அங்­கத்­த­வர்கள் வெளி­நாட்டு இடது சாரி­க­ளுக்கு இலங்­கையில் குடை­பி­டிக்கும் பிர­தி­நி­திகள் என்றும் இங்­குள்ள பிற்­போக்­கு­வாதக் குழுக்­களும் அவற்றின் பிரச்­சார ஏடு­களும் செய்தி நிறு­வ­னங்­களும் ஒப்­பாரி வைக்­கின்­றன. முத­லா­வ­தாக, ரோஹண ஆயு­தப்­போராட்டத்தில் இறங்­கி­ய­போது அனு­ர­வுக்கு வயது இரண்டு. அவ­ரு­டைய கட்சி அங்­கத்­த­வர்­களில் பெரும்­பா­லானோர் பிறந்­தி­ருக்­க­வு­மில்லை. இரண்­டா­வ­தாக, இப்­பி­ரச்­சாரம் இன்று நேற்று ஆரம்­பித்த ஒன்­றல்ல. 1950களி­லி­ருந்தே அப்­போ­தி­ருந்த இட­து­சாரிக் கட்­சி­க­ளுக்­கெ­தி­ராக அவிழ்த்­து­வி­டப்­பட்ட ஒரு புராணம். அந்தப் புரா­ணத்தை நம்பி பிற்­போக்­கு­வா­தி­க­ளுக்கு வாக்­க­ளித்­தோருள் முஸ்­லிம்­களும் அடங்­குவர்.

உண்மை என்­ன­வெனின் தேசிய மக்கள் சக்தி உல­க­ளா­விய ரீதியில் வளர்­ந­்து­வரும் ஓர் இளைய தலை­மு­றையின் இலங்கைக் குடும்பம். இந்தக் குடும்பம் வெளிப்­ப­டை­யாக தமது பெற்­றோ­ருக்கும் உற­வி­ன­ருக்கும் நண்­பர்­க­ளுக்கும் சொல்­லத்­த­வ­றிய உண்­மை­யைத்தான் கடந்த வருடம் காலி­மு­கத்­தி­ட­லிலே குழு­மிய அந்த இள­வல்கள் “அமைப்பை மாற்று” என்ற கோஷத்தின் மூலம் அறி­வித்­தனர். அதனை மாற்­று­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்தில் அமர்ந்­தி­ருக்கும் அநே­க­ருக்குச் சக்­தி­யு­மில்லை விருப்­ப­மு­மில்லை என்­ப­தா­லேதான் ”225 வேண்டாம்” என்ற இன்­னொரு கோஷத்­தையும் எழுப்­பினர். அதன்­பி­றகு என்ன நடந்­தது என்­பதை யாவரும் அறிவர்.

அந்த இள­வல்­களின் அறை­கூ­வலால் உரு­வா­னதே இன்­றைய தேசிய மக்கள் சக்திக் கூட்­டணி. இந்த நாட்டில் மனித உரி­மைகள் பாது­காக்­கப்­பட்டு ஜன­நா­யக சுதந்­தி­ரங்­க­ளுடன் யாவரும் சட்­டத்தின் முன் சமம் என்ற அடிப்­ப­டையில் ஆட்சி அமைக்­கப்­பட்டு, தேசிய அடை­யா­ளத்­து­ட­னான இன­ நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி, நுகர்வோர் நலனை மைய­மா­கக்­கொண்டு சந்தைச் சக்­தி­களை இயங்­கு­மாறு செய்து, பொதுத்­து­றையின் பொரு­ளா­தார நிறு­வ­னங்­களை தனியார் துறை­யுடன் போட்­டி­போட்டு வள­ரக்­கூ­டி­ய­வாறு மாற்­றி­ய­மைத்து, இரு ­து­றை­களும் இணைந்த செழிப்­பா­னதொரு பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெழுப்­பக்­கூ­டிய வல்­லமை இந்தக் கூட்­ட­ணி­யி­ன­ரி­டமே உண்டு. அவ்­வா­றான ஓர் அமைப்­பிலும் ஆட்­சி­யி­லுமே முஸ்லிம் சமூ­கமும் இதர சிறு­பான்மை இனங்­களும் இந்த நாட்டில் கௌர­வத்­து­டனும் அமை­தி­யு­டனும் வாழலாம்.

ஆனால் இந்தச் சக்தி எதிர்­வரும் தேர்­தல்­களில் வெற்­றி­வாகை சூடுமா என்­பதே இன்­றைய முக்­கிய கேள்வி. சுதந்­திரம் கிடைத்­த ­பின்னர் இலங்­கையின் வாக்­கா­ளர்கள் பல முறை அர­சாங்­கங்­களை மாற்­றி­யுள்­ளார்­க­ளெ­னினும் அவர்கள் அறி­வு ­ரீ­தி­யா­கவும் தர்க்­க ­ரீ­தி­யா­கவும் வேட்­பா­ளர்­களின் கொள்­கை­க­ளையும் பிரச்­சா­ரங்­க­ளையும் விளங்கி வாக்­க­ளித்­தார்­களா என்றால் இல்லை என்­றுதான் கூற­வேண்டும். இதற்கு முஸ்­லிம்­களும் விதி­வி­லக்­கல்ல. இன்று கூட பணத்­துக்கும் மது­வுக்கும் பத­விக்கும் சலு­கைக்கும் தலை­வ­ணங்கி, இன­வெ­றிக்கும் மத­வெ­றிக்கும் ஆளாகி வாக்­க­ளிக்கும் கூட்­டத்­தி­ன­ரையே பெரிதும் காண்­கிறோம். அந்தக் கவர்ச்­சி­களே மீண்டும் எதிர்­வரும் தேர்­த­லிலும் வாக்­கா­ளர்­களைக் கவரும் என எதிர்­பார்ப்­ப­திலும் தவ­றில்லை. முஸ்­லிம்­களின் தேர்தல் பிரச்­சார மேடை­களும் வழ­மை­போன்று ஹதீஸ் மஜ்­லி­சு­க­ளாக மாறும் என்­ப­திலும் ஐய­மில்லை. ஆனால் அர­க­லய இளைஞர் எழுச்­சியின் பின்பு ஒரு புதிய சந்­த­தியின் வாக்­கா­ளர்கள் இதற்கோர் விதி­வி­லக்காய் அமை­யலாம்.

குடி­சனக் கணக்­கெ­டுப்­பின்­படி வாக்­காளர் பட்­டி­யலில் பெரும்­பா­லா­ன­வர்கள் 40 வய­துக்குக் குறைந்­த­வர்­களே. இவர்கள் தமது மூத்த தலை­மு­றை­யி­னரைப் போலன்றி கல்­வி­யிலும், அர­சியல் விழிப்­பு­ணர்­விலும் தேர்ச்­சி­பெற்று, இலத்­திரன் கரு­வி­களின் பாவ­னை­யிலே பரிச்­ச­ய­மாகி, உல­க­ளா­விய ரீதியில் நட்­பு­களை வளர்த்து, எதையும் ஏன் எதற்­காக என்று யதார்த்­த­பூர்­வ­மாக ஆராயும் சக்தி உள்­ள­வர்­களாய் வளர்ந்­துள்­ளனர். இலங்­கையின் எல்லாத் தேர்தல் தொகு­தி­க­ளிலும் வெற்றி தோல்­வியைத் தீர்­மா­னிக்கும் வல்­லமை இவ்­விளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு உண்டு. அவர்­களின் குழுவே காலி­மு­கத்­தி­ட­லிலே திரண்டு பல அர­சியல் மாற்­றங்­க­ளுக்கு வழி­வ­குத்­தனர். எனவே எதிர்­வரும் தேர்­தலில் இவர்­களே முடி­வினைத் தீர்­மா­னிப்பர் என்­பதில் ஐய­மில்லை. ஆகவே இந்தச் சந்­த­தியின் விழிப்­பி­லேதான் தனது வெற்­றியை அடை­மானம் வைத்­துள்­ளது தேசிய மக்கள் சக்தி என்றால் அது மிகை­யா­காது.

இந்தத் தேசிய அலை­யுடன் முஸ்லிம் சமூகம் சேர்ந்து நீந்திப் பாது­காப்­புடன் கரைசேர்ந்து சுபீட்­ச­மான ஓர் எதிர்­கா­லத்தை நாட்­டுக்­கா­கவும் தமக்­கா­கவும் சமைப்­பதா அல்­லது வழ­மை­போன்று ஆஷா­ட­பூதி அர­சி­யல்­வா­தி­களின் இன மத­வா­தங்­களில் மயங்கி அவர்­களின் சன்­மா­னங்­க­ளையும் வெறும் உறுதிமொழிகளையும் நம்பி வாக்களித்து ஏமாந்து கைசேதப்படுவதா என்பதே முஸ்லிம் வாக்காளர்களை எதிர்நோக்கும் இன்றைய பிரச்சினை.

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும், இந்திய முஸ்லிம்களும் அது போன்று உதவவேண்டும் என்று அறிக்கை விடுவதும், இலங்கையின் பொருளாதாரக் கஷ்டங்கள் தீர்வதற்காக துஆப் பிரார்த்தனை செய்வதும், மனத்திருப்திக்காகவும் விளம்பரத்துக்காகவும் செய்யப்படுவன. அவை மட்டும் முஸ்லிம் சமூகத்தை நாட்டின் உயிரோட்டமுள்ள ஒரு சமூகமாக மாற்றுவதற்குப் போதுமானவை அல்ல.
அமைப்பு மாற்­றத்தின் அவ­சி­யத்­தைப்­பற்­றிய அறிவு சாதா­ரண முஸ்லிம் வாக்­கா­ளர்­க­ளுக்குக் கிடை­யாது. அதனை விளக்­க­வேண்­டி­யது முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் தலை­யாய கடமை. அந்த விழிப்­பு­ணர்வுப் பிரச்­சாரம் நடை­பெ­று­வதை தூரத்­தி­லி­ருந்து பார்க்க முடி­ய­வில்லை. அந்த அமைப்பை மாற்­றக்­கூ­டிய ஒரு திட்­ட­வ­ரைவு இன்­றைய அர­சியல் கூட்­ட­ணி­க­ளுக்குள் தேசிய மக்கள் சக்­தி­யி­டமே உண்டு.

இறு­தி­யாக, இந்தச் சிந்­த­னைகள் தூரத்­துப்­பார்­வை­யிலே தோன்­றி­யவை என்றும், களத்­திலே நின்று பார்த்தால் அவை பொருந்­தா­தவை என்றும், இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உத­வாது என்றும் குரல்கள் எழு­வது நிச்­சயம். ஆனால் தூரத்­துப்­பார்­வை­யி­லேதான் நிதர்­சனம் உண்டு. களத்­திலே நின்று பார்க்­கும்­போது சூழலின் தாக்கம் சிந்­த­னையை பாதிக்­கக்­கூ­டிய சாத்­தியம் உண்­டென்­பதால் அதி­லி­ருந்து சிந்தனை கும்பலுக்குள் கோவிந்தா என்ற கதையாய் மாறிவிடலாம் என்பதை உணர்தல் நல்லது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.