மாவனெல்லை இரட்டை கொலை: பர்ஹான் உள்ளிட்டோர் சிக்கினர் வெல்லம்பிட்டி படுகொலை தொடர்பிலும் சந்தேக நபர்கள் கைது

0 257

(எம்.எப்.எம்.பஸீர்)
மாவ­னெல்­லையை சேர்ந்த இரு இளை­ஞர்­களின் படு கொலை தொடர்பில், ரம்­புக்­கனை பகு­தியின் பிர­பல ஐஸ் போதைப் பொருள் வர்த்­தகர் என கூறப்­படும் ஹுரீ­ம­லுவ பர்ஹான் என அறி­யப்­படும் மொஹம்மட் பர்ஹான் உள்­ளிட்ட அனைத்து சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருந்த போது, கேகாலை வலய குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு­வினர் அங்கு சென்று பர்­ஹானை கைது செய்த நிலையில், அவ­ருடன் இருந்த கொலை­யுடன் தொடர்­பு­பட்ட மற்­றொரு சந்­தேக நப­ரான ஹலீம் என்­ப­வ­ரையும் பொலிசார் கைது செய்­தனர்.

கடந்த 19 ஆம் திகதி இக்­கைது நட­வ­டிக்­கை இடம்­பெற்­ற­துடன், அவர்­க­ளுக்கு தங்­கு­மிடம் மற்றும் உண­வ­ளித்த ஒரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர்.
அதன்­படி இந்த இரட்டை கொலை­யுடன் தொடர்­பு­பட்ட அனை­வ­ரையும் பொலிசார் கைது செய்­துள்­ளனர்.

ஏற்­க­னவே மாவ­னெல்லை மற்றும் கெலி ஓய பகு­தி­களில் வைத்து இரு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர்­களில் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து கொல்­லப்­பட்ட இளைஞர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான மோட்டார் சைக்­கிளும் மீட்­கப்­பட்­டது.

இத­னி­டையே கடந்த 15 ஆம் திகதி கொலன்­னாவை – வெல்­லம்­பிட்டி பகு­தியில், 62 வயது மூதாட்டி ஒருவர், அவ­ரது வீட்டில் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்த பெண் மற்றும் அவ­ரது கள்ளக் காத­லனால் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­திலும் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் லலித் அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில் நடந்த விசா­ர­ணை­களில் அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 28 வய­தான பெண்ணும் 24 வயதான அவரது மச்சான் முறையிலான ஆணுமே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.