கொள்­கையா : கிலோ என்ன விலை?

0 283

றிப்தி அலி

‘இம்சை அரசன் 23 ஆம் புலி­கேசி” என்­பது ஒரு நகைச்­சு­வை­யு­ட­னான சிற்­ற­ரசு ஒன்றை மையப்­ப­டுத்­திய திரைப்­படம். இந்த திரைப்­ப­டத்தில் பிர­பல நகைச்­சுவை நடிகர் வைகைப்­புயல் வடி­வேலு இரட்டை வேடத்தில் நடித்­தி­ருப்பார். அண்ணன் பாத்­தி­ரத்தில் நடித்த வடி­வேலு மன்னன் 23 ஆம் புலி­கேசி. இவர் ஆங்­கி­லே­ய­ருக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்­டை­யு­டை­ய­வ­ராக இருப்­ப­தாக கதை சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருக்கும். 23 ஆம் புலி­கே­சியின் மந்­தி­ரி­யாக நடிகர் இள­வ­ரசு நடித்­தி­ருப்பார். இந்த நகைச்­சுவை திரைப்­ப­டத்தில் மன்­னரின் பிழை­யான தீர்­மா­னத்­திற்­கெல்லாம் தலை­ய­சைக்கும் பாத்­தி­ரத்தில் இருக்கும் மந்­தி­ரி­யாரை அடிக்­கொ­ரு­முறை ‘மங்­குணி மந்­திரி என்று மணிக்­கொரு தடவை நிரூ­பித்­துக்­கொண்­டிருக்­கிறாய்” என்ற வச­னத்தை வடி­வேலு கூறு­வதை இலங்­கையில் தேர்தல் காலம் வரும்­போ­தெல்லாம் முஸ்லிம் அர­சியல் வாதி­களை பார்த்துச் சொல்லத் தோன்றும். அந்த வச­னத்தை கொஞ்சம் திருத்தி, ‘மங்­குணி மந்­தி­ரிகள் என்­பதை ஒவ்­வொரு வாக்­கெ­டுப்­புகள் வரும்­போதும் நிரூ­பித்­துக்­கொண்­டி­ருக்­கிறாய்” என்று சொல்ல வேண்­டி­யி­ருக்­கி­றது.

ஏனென்றால், பாரா­ளு­மன்றில் இடம்­பெறும் வாக்­கெ­டுப்­பு­க­ளாக இருக்­கட்டும், தேர்தல் காலங்கள் ஆரம்­பிக்­கட்டும், குறைந்­தது முஸ்லிம் அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரேனும் ஏதோ ஒரு­வ­கையில் கட்சி மாறு­ப­வர்­க­ளா­கவும், கொள்­கையை மாற்­றிக்­கொள்­ப­வர்­க­ளா­கவும், வாக்­கு­று­தியை மீறு­ப­வர்­க­ளா­க­வுமே காலா கால­மாக இருந்து வந்­தி­ருக்­கின்­றனர். இத­னால்தான் நீண்­ட­கா­ல­மாக ‘தொப்பி புரட்­டிகள்” என்று முஸ்லிம் அர­சியல் தலை­மை­களை பார்த்து பிற சமூக அர­சி­யல்­வா­திகள் எள்ளி நகை­யா­டு­வதை காண்­கிறோம்.
இந்த பின்­ன­ணி­யில்தான் உள்ளூராட்சி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் கோரப்­பட்­டதன் பின்னர் பல கட்சித் தாவல் நாட­கங்கள் முஸ்லிம் அர­சியல் அரங்கில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. உள்ளுர் அர­சி­யல்­வா­திகள் முதல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக, அமைச்­சர்­க­ளாக, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­களும் இப்­போது கட்சி தாவ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர்.

இதில் பிர­தா­ன­மாக, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் மு.கா.வில் இணைந்­தமை, சம்­மாந்­துறை தவி­சாளர் நௌஷாட் பதவி வில­கி­யமை, ஹரீஸ் கட்­சிக்குள் உள்­வாங்­கப்­பட்­டமை, முஸர்­ரபின் தேர்தல் நட­வ­டிக்கை, அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அர­சியல் நகர்­வுகள், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­ரி­னதும் காய் நகர்த்­தல்கள் உள்­ளிட்ட பல அர­சியல் செயற்­பா­டு­களை சுட்­டிக்­காட்ட முடியும்.
இந் நிலை­யில்தான், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் மீண்டும் இணைந்­து­கொண்­டுள்ளார்.

1989ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஊடாக பாரா­ளு­மன்றம் நுழைந்த இவர், மாகாண ஆளுநர், அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர், இரா­ஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் போன்ற பல பத­வி­களை வகித்­துள்ளார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், கடந்த 2019 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் இவர் போட்­டி­யிட்டார். 2008ஆம் ஆண்டு நடை­பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­க­லுக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்றார்.

இதன் பின்னர், அகில இங்கை மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­க­ளுடன் இணைந்து ஹிஸ்­புல்லா அர­சியல் பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சி­யலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு நேரடி அர­சியல் எதி­ரி­யாக செயற்­பட்ட இவர், மீண்டும் அக்­கட்­சியில் இணைந்­து­கொண்­டுள்­ளமை இன்று சமூக ஊட­கங்­களில் பாரிய விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது.

குறிப்­பாக ஹிஸ்­புல்­லா­வினை கட்­சியில் இணைத்­துக்­கொண்­ட­மைக்­காவும், ஹிஸ்­புல்லாஹ் இணைந்­து­கொண்­டமை தொடர்­பிலும் பாரிய விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்பட்டு வரு­கின்­றன.

எவ்­வா­றா­யினும், முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கொள்­கை­யற்று தங்­களின் சுய­ந­லங்­க­ளுக்­கா­கவே அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்­றனர் என்­பது இதன் ஊடாகத் தெளி­வா­கின்­றது. இதற்கு பாடம்­பு­கட்­ட­வுள்­ள­தாக பொது­மக்கள் தெரி­வித்­தாலும், தேர்தல் காலங்­களில் கொள்­கை­யற்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கே தொடர்ந்தும் வாக்­க­ளித்து வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து, முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு மறை­முக அனு­ம­தியை வழங்­கிய ஏழு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இன்று மக்­க­ளுடன் மக்­க­ளாக இணை­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.
ஜனா­ஸாக்­களை எரித்த அர­சுக்கு துணை­போ­ன­மைக்­காக இன்று வரை இவர்­களில் ஒரு­வ­ரா­வது பகி­ரங்க மன்­னிப்புக் கோர­வில்லை. மாறாக தாம் செய்­தது சரி என நிரூ­பிப்­பது போலவே செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மல்லால், இவர்­க­ளுக்கு எதி­ராக இவர்கள் சார்ந்த கட்­சி­க­ளினால் இன்று வரை ஆக்­க­பூர்­வ­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாமல், மீண்டும் கட்­சி­க­ளுக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக கடந்த வருடம் புத்­த­ளத்தில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மாநாட்டில் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எச்.எம்.எம். ஹரீஸ், எழுத்து மூலம் மன்­னிப்புக் கோரினால் மாத்­தி­ரமே மீண்டும் கட்­சிக்குள் இணைந்­து­கொள்­ளப்­ப­டுவார் என அறி­விக்­கப்­பட்­டது. எனினும், இன்று வரை எழுத்து மூலம் மன்­னிப்புக் கோராத நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கட்­சிக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

இதே போன்றே, உள்ளூராட்சி மன்றத் தேர்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்­லாவும் இக்­கட்­சியில் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

இத­னி­டையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தேசிய அமைப்­பாளர் அப்துல் ஹை மற்றும் மஜ்­லிஸுல் சூராவின் பிரதித் தலைவர் முஹம்மத் சியாத் ஆகியோர் இக்­கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று இன்று அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக செயற்­படும் ஹாபீஸ் நசீர்; அஹ­மதின் இணைப்புச் செய­லா­ளர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர்.

எனினும், இவர்­க­ளுக்கு எதி­ராக இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்­கீமின் அனு­ம­தி­யு­டனே குறித்த பத­வி­யினை தாம் பொறுப்­பேற்­றுள்­ள­தாக அவர்கள் கூறி வரு­கின்­றனர்.

இதே­வேளை, கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்­தினை முஸ்­லிம்கள் கைப்­பற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு ஆத­ர­வாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உறுப்­பி­ன­ராக இருந்த சம்­மாந்­துறை பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் ஏ.எம். நௌசாத் பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்தார். இன்று அவர், அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எம்.முஷா­ர­புடன் கூட்­ட­மைத்து மீண்டும் சம்­மாந்­துறை பிர­தேச சபைத் தேர்­தலில் கள­மி­றங்கத் தயா­ராகி வரு­கின்றார்.

இவ்­வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று தங்களின் கொள்கைகளை மறந்து அற்ப சொற்ப நலன்களுக்காக தினம் தினம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.
இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடம் புகட்ட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். எனினும், இதனை மறந்த முஸ்லிம் சமூகம் குறித்த அரசியல்வாதிகளை மீண்டும், மீண்டும் தெரிவுசெய்து கைசேதப்படுகின்றது.
இது தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்­தினை விழிப்­பு­ணர்­வூட்ட வேண்­டிய புத்­தி­ஜீ­வி­களும், கொள்­கை­யற்ற அர­சி­யல்­வா­தி­களின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­வதும் மற்­றொரு கவ­லை­ய­ளிக்கும் செயற்பாடாகும்.

எவ்­வா­றா­யினும், கொள்­கை­யற்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், கட்­சி­க­ளுக்கும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறந்த பாடம் புகட்ட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.