பாராளுமன்ற உத்தியோகத்தருக்கு பதவி உயர்வில் அநீதி மேன் முறையீட்டு நீதிமன்ற மனு மீது நாளை விசாரணை

சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சபை தலைவர், செயலாளர் நாயகத்துக்கும் நீதிமன்ற அழைப்பாணை

0 310

20 வரு­ட­காலம் பாராளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்­றி­வரும் முஹம்­மது அஜி­வ­தீ­னுக்கு பாரா­ளு­மன்ற பதவி உயர்வில் அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக தாக்கல் செய்­யப்­பட்ட ரிட் மனுவை (CA-WRIT-304-2022) மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் ஏற்றுக் கொண்டு அதற்­க­மைய குறித்த மனுவில் பெயர் குறிப்­பி­டப்­பட்ட பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம், சபா­நா­யகர், எதிர்­க்கட்சித் தலைவர் மற்றும் பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அழைப்­பாணை விடுத்துள்­ளது.

பாராளு­மன்ற பிரதான ஆய்வு உத்­தி­யோ­கத்தர் என்ற பத­விக்கு அஜி­வ­தீனை விட 7 வரு­டங்கள் மூப்­பு­ரிமை மற்றும் அனு­பவம் குறைந்த ஒரு உத்­தி­யோ­கத்தர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். தற்­போது நிய­மனம் பெற்­றுள்ள உத்­தி­யோ­கத்­த­ருக்கு M.Phil. அல்­லது PhD நிலைக்கு சம­மான அனு­ம­திக்­கப்­பட்ட ஆய்­வு­நிலை கல்­வித்­த­கை­மைகள் இல்லை என்றும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான அஜி­வதீன் அதே பல்­க­லைக்­க­ழ­கத்தில் புவி­யியல் துறை உதவி விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்றி அதன் பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்­சை­யி­லேயே பாரா­ளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­க­த்தராக நிய­மனம் பெற்றார். பாரா­ளு­மன்­றத்தில் விடு­முறை மறுக்­கப்­பட்ட நிலையில் 2005 ஆம் ஆண்டு உயர்­கல்­வியைத் தொடர தாய்­லாந்து நாட்டு AIT பல்­க­லைக்­க­ழகத்தில் அவ­ருக்குக் கிடைக்­கப்­பெற்ற புல­மைப்­ப­ரிசில் வாய்ப்பும் கைந­ழு­வி­யது. பின்னர் அவர் தனது M.Phil கற்­கையை உள்­நாட்டில் பூர்த்­தி­செய்தார். இலங்கைப் பாரா­ளு­மன்ற செய­லக வர­லாற்றில் M.Phil பட்டம் பெற்ற முத­லா­வது உத்­தி­யோத்­தரும், ஒரு சர்­வ­தேச ஆய்­வ­ரங்கில் பாரா­ளு­மன்றம் சார்­பாக முத­லா­வது ஆய்­வ­றிக்­கையை முன்­வைத்­த­வரும் முஹம்­மது அஜி­வதீன் ஆகும்.

இந்­நி­லையில் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் அவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

குறித்த ரிட் மனு நாளை வெள்­ளிக்­கி­ழமை மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வழக்கு தொடுனர் அஜி­வதீன் சார்­பாக சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா முன்­னி­லை­யா­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.