விபத்தில் மரணித்த கணிதவியல் கலாநிதி ஜுமான்

0 549

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பேரா­தனை பல்­க­லைக்­க­ழக கணி­தத்­துறை செயற்­பாட்டு ஆராய்ச்­சியின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சில்மி ஜுமான் கடந்த சனிக்­கி­ழமை குரு­நாகல் பொல்­பி­டி­கம என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் வபாத்­தானார்.

சனிக்­கி­ழமை பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் விரி­வு­ரை­களை நிறைவு செய்­து­விட்டு திரு­மண வைப­வ­மொன்றில் கலந்து கொள்ளச் சென்று கொண்­டி­ருந்த வேளை காலை 11 மணிக்கு இவர் செலுத்திச் சென்ற ஸ்கூட்­டரும் – பஸ் ­வண்­டியும் மோதிக்­கொண்­டதில் இவ்­வி­பத்து ஏற்­பட்­டுள்­ளது.

மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான ஜுமான் பேரா­த­னைப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றி கண்­டியில் குடும்­பத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருந்தார். விபத்து இடம்­பெற்ற தினம் உற­வினர் ஒரு­வரின் திரு­மண வைப­வத்­துக்கு மனை­வி­யையும் பிள்­ளை­க­ளையும் காரில் ஏற்­க­னவே அனுப்­பி­விட்டு ஜுமான் (42) விரி­வு­ரை­களை முடித்­து­விட்டு திரு­ம­ண ­வை­ப­வத்­துக்­காக திரும்­பிக்­கொண்­டி­ருந்தார்.
குரு­நாகல் கல்­க­முவ– கல்­லாவ என்ற கிரா­மத்தில் பிறந்த ஜுமான் க.பொ.த. சாதா­ரண தரம் ­வரை சியம் பலா­கஸ்­கொட்­டுவ மதீனா தேசிய பாட­சா­லையில் பயின்றார். பின்பு தனது உயர் கல்­வியை மட­வளை மதீனா தேசிய பாட­சா­லையில் தொடர்ந்தார்.

இவர் 2008 இல் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணி­தத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். இத­னை­ய­டுத்து பேரா­தனை பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான பீடத்தின் கணி­த­வியல் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பதவி கிடைத்­தது.

மேலும் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் குறித்து பல கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளார். இதன் மேலாண்மை மற்றும் அதன் இதர துறை­களில் ஆராய்ச்சி துறை­களில் ஆராய்ச்­சி­யிலும் ஈடு­பட்­டி­ருந்தார்.

ஐரோப்­பிய ஜர்னல் ஆஹ்ப் ஆப­ரேஷன்ஸ் ரிசர்ச், ஒமேகா, இன்டர் நெஷனல் ஜனரல் ஆஹ்ப் புரொ­டக்டின் ரிசார்ச் ஆகிய நூல்­களின் பதிப்­பாய்­வா­ள­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார்.

இவ­ரது ஜனாஸா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ளவில் கல்­லாவ ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸாவில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர், பட்டதாரி மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், புத்திஜீவிகள், ஊர் மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.