போதைப்பொருள் விவகாரத்தில் பள்ளிகள் மிக கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்

அக்­க­ரைப்­பற்று பெரிய ஜும்­ஆ­பள்­ளி­வா­சல் தலைவர் கூறுகிறார்

0 390

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நிக்­காஹ்­வுக்­கான அனு­மதி வழங்­கு­வதில் நாட்­டி­லுள்ள பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் மிகவும் கடு­மை­யாக நடந்து கொள்ள வேண்டும். போதைப்­பொருள் விவ­கா­ரத்தில் கடு­மை­யாக செயற்­ப­டு­வதன் மூலமே சமூ­கத்தை போதைப்­பொ­ருளின் கோரப்­பி­டி­யி­லி­ருந்தும் விடு­விக்­க­மு­டியும். இது விட­யத்தில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களும், ஊர் மக்­களும் உல­மாக்­களும் கைகோர்க்க வேண்டும் என அக்­க­ரைப்­பற்று பெரிய ஜும்­ஆ­பள்­ளி­வா­சலின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

போதைப்­பொருள் பாவ­னையை காரணம் காட்டி அக்­க­ரைப்­பற்று பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் நிக்காஹ் விண்­ணப்பம் ஒன்­றினை நிரா­க­ரித்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு மேற்­கண்­ட­வாறு கூறினார்.

நிக்காஹ் விண்­ணப்­ப­மொன்று முறை­யாக பரி­சீ­லிக்­கப்­பட்­ட­போது அக்­க­ரைப்­பற்­றுவைச் சேர்ந்த சம்­பந்­தப்­பட்ட இளைஞர் போதைப்­பொருள் பாவ­னைக்கு உள்­ளா­னவர் என்­பது உறுதி செய்­யப்­பட்­டது. சாட்­சிகள் மற்றும் ஆவ­ணங்கள் மூலம் இவ்­வி­வ­காரம் நிரூ­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே பள்­ளி­வாசல் நிர்­வாகம் விவாக விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்­தது.

போதைப்­பொருள் பாவ­னைக்­குள்­ளான குறிப்­பிட்ட இளைஞர் போதைப்­பொருள் புனர்­வாழ்வு மையத்தில் அனு­ம­திக்­கப்­பட்டு நற்­சான்­றிதழ் பெற்று அதனை பள்­ளி­வா­சலில் சமர்ப்­பித்த பின்பே அனு­மதி வழங்­கப்­படும் எனவும் நிர்­வாகம் சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்­ளது. இதன் பிர­திகள் அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் அக்­க­ரைப்­பற்று கிளை மற்றும் அக்­க­ரைப்­பற்று காதி­ரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் என்­ப­ன­வற்­றுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அக்­க­ரைப்­பற்று பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எஸ்.எம்.சபீஸ் ‘விடி­வெ­ள்­ளிக்குத்’ தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கை­யில்,

பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் எந்­தவொரு விட­யத்­துக்கும் தைரி­ய­மாக முடிவு எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. நிர்­வா­கிகள் கடு­மை­யான தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் தங்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏற்­படும் என பயப்­ப­டு­கி­றார்கள். இந்­நி­லையில் மாற்றம் பெற­வேண்டும். சில சந்­தர்ப்­பங்களில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் கார­ண­மாக அர­சியல் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.

நிக்காஹ் விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்ட இளை­ஞரை தனிப்­பட்ட ரீதியில் எனக்­குத்­தெ­ரியும். நான் அவரை சந்­தித்­தி­ருக்­கிறேன். படித்த குடும்பம் வச­தி­யான குடும்­பத்தைச் சேர்ந்­தவர். பள்­ளி­வாசல் எடுத்த தீர்­மா­னத்­திற்கு நான் பய­மின்றி கையொப்பம் இட்­டி­ருக்­கிறேன். சமூகம் சார்ந்த விட­யங்­களில் நாம் தனிப்­பட்ட ரீதியில் அன்றி பொது­வாக சமூக நலனைக் கருத்திற் கொண்டே தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ள­வேண்டும்.பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் இறை­வ­னுக்கே அஞ்ச வேண்டும்.

நிக்காஹ் விண்­ணப்பம் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தனை அடுத்து முகநூல் பக்­கங்­களில் எனக்கு சவால் விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனக்­கெ­தி­ராக மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சமூக நலன் சார்ந்தே தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. சவால்­களை எதிர்­கொள்ள நான் தயா­ரா­கவே இருக்­கி­றேன் என்றார்.

உலமா சபை அக்­க­ரைப்­பற்று
கிளைத் தலைவர்
சில வாரங்­க­ளுக்கு முன்பு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் அக்­க­ரைப்­பற்று கிளை போதைப்­பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்­பு­ணர்வு கூட்டம் ஒன்­றினை நடத்­தி­யது. பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் இக்­கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­தது என உலமா சபையின் அக்­க­ரைப்­பற்று கிளை பதில் தலைவர் எம்.எம்.கலா­முல்லா தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று பெரிய ஜும்ஆ பள்ளி வாசல் எடுத்­துள்ள தீர்­மானம் இறுக்­க­மா­ன­தாகும். இத்­தீர்­மா­னத்­துடன் நாம் சம்­பந்­தப்­ப­ட­வில்லை. பள்­ளி­வாசல் நிர்­வாகம் மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் பிர­தி­யொன்று எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அக்கரைப்பற்று பிரதேச
செயலாளர்
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்ஸார் இது தொடர்பில் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பள்ளிவாசல் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரதியொன்று எமக்குக் கிடைக்கப்பெற்றதையடுத்தே இவ்விடத்தை அறிந்து கொண்டோம்.

இது தொடர்பில் எத்தரப்பினரும் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.