புலனாய்வு, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு விவகாரங்களில் வருந்தத்தக்க வகையில் நடந்தமைக்கு உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்

0 276

புல­னாய்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாது­காப்பு தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில் வருந்தத்தக்க வகையில் நடந்து கொண்­டமை தொடர்பில் உச்ச நீதி­மன்றம் தனது ‘அதிர்ச்சி மற்றும் கலக்­கத்தை’ வெளி­யிட்­டுள்­ள­தாக உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் அடிப்­படை உரிமை மீறல் வழக்­குக்கு வழங்­கப்­பட்ட தீர்ப்பு குறித்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தெரிவித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
வர­லாற்று ரீதி­யான தீர்ப்பு என பர­வ­லாக சிலா­கிக்­கப்­படும் உச்ச நீதி­மன்றத்தின் அண்­மைய தீர்ப்பின் முடி­வுரைக் குறிப்­பு­களில் பின்­வ­ரு­மாறு தெளி­வான மற்றும் ஊடு­ருவும் வார்த்­தை­களால் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது: “…பாது­காப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் புல­னாய்வு தொடர்­பான விவ­கா­ரங்­களில் வருந்­தத்­தக்க வகையில் காணப்­பட்ட செய­லறு நிலை மற்றும் மேற்­பார்­வை­யின்மை தொடர்பில் நாம் எமது அதிர்ச்சி மற்றும் கலக்­கத்தை வெளி­யிட்­டாக வேண்டும்.”

இந்த தீர்ப்பை வழங்­கிய உச்ச நீதி­மன்­றத்தின் எழுவர் அடங்­கிய நீதி­ப­திகள் குழா­முக்கு பிர­தம நீதி­ய­ரசர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த ஜய­சூ­ரிய தலைமை வகித்­தி­ருந்தார். அனைத்து தரப்­பி­ன­ராலும் நீதி­மன்­றத்தின் முன் வைக்­கப்­பட்ட சான்று ஆவ­ணங்­களை உணர்ச்­சி­க­ளுக்கு கட்­டுப்­ப­டாமல் பகுப்­பாய்வு செய்­ததன் மூலம் இந்த முக்­கி­ய­மான அமைப்­பு­க­ளுக்குள் நிலவும் ‘வருந்­தத்­தக்க’ விவ­கா­ரங்கள் தேசத்தின் முன் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த அமைப்­பு­களில் ‘சட்­ட­மி­யற்றல்’, ‘கட்­ட­மை­மைப்பு’ மற்றும் ‘நிரு­வாக’ மாற்றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என உச்ச நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னங்­க­ளுக்குள் ‘மூலோ­பாய ஒருங்­கி­ணைப்பு’, ‘நிபு­ணத்­துவம்’ மற்றும் ‘தயார்­நிலை’ என்­ப­வற்றில் காணப்­படும் இடை­வெ­ளிகள் கார­ண­மாக தவிர்க்­கத்­தக்க ‘இறப்பு மற்றும் அழிவை’ நாடு எதிர்­கொண்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த செய­லி­ழப்­புக்கள் “பல் கலாச்­சாரம் மற்றும் பல மதங்­களின் ஆசீர்­வாதம் கொண்ட நாட்டின் பாது­காப்பு அமைப்­புக்கு துடைக்­கப்­பட முடி­யாத கறையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது…” (பக்கம் 120) என தனது கவ­லையை வெளி­யிட்­டுள்­ளது.

நாட்டின் தேசிய பாது­காப்பு பேரவை (NSC) சட்­ட­பூர்­வ­மான நிலைப்­ப­டுத்­தலைக் கொண்­டி­ருக்க வேண்டும் என உச்ச நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் பல ஏற்­பா­டுகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தற்கு மேல­தி­க­மாக, உச்ச நீதி­மன்றம் 1865 ஆம் ஆண்டின் பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தின் 56 ஆம் பிரிவை மேற்கோள் காட்­டி­யுள்­ளது, பொலிஸ் அதி­கா­ரி­களின் “கட­மைகள் மற்றும் பொறுப்­புக்கள்” பற்­றிய இப்­பி­ரிவில் அனைத்து குற்­றங்கள் மற்றும் பொது மக்­க­ளுக்கு ஏற்­படும் இடை­யூ­று­களைத் ‘தடுக்க’ ஒவ்­வொரு பொலிஸ் அதி­கா­ரியும் “தனது சிறந்த நட­வ­டிக்­கைகள் மற்றும் இய­லு­மை­களைப் பயன்­ப­டுத்த” வேண்­டி­ய­துடன் அனைத்து உத்­த­ர­வுகள் மற்றும் ஆணை­க­ளுக்கு கீழ்ப்­ப­டிந்து நடக்க வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது (பக்கம் 99). உச்ச நீதி­மன்­றத்தின் இக்­கண்­ட­றி­தல்கள் எதிர்­கா­லத்தில் சாத்­தி­ய­மான அனைத்து மனிதப் பேர­ழி­வு­க­ளையும் தடுக்க அர­சாங்­கத்­தினால் அவ­சர தீர்வு செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதைக் கோரி நிற்­கின்­றது.

பாது­காப்பு தொடர்­பு­டைய விட­யங்கள் சில சம­யங்­களில் ‘இர­க­சி­ய­மா­னவை’ என முத்­திரை குத்­தப்­பட்டு அவை பொது­மக்­களின் உரை­யா­டல்­க­ளுக்கு, சில வேளை­களில் நீதி­மன்­றங்­களின் செயற்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட விட­யங்­க­ளாக ஆக்­கப்­ப­டு­கின்­றன. சட்­டமா அதிபர், நீதி­மன்­றங்கள் மற்றும் பொதுச் சேவைகள் என்­பன கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட முடி­யாமல் இயங்கும் நிலை­யையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் (BA­SL), தேவா­லயம் மற்றும் ஏனைய பல தரப்­புக்கள் தாக்கல் செய்யும் அடிப்­படை உரிமை மீறல் வழக்­குகள் கார­ண­மா­கவே இவ்­வி­ட­யங்கள் பொது­மக்­களின் மீளாய்­வுக்கு கிடைக்­கின்­றன. இதன் மூல­மாக, சாத்­தி­ய­மான எதிர்­காலப் படு­கொ­லை­களைத் தடுக்­கவும் தொடர்­பு­டைய அதி­கார சபை­களை எச்­ச­ரிக்கை விடுக்­கவும் உச்ச நீதி­மன்­றத்­துக்கு வாய்ப்பு கிடைக்­கின்­றது.

தேசிய பாது­காப்பு பேரவை மற்றும் அரச புல­னாய்வுச் சேைவ (SIS) போன்ற தொடர்­பு­டைய அமைப்­புகள் வழ­மை­யாக வெளி­நா­டு­களின் உள்­ளீ­டு­களில் தங்­கி­யி­ருப்­பது உறு­தி­யான விட­ய­மாகும். சட்­ட­ரீ­தி­யாக இவ்­வ­மைப்­புகள் பாரா­ளு­மன்­றத்­துக்கு வகை கூறு­வ­ன­வாக ஆக்­கப்­பட வேண்டும். உள்­ளக மற்றும் வெளி­யக பாது­காப்பு முகவர் அமைப்­புகள் மற்றும் நபர்­களால் இவ்­வ­மைப்­பு­க­ளுக்கு பிழை­யான மற்றும் மோச­டி­யான புல­னாய்வுத் தக­வல்கள் வழங்­கப்­பட்ட பல சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன. காலத்­துக்கு காலம் வெளி­நாட்டு சார்பு அமைப்­புக்­களால் வழங்­கப்­பட்டு ஊட­கங்­களால் வெளி­யி­டப்­பட்ட பல பிழை­யான அறிக்­கைகள் பாது­காப்பு அமைச்­சினால் பிழை என நிரூ­பிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் அண்­மைக்­கா­லத்தில் இடம்­பெற்­றுள்­ளன. எவ்­வா­றா­யினும், துல்­லி­ய­மான அறிக்­கை­க­ளுக்கு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டாமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டு­தாரி ஸஹ்றான் ஹாஷி­முக்கு பாது­காப்பு முகவர் அமைப்­பு­களால் பணம் வழங்­கப்­பட்­ட­தாக குற்றம் சுமத்தும் அறிக்­கைகள் காணப்­ப­டு­கின்­றன, அவை முற்­று­மு­ழு­தாக பிழை­யான அறிக்­கை­க­ளாக இருக்­கலாம். எனினும், அவை உண்­மை­யாக இருக்கும் பட்­சத்தில் மிகவும் மோச­மான விட­யங்கள் பற்­றிய உண்­மை­களை வெளிச்­சத்­துக்கு கொண்டு வரும். உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்ட எட்டு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களின் தொலை­பேசித் தொடர்­பா­டல்­களில் ஒரு­வரின் தொடர்­பா­டலைத் தவிர்த்து ஏனை­யோரின் தொடர்­பா­டல்கள் காணப்­ப­டாமல் இருப்­பது மர்­ம­மான புதி­ரா­க­வுள்­ளது. கட்­டு­வாப்­பிட்­டிய தேவா­ல­யத்தில் தற்­கொலைத் தாக்­கு­தலை மேற்­கொண்ட நபரின் மனை­வி­யான சாரா என அழைக்­கப்­படும் புலஸ்­தினி ராஜேந்­திரன் பற்­றிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள மற்றும் அவரை இந்­தி­யாவில் இருந்து நாட்­டுக்கு கொண்டு வர எந்த வித முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த பிர­தம பொலிஸ் பரி­சோ­தகர் வழங்­கிய சான்­று­களின் பிர­காரம் அவர் செப்­டம்பர் 2019 இல் இந்­தி­யா­வுக்கு கடல் மூல­மாக தப்பிச் சென்­றுள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது.

வகை கூறாத வகையில் அரசாங்கத்துக்குள் இயங்கும் ‘ஆழமான அரசாங்கம்’ சில வேளைகளில் அரசியல் மற்றும் வேறு நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு வகை கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன அவசியமாகின்றன.

புலனாய்வாளர்கள் வழங்கும் விடயங்களின் அடிப்படையில் நன்னம்பிக்கையுடன் சட்டமா அதிபர் செயற்படுகின்றார். சில நேரங்களில் அவர்கள் வழங்கும் விடயங்கள் பிழையானவையாக அமைகின்றன. அவ்வாறான விடயங்களை நீதிமன்றங்கள் நிராகரித்த பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ‘சட்டத்தின் ஆட்சியே’ எப்போதும் உச்சமானது என்பதில் கவனத்தை திருப்புமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை கோரி நிற்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.