உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி கூற வந்தது என்ன?

0 434

நவாஸ் முஹம்மத்

அண்­மையில் இடம்­பெற்ற அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் 100 வருட பூர்த்தியைக் கொண்­டா­டு­கின்ற நிகழ்வில் பங்­கு­பற்றக் கிடைத்­தது. இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்ட ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மிக முக்­கி­ய­மா­ன­தொரு உரையை முஸ்லிம் சமூ­கத்தை விளித்து ஆற்­றி­யி­ருந்தார். இந் நிகழ்வில் ஆயிரக் கணக்­கான உல­மாக்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந் நிகழ்வில் பங்­கு­பற்­றிய முஸ்­லிம்­களை அதி­க­மாகக் கொண்­ட­தொரு ஊரின் உலமா சபை கிளைத் தலை­வ­ரையும் அதே ஊரைச் சேர்ந்த சமூகப் பிர­முகர் ஒரு­வ­ரையும் நான் சந்­தித்­த­போது அந்த நிகழ்வில் கலந்­து­கொண்ட அனு­ப­வத்தைப் பற்றிக் கேட்டேன்.
இதன்­போது அவர்கள் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­வரும் ஜனா­தி­ப­தியும் ஆற்­றிய உரைகள் மிகச் சிறப்­பாக அமைந்­தி­ருந்­த­தாக குறிப்­பிட்­டார்கள். இவ்­வாறு அவர்கள் கூறி­ய­போது அவர்­க­ளு­டைய முகங்­க­ளிலே மிகவும் பிர­கா­ச­மான, மகிழ்ச்­சி­யான அறி­கு­றிகள் தெரிந்­ததை அவ­தா­னித்தேன். ஆனாலும் அவர்கள் ஜனா­தி­பதி கூற வந்த விட­யத்தை சரி­வரப் புரிந்து கொள்­ள­வில்லை என்­பதையும் அவர்­க­ளு­ட­னான உரை­யாடல் மூலம் நான் புரிந்து கொண்டேன். இது எனக்கு மிகுந்த கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யது. அந்த நிகழ்­விலே மேற்­படி இரு முக்­கி­யஸ்­தர்­க­ளது உரை­களும் ஆங்­கி­லத்­தி­லேயே ஆற்­றப்­பட்­டன. இதனை விளங்கிக் கொள்ள அவர்­க­ளுக்கு வாய்ப்­பி­ருக்­க­வில்லை என்­பது எனக்கு தெளி­வாக விளங்­கி­யது.

ஜனா­தி­பதி அங்கு ஆற்­றிய உரை மிக முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தி­ருந்­தது. காரணம் இவ்­வா­றான ஒரு நிகழ்­விலே அவ்­வா­றான பங்­கு­பற்­று­னர்­க­ளுக்கு மத்­தியில் ஜனா­தி­பதி ஆற்­றிய உரை­யினை அர­சாங்­கத்­தி­னு­டைய கொள்கை உரை­யா­கவே (Policy Statement) முஸ்லிம் சமூ­கமும் ஜம்­இய்­யத்துல் உல­மாவும் நோக்க வேண்டும் என்­பது என்­னு­டைய அபிப்­பி­ரா­ய­மாகும். எனவே ஜனா­தி­பதி ஆற்­றிய உரை­யினை முஸ்லிம் சமூகம் தெளி­வாக விளங்­கிக்­கொள்­வது முக்­கியம் என்று நான் கரு­து­கிறேன். நான் இங்கு விளங்கிக் கொள்­வது என்று சொல்­வதன் அர்த்தம் அந்த பேச்­சி­னு­டைய தமிழ் மொழிப்­பெ­யர்ப்பை வாசிப்­பது என்­பது அல்ல. அதற்கு அப்பால் சென்று அவர் சொல்ல வரும் செய்­தியை, அதில் இருக்­கின்ற ஆழ­மான கருத்­துக்­களை புரிந்து கொண்டு அவற்றை நாங்கள் எங்­க­ளது திட்­டங்­களில், கொள்­கை­களில், செயற்­பா­டு­களில் நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரு­வதைப் பற்றி சிந்­திப்­பது காலத்தின் கட்­டாய கடமை என்று கரு­து­கிறேன். அந்த விட­யங்­களைப் பற்­றிய ஒரு சிறு குறிப்­பைத்தான் இந்த கட்­டு­ரை­யிலே குறிப்­பிட விரும்­பு­கிறேன். (ஜனா­தி­ப­தி­யி­னு­டைய ஆங்­கில உரையின் தமிழ் மொழி­பெ­யர்ப்­பினை கடந்த வார விடிவெள்ளி பத்­தி­ரி­கையில் பார்க்­கலாம்)

ஜனா­தி­பதி தனது உரையில் கூறிய கருத்­துக்கள் சரியா? பிழையா? அதனை முஸ்­லிம்கள் ஏற்­றுக்­கொண்­டார்­களா? என்­பதை பற்­றிய ஒரு அல­சலை நான் இங்கு செய்ய முயற்­சிக்­க­வில்லை. மாறாக அவர் சொல்ல வந்த கருத்­துக்­களைப் பற்­றிய ஒரு தெளி­வினை வழங்­கவே முயற்­சிக்­கிறேன். இதிலே இன்­னொரு விட­யமும் முக்­கி­ய­மா­னது. எந்­த­வொரு உரை­யி­னையும் முக்­கி­ய­மா­ன­வர்கள் ஆற்­று­கின்­ற­போது அத­னு­டைய தொனி முக்­கி­ய­மா­னது. ஜனா­தி­ப­தி­யி­னு­டைய உரையைக் கூர்ந்து அவ­தா­னிக்­கின்ற போது, இரண்டு முக்­கி­ய­மான தொனிகள் பரி­ண­மித்­ததை காணக் கூடி­ய­தாக இருந்­தது.
ஒரு புறம் முஸ்லிம் சமூ­கத்தின் நல்ல விட­யங்­களை பாராட்­டு­கின்ற அல்­லது மெச்­சு­கின்ற வகை­யிலும் மறு­பு­றத்­திலே சமூ­கத்­திலே இருக்­கின்ற சவால்­களை கவ­ன­மாகச் சுட்டிக் காட்டி அதனை சரி செய்து கொள்­வ­தற்­கான வழி­காட்­டல்­களை வழங்­கு­வ­தா­கவும் அந்த உரை அமைந்­தி­ருந்­தது. அதன் மூல­மா­கத்தான் சமூ­கத்­தி­னது எதிர்­கா­லமும் நாட்­டி­னது எதிர்­கா­லமும் நல்­ல­மு­றை­யிலே அமைய முடியும் என்ற ஒரு தொனி அதில் வெளிப்­பட்­டது.

ஜனா­தி­பதி தனது உரை­யிலே முன்­வைத்­த முதன்­மை­யான விடயம், அனைத்து சமய மக்­களும் உண்­மை­யான இலங்­கை­யர்­க­ளாக மாற வேண்டும் என்ற வேண்­டு­கோ­ளாகும். இரண்­டா­வ­தாக அனைத்து சமூ­கங்­களும் வேறு­பா­டு­களை புறந்­தள்ளி ஒன்­று­பட்டு ஒரு நாட்டு மக்­க­ளாக வாழ­வேண்­டிய தேவையை அவர் வலி­யு­றுத்­தினார். அத்­தோடு சமூக நீதி தொடர்­பான ஓர் ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என்றும் அந்த ஆணைக்­கு­ழுவில் அனைத்து சமூ­கங்­களும் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கமும் இணைந்து பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்றும் கேட்­டுக்­கொண்டார். அடுத்த­தாக எந்த சம­யமும் தன்னைப் பின்­பற்றும் மக்­களை, மாறி­வ­ரு­கின்ற நவீன உல­குடன் வாழ்­வ­தற்கு தேவை­யான வழி­காட்­டல்­களை வழங்­க­வேண்டும், இதில் இருந்து எந்­த­வொரு சம­யமும் தப்­பி­வி­ட­மு­டி­யாது என்­பதை அவர் வலி­யு­றுத்­தினார்.

அடுத்­த­தாக சம­யங்­களின் நம்­பிக்­கைகள் வேறு­பட்­டாலும் எந்­த­வொரு சம­யமும் வன்­மு­றையை ஊக்­கு­விக்­காது, ஊக்­கு­விக்கக் கூடாது என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார். மேலும் சுதந்­திர இலங்­கையின் கடந்த 75 வரு­டங்­களில் சமூ­கங்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டுகள் நிலவி வந்­தன. எதிர்­வ­ரு­கின்ற சுதந்­திர தினத்­தி­லி­ருந்து அந்த முரண்­பா­டு­களைக் களைந்து மீண்டும் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்ற செய்­தி­யையும் ஜனா­தி­பதி தன­து­ரையில் கூறி­யி­ருந்தார்.
இதிலே அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எத்­தி­வைத்த பின்­வரும் விட­யங்­களை ஆழ­மாக சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன்.

முத­லா­வது விடயம், மாறி­வ­ரு­கின்ற நவீன உல­கத்­தோடு, இலங்கை முஸ்­லிம்­களை இணைப்­ப­தற்கு இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள், உலமா சபை போன்­ற­வர்கள் பங்­க­ளிப்புச் செய்­ய­வேண்டும் என்ற கருத்தை அவர் பிர­தா­ன­மாக வலி­யு­றுத்­தினார். “1922 ஆம் ஆண்­ட­ள­விலே முதலாம் உலக மகா யுத்­தத்தின் பின்னர் உலகம் பெரும் மாற்­றங்­களை எதிர்­நோக்­கி­ய­போது இஸ்­லா­மிய உல­கத்­திலே இருந்த கிலாபத் ஆட்சி முடி­வுக்கு வந்­தது. அச் சந்­தர்ப்­பத்­திலே அதற்­கான மாற்­றீ­டு­களை பல பாகங்­க­ளிலும் இஸ்­லா­மிய உலகம் ஏற்­ப­டுத்­திக்­கொண்டு வந்­தது. இந்­தி­யா­விலும் இதற்­கான பெரும் முயற்­சிகள் இடம்­பெற்ற அக்­காலப் பகு­தி­யில்தான் இலங்­கை­யிலும் உலமா சபை உரு­வாக்­கப்­பட்­டது. மத சாச­னத்­திலே (இறை­யியல்) உடன்­பட்­ட­வர்­க­ளால் அந்த அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் இறை­யியல் தொடர்­பான மாற்­றுக்­க­ருத்­துக்கள், விவா­தங்கள், வேறு­பா­டுகள் தொடர்ந்து கொண்டே இருந்­தது. இந்த சவால்கள், இந்த விவா­தங்கள் இன்றும் தொடர்­கின்­றன.

ஆனால் நாம் இன்று மிகவும் வித்­தி­யா­ச­மான உல­கிலே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். அதா­வது அன்று இருந்த உல­கத்­தை­விட வேறு­பட்ட உல­கமே இன்­றுள்­ளது. அன்று இல்­லாத 150 புதிய நாடுகள் இன்று உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. அன்று நினைத்­துக்­கூட பார்க்க முடி­யாத அளவு விஞ்­ஞானம், தொழி­னுட்பம் இன்று முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. என்­று­மில்­லா­த­வாறு இன்று உலகம் முழு­வதும் அர­சியல் உரி­மைகள் மற்றும் ஏனைய உரி­மைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அடிப்­படை மனித உரி­மை­க­ளாக பார்க்­கப்­ப­டு­கின்­றன.’’

இந்த பின்­ன­ணி­யிலே தான் நாங்கள் இலங்கை முஸ்­லிம்­களின் எதிர்­கா­லத்தைப் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. எதிர்­கா­லத்தை வழி­ந­டத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதிலே எல்லா சம­யங்­க­ளுக்கும் ஒரு சமய அடிப்­படை, கொள்கை, நம்­பிக்கை இருக்கும். அது என்ன என்­பதில் நமக்கு தெளி­வி­ருக்க வேண்டும். இரண்­டா­வது எங்­க­ளது சம­யத்­தி­னு­டைய தூய அர்த்தம் என்ன? என்­பது தொடர்­பான அடிப்­ப­டை­யையும் விளங்­கி­யி­ருத்தல் முக்­கியம். ஆனால் மாறி­வ­ரு­கின்ற நவீ­னத்­து­வத்­துடன் எப்­படி இதனைத் தொடர்­பு­ப­டுத்­து­வது என்ற கேள்­விக்கு விடை காணப்­பட வேண்டும். நாங்கள் இஸ்லாம் மார்க்­கத்தைப் பின்­பற்­று­கின்­ற­வர்கள் என்ற வகையில் அந்த வழி­காட்­டலை வழங்­கு­கின்ற பொறுப்பு இருக்­கி­றது. அந்த வழி­காட்டல் வழங்­கப்­ப­டாமல் எங்­களால் முன்­னோக்கிச் செல்­ல­மு­டி­யாத ஒரு சூழ்நிலை இருக்­கி­றது.

சம­யங்கள் பின்­னோக்கிப் போக முடி­யாது. சம­யங்­களின் அடிப்­ப­டைகள் எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்றால் கடந்த காலம், நிகழ்­காலம் மற்றும் எதிர்­கா­லங்­க­ளுக்கு பொருத்­த­மாக பாவிக்­கப்­படக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். இது எல்லா சம­யங்­க­ளுக்கும் பொருந்தும் எனக் கரு­து­கிறேன். உதா­ர­ண­மாக பௌத்த சம­யத்தை குறிப்­பிட்டுக் காட்­டலாம். இந்­தி­யா­விலே ஒரு விவ­சாய நீர்ப்­பா­சன அடிப்­படை இல்­லாத நாக­ரி­கத்­திலே உரு­வான புத்­த­ச­மயம் இலங்­கைக்கு வந்த பொழுது முழு­மை­யாக இங்கு ஒரு விவ­சாய நீர்ப்­பா­சன நாக­ரீ­கத்­திற்கு ஏற்­ற­வாறு தன்னை ஒழுங்­கு­ப­டுத்­திக்­கொண்­டது. அதற்கு உரி­ய­வாறு தன்னை மாற்­றிக்­கொண்­டது. இது ஒரு உதா­ரணம்.

இதே போன்று நாங்கள் எப்­பொ­ழுதும் நிகழ்­கா­லத்­திலே வாழ்ந்து கொண்டு எதிர்­கா­லத்தைப் பார்க்க வேண்டும். கடந்த காலத்­திலே வாழ்ந்து கொண்டு எதிர்­கா­லத்தைப் பார்க்க முடி­யாது. இந்த அடிப்­ப­டை­களை வழி­ந­டத்­து­கின்ற பொறுப்பு முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கு, இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளுக்கு உள்­ளது. இதன் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்­டிய இன்­னொரு அடிப்­ப­டையும் இருக்­கி­றது. அதா­வது எங்­க­ளு­டைய கடந்த காலம் எங்­க­ளுக்கு ஏனைய சம­யங்­க­ளுடன் வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது. இதற்கு இஸ்­லாத்­தி­லேயே சிறந்த உதா­ரணம் இருக்­கி­றது. அதா­வது யூதர்­களும் கிறிஸ்­த­வர்­களும் பின்­பற்­றிய சம­யத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்­பற்­றி­னார்கள். ஆனால் அவர் அதனை வெறுப்­பு­ணர்­வோடு பார்க்­க­வில்லை. அவர்கள் அந்த சம­யத்தை முன்­னெ­டுத்துச் சென்­றார்கள். அதா­வது இஸ்­லாத்­தி­னு­டைய மிக அடிப்­ப­டை­யான ஒரு பண்பும் ஒரு வர­லாறும் தான் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தாகும். இது இஸ்­லாத்தைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முன்­னேற்­ற­க­ர­மான பாராட்­டத்­தக்க அடிப்­படை விடயம்.

இன்­னு­மொரு முக்­கி­ய­மான விட­யம்தான், நாங்கள் ரசூலுல்­லாஹ்வின் காலத்தில் தான் வாழ வேண்டும், சவூதி காலம், மதீனா காலத்தில் தான் வாழ வேண்டும் என்று சொல்­ப­வர்கள் விளங்கிக் கொள்ள வேண்­டிய விடயம் இருக்­கின்­றது.

நீங்கள் பக்தாத் தலை­ந­க­ராக இருந்த காலத்தில் இருந்த நாக­ரீகம், அந்த காலத்தில் இஸ்லாம் உல­கிற்கு கொடுத்த கண்­டு­பி­டிப்­புகள், முன்­மா­தி­ரிகள் பற்றி என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்கள்? இஸ்லாம் வான சாஸ்­திரம், விஞ்­ஞானம் போன்ற துறை­களில் ஏற்­ப­டுத்­திய அடை­வுகள் பற்றி என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்கள்? அத்­தோடு ஸ்பெயின் போன்ற இஸ்­லா­மிய சாம்­ராஜ்­ஜி­யங்­களின் வளர்ச்­சிகள், காட்­டிய முன்­மா­தி­ரிகள், அதன் கண்டு பிடிப்­புகள், அவை உல­கிற்கு கொடுத்த விளை­வுகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்கள்? சுலைமான் அவர்­க­ளு­டைய உது­மா­னிய சாம்­ராஜ்­ஜி­யத்­தி­னு­டைய அடை­வு­களைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்­பு­கி­றீர்கள்? இவை எங்­க­ளு­டை­யவை அல்ல, இவற்­றிற்கும் இஸ்­லாத்­திற்கும் சம்­பந்தம் இல்லை என்று சொல்ல முனை­கின்­றீர்­களா? மன்னர் அக்­பரின் பேரர்கள் கூட தெற்­கா­சிய, பசுபிக் பிராந்­தி­யங்­களை இணைப்­ப­தற்கு மிகப்­பெ­ரிய பணி­யாற்­றி­ய­வர்கள். இவ்­வா­றான பாரம்­ப­ரி­யமும் வர­லாறும் இருக்­கின்ற சம­யத்­திற்கு சொந்­தக்­கா­ர­ரான நீங்கள் இவற்றை மறுக்­கி­றீர்­களா? நீங்கள் எப்­படி நவீ­னத்­து­வத்­துக்கு மாற­மாட்டோம் என்று கூற முடியும் என்­பதை கேட்க விரும்­பு­கிறேன்.

இஸ்லாம் சவூதியில் ஆரம்­பித்­தி­ருந்­தாலும் இன்று இஸ்­லா­மிய உலகைப் பார்த்தால், முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழ்­கின்ற பிர­தே­சங்கள் மிகவும் வித்­தி­யா­ச­மா­னவை. தெற்­கா­சி­யாவில் அதி­க­ளவில் இருக்­கி­றார்கள், இந்­தோ­னே­சியா, தென் கிழக்கு ஆசியா, ஆபி­ரிக்கா, ஐரோப்பா, அமெ­ரிக்­காவில் வளர்ந்து வரும் மார்க்­க­மாக இஸ்லாம் காணப்­ப­டு­கி­றது. இவற்றை நாம் புரிந்து கொண்டு இஸ்லாம் எப்­படி இந்த மாற்­றங்­க­ளோடு ஏனைய இடங்­களில் பணி­யாற்­று­கின்­றது என்­பதை புரிந்து கொண்டு செயற்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது.

உதா­ர­ண­மாக இங்­கி­லாந்­திலே இந்து ஒருவர் பிர­த­ம­ராக இருக்­கின்றார். லண்டன் நக­ரத்தின் மேய­ராக ஒரு முஸ்லிம் இருக்­கின்றார். ஆனால் அவர்கள் எங்­க­ளு­டைய கலா­சா­ரத்தை அங்கு பிர­தி­ப­லிக்­க­வில்லை. அவர்கள் இங்­கி­லாந்­தி­னு­டைய கலா­சா­ரத்­தையே பிர­தி­ப­லிக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய நம்­பிக்­கைகள் அப்­ப­டியே இருக்­கின்­றன. ஆகவே நாம் இந்த நவீன உலக ஒழுங்­கு­களை விளங்கிக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது” என்றார்.

அடுத்து ஜனா­தி­பதி முக்­கி­ய­மாக வலி­யு­றுத்­திய விட­யம்தான் வன்­மு­றை­யற்ற தன்மை. “அதா­வது நாம் எவ்­வாறு சகிப்­புத்­தன்­மை­யுடன் நடந்து கொள்­வது என்­பது. அனைத்து சம­யங்­களும் தங்­க­ளது போத­னை­களை பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கும் பின்­பற்­றா­த­வர்­க­ளுக்கும் தங்­க­ளு­டைய நம்­பிக்­கை­களை, கொள்­கை­களை போதிக்­கின்­றன. இவ்­வாறு போதிப்­ப­திலே எந்­தத்­த­வறும் கிடை­யாது. ஆனால் எங்­க­ளு­டைய கொள்­கை­களை பின்­பற்­றா­த­வர்­களை நாங்கள் எதி­ரி­க­ளாக பார்க்­கின்­ற­போ­துதான் அது பெரும் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக அமைந்து விடு­கி­றது. அடுத்த முக்­கி­ய­மான விட­யம்தான் சம­யங்­க­ளுக்கு உள்ளே இருக்­கின்ற சர்ச்­சைகள். இது இஸ்­லாத்தில் மட்­டு­மல்ல எல்லா சம­யங்­க­ளிலும் இருக்­கின்­றது.

உதா­ர­ண­மாக இன்று திருச்­சபை பழ­மை­வாத கிறிஸ்­தவக் குழுக்­க­ளினால் பல சவால்­களை எதிர்­கொள்­கின்­றது. ‘சேர்ச் ஒப் இங்­கிலண்ட்’ ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­களின் திரு­ம­ணங்­களை எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்பில் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ளது. இது இஸ்­லாத்­துக்கு மட்டும் பொது­வா­ன­தல்ல. ஆனால் இதை எவ்­வாறு அந்த சம­யங்கள் கையா­ளு­கின்­றன, புதிய மாற்­றங்­களை எவ்­வாறு கையா­ளு­கின்­றன, எவ்­வாறு அவை கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றன, எவ்­வாறு அதற்கு தீர்வு காணப்­ப­டு­கி­றது என்­பது தான் முக்­கி­ய­மா­னது. இதன் அர்த்தம் எமது அடிப்­படைக் கொள்­கை­களை விட்­டுக்­கொ­டுக்க வேண்டும், மாற வேண்டும் என்­ப­தல்ல.

இன்று சம­யங்கள் வர்த்­த­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. யுத்த நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவற்றை நோக்கி இழுத்துச் செல்­லப்­ப­டு­கின்­றன. வெறுப்­பையும் வன்ம உணர்­வு­க­ளையும் தூண்­டு­வ­தற்­கான ஆயு­தங்­க­ளாக சம­யங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதை நாங்கள் அகற்றி இஸ்­லாத்தின் அடிப்­படை சாரம், அடிப்­படை பொரு­ளென்ன? என்­ப­தனை தெளி­வாக விளங்கி, சம­யத்தை வர்த்­தக மயப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு, யுத்­தங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு, வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டு­வ­தற்கு உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கி­றது” என்­பதை ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

மூன்­றா­வது முக்­கி­ய­மான விட­யம்தான், ஜனா­தி­பதி தனது உரையில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் சம்­பந்­த­மா­கவும் கூறு­கிறார். முஸ்­லிம்­க­ளுக்கு உள்ள மிகப்­பெ­ரிய வளம் இந்த தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் என்று அவர் குறிப்­பிட்­ட­துடன் இதனை ஒரு சமூ­கத்­துக்கு மாத்­தி­ர­மான, முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மான பல்­க­லைக்­க­ழ­க­மாக பார்த்தால் அது பிழை­யான அணு­கு­மு­றை­யாக அமையும் என்றும் அதை நவீ­னத்­து­வ­மான வளர்ச்­சி­ய­டைந்த பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்­று­வ­த­னூ­டாக நீங்கள் உங்­களை வளர்த்­துக்­கொண்டு, நாட்­டுக்கும் பங்­க­ளிப்புச் செய்­யலாம் என்ற கருத்தை முன்­வைத்தார். அப்­படி இல்­லா­விட்டால் பௌத்த பாளி பல்­க­லைக்­க­ழகம் எப்­படித் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டதோ, எவ்­வாறு சிறிய வட்­டத்­துக்குள் சுருங்­கிப்­போ­னதோ அவ்­வா­றான ஒரு நிலைக்கு இந்த பல்­க­லைக்­க­ழ­கமும் சென்­று­வி­டலாம் என்ற ஆபத்தை உணர்ந்து செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். இலங்கை முஸ்­லிம்­க­ளு­டைய செயற்­பா­டுகள் அவர்கள் பற்­றிய அபிப்­பி­ரா­யங்­களில் கரும்­புள்­ளி­களை ஏற்­ப­டுத்­தி­வி­டாமல் கவ­ன­மாக பார்த்­துக்­கொள்­வது முஸ்­லிம்­களின் பொறுப்பு என்ற கருத்­தினை முன்­வைத்தார். இதற்கு முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்­பான விட­யத்தை உதா­ர­ண­மாக காட்­டினார். “முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்­பாக நிறைய வாதப் பிர­தி­வா­தங்கள் நடக்­கின்­றன. ஆனால் அவை மிகவும் நாக­ரி­க­மான முறையில் அதை ஆத­ரிப்­ப­வர்கள் மற்றும் எதிர்ப்­ப­வர்கள் மத்­தியில் நடக்­கின்­றது. அந்த விட­யங்­களில் நான் தலை­யி­ட­மாட்டேன். ஏனென்றால் அது முஸ்­லிம்­களின் விவ­காரம். நீங்­களே அதை பேசி தீர்த்­துக்­கொள்­வீர்கள் என நான் நம்­பு­கிறேன். ஆனால் அதை கையா­ளு­கின்ற பொழுது பிழை­யான அணு­கு­மு­றை­களை கடைப்­பி­டிக்க கூடாது. உதா­ர­ண­மாக அண்­மை­யிலே அது தொடர்­பான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தைக் கண்டேன். அங்கு சிறு­வர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கி­றார்கள். இது சிறுவர் உரி­மைக்கு பாத­க­மா­னது மட்­டு­மன்றி இது முஸ்­லிம்கள் பற்­றிய நல்ல உரு­வ­கத்தை காண்­பிக்­க­வில்லை. எனவே இவ்­வா­றான முஸ்­லிம்­க­ளுக்கு கறுப்பு புள்­ளியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விட­யங்­களில் நீங்கள் ஈடு­பட வேண்டாம். அவற்றை தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இறுதியாக “முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு இருக்கின்ற நீண்ட கால பிரச்சினைகள், கவலைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவழி தமிழர்களுடன் பேசி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது போல முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். கிழக்கு மாகாணத்திலே உள்ள முஸ்லிம்கள், கொழும்பிலே உள்ள முஸ்லிம்கள், தென் கிழக்கிலே உள்ள முஸ்லிம்கள், மன்னாரிலுள்ள முஸ்லிம்களுக்கு வெவ்வேறான பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே அப் பிரச்சினைகளை இனங்காண்பதற்கு சமூக நீதி ஆணைக்குழுவை நியமித்து, அதனூடாக ஆராய்ந்து தீர்ப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அந்த பிரச்சினைகளை தீர்க்க எடுக்கும் முயற்சிகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட அடிப்படையான காரணங்கள் என்ன? முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட விடயங்கள் இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற விடயங்களுக்கு காரணமாய் அமைந்தவை என்ன என்பதையும் ஆழமாக ஆராய்ந்து அவற்றை தீர்க்க முயற்சி செய்வோம். அதனைப்போன்று முஸ்லிம்களுக்கு எதிராக திகனவில் வன்முறைகள் நடப்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த விடயங்களுக்கு தீர்வு காண்போம்” என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே ஜனா­தி­ப­தியின் இந்த உரையில் முஸ்­லிம்கள் விளங்கிக் கொண்டு எங்­களை நாங்­களே மீள ஒழுங்­க­மைத்­துக்­கொள்ள வேண்­டிய விட­யங்கள், குறிப்­பாக ஆழ­மாக இங்கு நான் சுட்டிக் காட்­டிய விட­யங்கள் இருப்­பதை அவ­தா­னிப்­பீர்கள். எனவே உரிய தரப்­புகள் தலை­மைகள், நிறு­வ­னங்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா போன்ற அமைப்­புகள், மற்றும் பிராந்­திய ஜம்­இய்­யத்துல் உல­மாக்கள் இவற்றை கவனம் செலுத்தி மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­காக எவ்­வாறு செயற்­ப­டலாம் என்­பதைப் பற்றி சிந்­திப்­பது காலத்தின் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.