திணைக்களம் அறிவிக்கும் வரை முற்பணம் செலுத்தாதீர்

0 309

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பி­யாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சும் இலங்கை அரசும் இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கடந்த 9 ஆம் திகதி கைச்­சாத்­திட்­டுள்ள நிலையில், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் முக­வர்கள் தொடர்பில் உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­விப்புச் செய்யும் வரை ஹஜ் யாத்­தி­ரைக்­காக எவ­ரி­டமும் முற்­பணம் செலுத்த வேண்டாம் என ஹஜ் முக­வர்கள் சங்கம் மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஹஜ் உப முக­வர்கள் எனக் கூறிக்­கொள்ளும் ஒரு சிலர் மக்­களை ஏமாற்றி, குறைந்த கட்­ட­ணத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை செய்து தரு­வ­தாக முற்­ப­ணம்­பெற்­றுக்­கொள்ள முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக ஹஜ்­மு­க­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம். ஹியாம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் ஹஜ் ­யாத்­தி­ரைக்­காக முற்­பணம் செலுத்­து­வோ­ருக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமோ அல்­லது ஹஜ் முக­வர்கள் சங்­கமோ பொறுப்­பா­க­மாட்­டாது என்றும் அவர் கூறினார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான இலங்கை மற்றும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சின் உடன்­ப­டிக்கை அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. ஜித்­தாவில் நடை­பெற்ற உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திடும் வைப­வத்தில் சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்­கையின் தூதுவர் பி.எம்.அம்­சாவின் தலை­மை­யி­லான குழு­வினர் கலந்து கொண்­டனர். சவூதி அரே­பி­யாவின் சார்பில் ஹஜ் மற்றும் உம்ரா பிர­தி­ய­மைச்சர் கலா­நிதி அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் மஸாத் கலந்து கொண்­டி­ருந்தார்.

இதே­வேளை இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கட்­டணம் இது­வ­ரையில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என ஹஜ்­மு­க­வர்கள் சங்­கத்­த­லைவர் ஹியாம் தெரி­வித்தார். கடந்த வரு­டத்தை விட இவ்­வ­ருடம் ஹஜ் கட்­டணம் அதி­க­ரித்துக் காணப்­படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில் கடந்த வருடம் கொவிட் தொற்று 19 நோய் பரவல் கார­ண­மாக ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. கடந்த வருடம் 9 இலட்சம் மக்­களே ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்­டனர். இவ்­வ­ருடம் மில்­லியன் மக்­க­ளுக்கு ஹஜ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதனால் ஹோட்டல் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என்பன அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனால் ஹஜ் கட்டணம் இதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.