வெல்லம்பிட்டியில் அதிர்ச்சி சம்பவம்:வயோதிப தாயை கொன்றுவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பணிப் பெண்

0 293

ஏ.ஆர்.ஏ.பரீல்

கொழும்பு – வெல்­லம்­பிட்டி லான்­சி­யா­வத்­தையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கொடூர கொலை அப்­ப­கு­தியை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வய­தான நாதிரா என்ற வயோ­திபப் பெண்­ம­ணியே கழுத்து நெரிக்­கப்­பட்டு தாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.
வயோ­திபப் பெண்­ம­ணியின் வீட்டில் வேலை செய்த முர்­சிதா எனப்­படும் சுமார் 32 வய­து­டைய பணிப்­பெண்ணே இந்தக் கொலையை செய்­துள்­ள­தாக வெல்­லம்­பிட்­டிய பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கொலை­யா­ளி­யான வீட்டுப் பணிப்பெண் வீட்­டி­லி­ருந்த பெருந்­தொ­கை­யான தங்க நகை­க­ளையும் பணத்­தையும் கொள்­ளை­யிட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார். வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் சந்­தேக நபரைத் தேடிக்­கண்­டுப்­பி­டிப்­பதில் முழு­ மூச்­சாக ஈடு­பட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட பணிப்பெண் திஹா­ரிய பகு­தியைச் சேர்ந்­த­வ­ரென்றும், ஏற்­க­னவே திரு­மணம் செய்து கண­வரைப் பிரிந்து வாழ்­ப­வ­ரெ­னவும், அவ­ருக்கு மட்­டக்­குளி பகு­தியைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருடன் தொடர்பு இருந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு இப்பெண் இஸ்­லாத்­தை தழு­வி­ய பெண்­ணாவார்.

கொலை ­செய்­யப்­பட்ட வயோ­தி­பப்­பெண்­மணி கொலன்­னாவை பள்­ளி­வா­சலின் செய­லா­ளரும், கொலன்­னாவை மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலை­வரும், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பொரு­ளா­ள­ரு­மான எம்.ஜே.பெரோஸ் முஹம்­மட்டின் சகோ­த­ரி­யு­மாவார்.

எம்.ஜே. பெரோஸ் முஹம்­மட்டை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

“கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நான் இஹ்­ஸா­னியா அர­புக்­கல்­லூ­ரியின் வைப­வத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­போது எனது மனைவி அச்­சம்­ப­வத்தை எனக்கு தொலை­பே­சி­யூ­டாக அறி­வித்தார். கொலை செய்­யப்­பட்ட எனது சகோ­தரி கொழும்­பி­லுள்ள வீட்டை வாட­கைக்கு கொடுத்­து­விட்டு வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீடொன்­றிலே வாழ்ந்து வந்தார். வெல்­லம்­பிட்­டிய வீட்டில் எனது சகோ­த­ரியும் அவ­ரது மகள், மரு­மகன் மற்றும் பிள்­ளை­களும் வாழ்ந்து வந்­தார்கள்.

சம்­பவம் நடந்த அன்று மகளும், மரு­ம­கனும் இந்­தி­யா­வுக்குச் சென்­றி­ருந்­தனர். சகோ­த­ரி­யுடன் 8 வய­துக்கும் 10 வய­துக்­கு­மி­டைப்­பட்ட மூன்று ஆண் பேரப்­பிள்­ளைகள் இருந்­தனர். இந்தச் சூழ்­நி­லையைப் பயன்­ப­டுத்­தியே எனது சகோ­தரி கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.
கொலை­யா­ளியின் குடும்­பத்தை ஏற்­க­னவே எனக்குத் தெரியும். அவள் வறிய குடும்­பத்தைச் சேர்ந்­தவள். கண­வரைப் பிரிந்து வேறு ஓர் இளை­ஞ­ருடன் தொடர்பில் இருந்­துள்ளார். இவர்கள் இரு­வரும் சேர்ந்து திட்­ட­மிட்டே இந்­தக்­கொ­லையை செய்­தி­ருக்­கி­றார்கள்.

சந்­தேக நபரின் (பெண்) சகோ­தரர் ஒருவர் எனது வியா­பார நிலை­யத்தில் நீண்ட காலம் வேலை செய்தார். அவர் கடந்த 7 மாதங்­க­ளாக வேலையில் இல்லை. நான் அவ­ருக்கு வீடொன்றும் நிர்­மா­ணித்துக் கொடுத்­துள்ளேன்.

சந்­தேக நப­ரான பணிப்பெண் சில வாரங்­க­ளுக்கு முன்பே வேலை கேட்டு வந்து வேலையில் சேர்ந்­தவர். திட்­ட­மிட்டே இக்­கொலை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
கொலை செய்­யப்­பட்ட எனது சகோ­த­ரியின் கணவர் பல வரு­டங்­க­ளுக்கு முன்பே வபாத்­தா­கி­விட்டார். அதன்­பின்பு மகள் மரு­ம­க­னுடன் வாழ்க்­கையைத் தொடர்ந்தார். இவ்­வா­றான நிலை­யிலே இக்­கொலை இடம் பெற்­றுள்­ளது என்றார்.

கொலை­யாளியான பெண்ணின் காதலர் ஐஸ் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­னவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இரு­வரும் தொடர்ந்து தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கின்­றனர். சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு வெல்­லம்­பிட்­டிய பொலி­ஸாரும் சி.ஐ.டியினரும் பொது மக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.

கொலை செய்­யப்­பட்ட பெண்­மணி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­படும் போதே வபாத்­தா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. பெண்­ம­ணியின் ஜனாஸா நேற்று முன்­தினம் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் மாளி­கா­வத்தை மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் சந்­தேக நபர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.