100ஆவது அகவையில் உலமா சபை

0 345

ஏ.ஆர்.ஏ. பரீல்

காலி கோட்­டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்­ஜதுல் இப்­ரா­ஹி­மிய்யா அர­புக்­கல்­லூ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு நூறு வய­தாகி முதிர்ச்சி கண்­டு­விட்­டது. எதிர்­வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் தனது நூற்­றாண்டு விழாவைக் கொண்­டா­ட­வுள்­ளது.

அர­சியல் கலப்­பற்ற சமூ­கத்தின் நலன்­க­ருதி ஆரம்­பிக்­கப்­பட்­டதே அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை. தஃவாப் பணி­க­ளோடு சமூக நலன்­சார்ந்த சேவை­களை தன்­ன­கத்தே கொண்டு ஒரு பேரி­யக்­க­மாக மார்க்க அறி­ஞர்­களின் மைய­மாக தலை நிமிர்ந்து நிற்­கி­றது.

அன்று சாதா­ரண ஓர் அமைப்­பாக ஆரம்­பிக்­கப்­பட்டு ஸ்தீர­மான இட­மின்றி வளர்ச்­சிப்­ப­டி­களை எட்­டி­யுள்ள இவ்­வ­மைப்பு நாடெங்கும் கிளை ப­ரப்பி வியா­பித்­துள்­ளது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல சர்­வ­தேச மட்­டத்­திலும் அங்­கீ­காரம் பெற்ற ஓர் இயக்­க­மாக தஃவாப் பணி­க­ளோடு சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்கி வரு­கி­றது.

கடந்த மாத தர­வு­களின் படி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையில் நாட­ளா­விய ரீதியில் சுமார் 8300 பேர் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளனர். இவ் எண்­ணிக்கை மாதாந்தம் அதி­க­ரித்து வரலாம் என ஆருடம் கூறப்­ப­டு­கி­றது. கடந்த கால புள்­ளி­வி­ப­ரங்­களைக் கொண்டு இவ்­வாறு அனு­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.

நாட்டில் 25 மாவட்­டங்­க­ளிலும் 163 கிளைகள் நிறு­வப்­பட்டு இயங்கி வரு­கின்­றன. உலமா சபையின் நிர்­வாக சபையில் 56 பேர் அங்கம் பெற்­றுள்­ளனர்.

உலமா சபை

உலமா என்ற வார்த்தை ஆலிம் என்ற அரபுச் சொல்லின் பன்­மை­யாகும். ஆலிம் என்றால் கற்­ற­றிந்­தவர் என பொருள்­படும். ஆலிம் என்­பவர் மஸ்­ஜி­து­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­வரோ அல்­லது கற்­பித்­த­லுக்கு மாத்­திரம் ஒதுக்­கப்­பட்­ட­வரோ அல்லர். மாறாக மனித வாழ்வின் அனைத்துத் துறை­க­ளுக்கும் வழி­காட்டும் இஸ்­லாத்தை நடை­மு­றை­வாழ்வில் பின்­பற்றி ஏனை­யோர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாகத் திகழ்­ப­வரே ஆலிம்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஆரம்­பிக்­கப்­பட்டு பத்து தசாப்­தங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இச்­சபை ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் இன்று வரை பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சேவை­களைச்  செய்து வரு­கி­றது.

எமது நாட்டில் உலமா சபை ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் 1919 இல் இந்­தி­யாவில் இது போன்­ற­தொரு அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இதே­போன்று 1923 இல் தென் ஆபி­ரிக்­கா­விலும் மார்க்க அறி­ஞர்கள் சபை உரு­வாக்­கப்­பட்­டது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை  உள்­நாட்டு விட­யங்­களைப் பூர்த்தி செய்யும் வகை­யிலும் சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்­திலும் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும்.இதில் அங்கம் வகிப்­போரில் 90%மானோர் உள்­நாட்டில் கற்­றுத்­தேர்ந்­த­வர்­க­ளாவர். இச்­சபை கடந்த 100 வருட கால­மாக ஆலிம்கள், பொது­மக்கள் மற்றும் துறை சார்ந்­தோ­ருக்கு ஆன்­மீக ரீதி­யான வழி­காட்­டல்­க­ளையும் தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் முஸ்­லிம்­க­ளுக்கும், முஸ்லிம் அல்­லா­தோ­ருக்கும் லெள­கீக ரீதி­யான பணி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கி­றது.குறிப்­பாக முஸ்­லிம்­களின் மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சி­யிலும் ஈடு­பட்டு வரு­கி­றது.

உலமா சபை தனது செயற்­பா­டு­களின் நம்­ப­கத்­தன்­மையை உறுதி செய்யும் வண்ணம் தீவிர அர­சியல் ஈடு­பாட்டை முற்­று­மு­ழு­தாக தவிர்த்­துள்ள போதும் தேவைக்­கேற்ப கொள்­கை­களை வகுப்­பதில் சிந்­தனா ரீதி­யா­கவும் நெருக்­க­டி­யான  காலங்­களில் வழி­காட்­டல்­களை வழங்­கு­வதன் மூலமும் அத­னது அர­சியல் பங்­க­ளிப்பை செய்து வரு­கி­றது. இச்­சபை இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்­றத்தில் 2001 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­ட­தாகும்.

சமூ­க­சேவை

நாட்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தங்கள், வெள்­ளப்­பெ­ருக்கு, மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­க­ளின்­போ­தெல்லாம் இச்­சபை இன, மத, மொழி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் அனைத்து இன­மக்­க­ளுக்கும் நிவா­ரண உத­வி­களை வழங்­கியமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தற்­போதும் இவ்­வா­றான பல வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

சமூக சேவை மற்றும், ஆன்­மிகம் சார்ந்த பல குழுக்கள் உலமா சபையின் கீழ் இயங்­கி­வ­ரு­கி­றது.

ஒத்­து­ழைப்­புக்கும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­மான குழு, கல்­விக்­குழு, மக்தப் புன­ர­மைப்­புக்­குழு, பத்­வாக்­குழு, பிர­சா­ரக்­குழு, பிறைக்­குழு, வெளி­யீடு மற்றும் ஆய்­வுக்­கான குழு, இளைஞர் விவ­கா­ரக்­குழு, மகளிர் விவ­கா­ரக்­குழு, ஊட­கக்­குழு, இஸ்­லா­மிய பொரு­ளீட்­ட­லுக்­கான மதி­யு­ரைக்­குழு, ஆலிம்கள் விவ­கா­ரக்­குழு, கிளை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்­புக்­குழு  என பல்­வேறு குழுக்கள் இயங்­கி­வ­ரு­கின்­றன.

கல்வி மற்றும் இளைஞர் விவ­காரம்

இலங்கை முஸ்­லிம்­களின் கல்வி, கலா­சா­ரத்தின் வளர்ச்­சிக்­கா­கவும், முஸ்லிம் பாட­சா­லை­களின் தேவை­களை நிறை­வேற்றி வைக்­கவும், அவற்றின் கல்­வித்­த­ரங்­களை உயர்த்­தவும் இச்­சபை தன்­னா­லான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்­களின் கல்­வித்­த­ரங்­களைக் கண்­கா­ணித்து வரு­வ­துடன்  அவற்­றுக்­கி­டை­யி­லான ஒரு­மித்த பாடத்­திட்­ட­மொன்­றி­னையும் அமுல் செய்­தி­ருக்­கி­றது.

இச்­ச­பையின் கல்­விப்­பி­ரிவு அனை­வ­ருக்கும் கல்வி என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் பாட­சா­லை­களின் பெள­தீக அபி­வி­ருத்தி மற்றும் மாண­வர்­க­ளது மேம்­பாட்­டுக்­காக பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. ஏழைக்­கு­டும்­பங்­களைச் சேர்ந்த சிறார்­களை  இனங்­கண்டு அவர்­க­ளுக்கு கல்வி தொடர்­பான உத­வி­க­ளையும் வழங்கி வரு­கி­றது.

போதைப் பொருள் ஒழிப்பு கருத்­த­ரங்­குகள், தீவிரப் போக்­கற்ற நடு­நி­லை­யான இஸ்­லா­மிய சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­புகள், தொழில் ரீதி­யான வழி­காட்டல் போன்­ற­வற்றை இளைஞர் விவ­காரப் பிரிவு நடத்தி வரு­கி­றது.

மகளிர் விவ­காரம்

பெண்­களை மதிக்­கு­மாறு வலி­யு­றுத்தும் இஸ்லாம் அவர்கள் விட­யத்தில் நியா­ய­மாக நடக்க வேண்டும் என்றே கட்­ட­ளை­யி­டு­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் பெண்­மைக்கு மாசு ஏற்­படா வண்ணம் கல்வி தேடல் உட்­பட நடை­முறைச் சாத்­தி­ய­மான அனைத்து வகை­யான உரி­மை­க­ளையும் பெண்­க­ளுக்கு இஸ்லாம் வழங்­கு­கி­றது. இத­ன­டிப்­ப­டையில் இஸ்லாம் வலி­யு­றுத்தம் உரி­மை­களை பெண்­க­ளுக்கு உறுதி செய்யும் வகை­யி­லான அனைத்து முன்­னெ­டுப்­பு­க­ளையும் உலமா சபை மேற்­கொண்டு வரு­கி­றது.

பத்வா

அன்­றாடம் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு மார்க்கத் தீர்ப்­பினை வழங்கும் அங்­கீ­காரம் பெற்ற ஒரே நிறு­வ­ன­மாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை இயங்கி வரு­கி­றது. இஸ்­லாத்­துடன் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்ப்­ப­ளிக்க நீதி­மன்­றங்­களும் உ லமா சபையின் பத்­வாவை வேண்டி நிற்­கின்­றன. நாளாந்தம் உள்­நாட்டு மற்றும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொலை­பேசி மூலமும், மின்­னஞ்சல் மூலமும் எழுத்து மூலமும் பத்­வாக்கள் கேட்­கப்­ப­டு­கின்­றன. அத்­தோடு உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கும் மக்கள் பத்­வாக்கள் கேட்டு நேரடி விஜயம் மேற்­கொள்­கின்­றனர்.

மாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடை­பெற்று வரு­கி­றது. இக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உல­மாக்கள் தலை­மை­ய­கத்தில் ஒன்­று­கூடி சிக்­க­லான, சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களை ஆழ­மாக ஆய்வு செய்து பத்­வாக்­களை எழுத்து மூலம் வெளி­யி­டு­கின்­றனர்.

பிர­சாரக் குழு

வழி தவ­றி­ய­வர்­களின் பொய்­யான பிர­சா­ரங்­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்­களை பாது­காக்கும் நோக்­குடன் விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்­கு­களை நடத்தும் பணியில் பிர­சாரக் குழு ஈடு­பட்டு வரு­கி­றது.

பாவங்­க­ளி­லி­ருந்து பொது மக்­களைப் பது­காப்­ப­தற்குத் தேவை­யான வழி­காட்­டல்­க­ளையும் இங்கு வழங்கி வரு­கி­றது. சமு­தா­யத்தின் பாது­காப்­புக்குத் தேவை­யான அனைத்­துப் பிர­சா­ரங்­க­ளையும் தேவைக்­கேற்ப முன்­னெ­டுத்து வரு­கி­றது. வழி தவ­றிய கூட்­டங்கள் மேற்­கொள்ளும் தவ­றான மற்றும் பொய்­யான பிர­சா­ரங்­களை விட்டும் முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காப்­பது இக்­கு­ழுவின் முக்­கிய பணி­களில் ஒன்­றாகும். மேலும் ஹஜ், ரமழான் காலங்­களில் தேவைப்­படும் விஷேட வழி­காட்­டல்­க­ளையும் வழங்கி வரு­கி­றது.

தீவி­ர­வாதம் வேண்டாம்

தீவி­ர­வாதம் மற்றும் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக உலமா சபை பல ஊடக அறிக்­கை­க­ளையும், பிர­க­ட­னங்­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளது.

மேலும் சில அல்­குர்ஆன் வச­னங்கள் பற்­றிய தவ­றான விளக்­கங்­க­ளுக்குத் தெளி­வு­ரை­யாக இஸ்­லா­மோ­போ­பியா என்ற தொகுப்­பொன்­றையும் பிர­சு­ரித்­துள்­ளது.

மத தீவி­ர­வாதம் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முற்­றிலும் முரண்­பட்­ட­தாகும் என்ற உறு­தி­யான நிலைப்­பாட்­டினை உலமா சபை வெளி­யிட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்­கி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை உலமா சபை வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது. நாட்டில் அமை­தியை நிலை நாட்­டு­வ­தற்கும் சகோ­தர இன மக்­க­ளோடு தொடர்ந்தும் சக­வாழ்­வினைப் பேணவும் உலமா சபை பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டது.

இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­க­ளுக்கும் போத­னை­க­ளுக்கும் முற்­றிலும் மாற்­ற­மான இக்­கொ­டூரச் செயல் நாட்டில் குழப்­பத்தை உரு­வாக்க முயற்­சித்­து­வரும் குழு­வினர் முஸ்­லிம்­களை பக­டைக்­காய்­க­ளாக பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாதம் என உலமா சபை உறு­தி­யாகத் தெரி­வித்­துள்­ளது.

அவ­தா­ன­மாக செயற்­ப­டுங்கள்

அண்­மைக்­கா­ல­மாக அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூ­கத்தை தீவி­ர­வா­தத்­தி­லி­ருந்தும் காப்­பாற்­று­வ­தற்கு முன்­னின்று செயற்­ப­டு­கி­றது.

தேவை­யான மார்க்க அறிவை சரி­யான, நம்­ப­க­மான மூலங்­களில் இருந்தும், தகுதி பெற்ற  மார்க்க அறி­ஞர்­க­ளி­ட­மி­ருந்தும் மாத்­திரம் பெற்­றுக்­கொள்­ளும்­படி உல­மா­சபை மக்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. நீங்கள் அல்­லது உங்­களைச் சார்ந்­த­வர்கள் பங்­கேற்கும் மார்க்க அறிவை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பான வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­குகள் அரச அனு­ம­தி­யுடன் பொது இடங்­களில் நடைபெறுவதையும் அவற்றை ஏற்பாடு செய்பவர்கள் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அமைப்புகள்தான் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும்  பொதுமக்களைக் கோரியுள்ளது. உரை நிகழ்த்துபவர்கள் முறையாக கற்றுத் தகைமை பெற்றவர்களா என்பதையும் அவர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்றவர்களா என்பதையும் ஊர்ஜிதம் செய்து கொள்ளும்படியும் கோரியுள்ளது.

பிரார்த்திப்போம்

நாட்டின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் பங்களிப்புடன் 100ஆவது அகவையைக் கொண்டாடவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அல்லாஹ் மேலும் வலுசேர்க்க  வேண்டும் என நாமனைவரும் பிரார்த்திப்போம். சமூகத்தை நேர்பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டியது உலமா சபையின் பொறுப்பாகும். இப்பொறுப்பினை நேர்த்தியாக முன்னெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான  கால கட்டம் உலமா சபைக்கும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் சவாலாக மாறியுள்ளமையை உலமா சபை கவனத்தில் கொள்ள வேண்டும். சவால்களை வெற்றி கொண்டு சமூகத்தைக் காப்பாற்றி நேர்வழியில் பயணிக்கச் செய்ய வேண்டியது உலமா சபையே.

அதற்­கான பிரார்த்­த­னை­க­ளையும் வாழ்த்­துக்­க­ளையும் உலமா சபையின் 100 வருட கொண்­டாட்­டத்தில் பகிர்ந்து கொள்வோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.