வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

0 253

(எம்.எப்.எம்.பஸீர்)
குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவை எதிர்­வரும் மே 16 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று நீதி­ய­ரசர் ப்ரியந்த ஜய­வர்­தன தலை­மை­யி­லான எஸ். துறை ராஜா மற்றும் குமு­தினி விக்­ர­ம­சிங்க ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே இவ்­வாறு எதிர்­வரும் மே 16 ஆம் திகதி இம்­ம­னுவை பரி­சீ­லிக்க நீதி­ய­ர­சர்கள் தீர்­மா­னித்­தனர்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஊடாக தாக்கல் செய்­யப்பட்ட இந்த இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் குரு­ணாகல் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­பலால், பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த கித்­சிறி ஜயலத், சி.ஐ.டி. பணிப்­பாளர், பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, பாது­காப்பு செயலர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

தான் வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டமை சட்ட விரோ­த­மா­னது என அறி­விக்­கு­மாறும், எந்த நியா­ய­மான கார­ணி­களும் இன்றி தான் கைது செய்­யப்­பட்­ட­மையை சட்ட விரோ­த­மா­னது என தீர்ப்­ப­ளிக்­கு­மாறும், மனு­தாரர் கோரி­யுள்ளார்.
அர­சி­ய­ல­மைப்பின் 12(1), 12(2), 13(1), 13 (2) மற்றும் 14(1)(ஏ) உறுப்­பு­ரைகள் ஊடாக உறுதி செய்­யப்பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள், தனது விட­யத்தில் மீறப்­பட்­டுள்­ள­தாக அறிவிக்­கு­மாறும் மனு­தாரர் கோரி­யுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.