உணவு பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்த பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள்

0 348

(எம்.வை.எம்.சியாம்)
அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­படும் உணவு பாது­காப்பு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை பள்ளி நிர்­வா­கங்கள் செய்­ய­ வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

உணவுப் பற்­றாக்­கு­றையை போக்­கு­வ­தற்­கா­கவும் நாட்டில் ஏற்­பட்­டுள்ள ஊட்­டச்­சத்து குறை­பாடு கார­ணங்­க­ளுக்­கா­கவும் உணவு வங்கி மற்றும் உணவுப் பரி­மாற்றச் சங்­கங்­களை உரு­வாக்­கு­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்தின் உணவுப் பாது­காப்புப் பிரிவு பணிப்­புரை விடுத்­துள்­ளது.

புத்­த­சா­சன மத மற்றும் கலாச்­சார அலு­வல்கள் அமைச்சின் ஊடாக ஜனா­தி­பதி செய­லகம் அனைத்து வழி­பாட்டுத் தலங்­க­ளையும் உணவு வங்கி உணவுப் பரி­மாற்றச் சங்­கங்­களை பயன்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அதன்­படி மேல­திக உணவு உள்­ள­வர்­களில் இருந்து உண­வுத்­தேவை உள்ள குடும்­பங்­க­ளுக்கும் சரி­யான உணவு இல்­லாமல் அவ­திப்­படும் குடும்­பங்­க­ளுக்கும் உணவை வழங்க விரும்­புவோர் வழி­பாட்டு தலங்கள் மூலம் அத்­த­கைய உணவை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது

இது தொடர்­பாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்சார் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் வரும் பகு­தியில் உள்ள ஜமாஅத் உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து அதி­கப்­ப­டி­யான உண­வு­களை சேக­ரித்து தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு விநி­யோகம் செய்­வ­தற்­கான வேலைத் திட்­டத்தை அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் ஏற்­பாடு செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

ஒவ்­வொரு பகு­தி­யிலும் உள்ள மத நிறு­வ­னங்­களின் தலைமை பொறுப்­பா­ளர்கள் (நம்­பிக்­கை­யா­ளர்கள் நிறு­வன நிர்­வா­கிகள்) நிகழ்ச்சி திட்­டத்­திற்கு தலைமை தாங்க வேண்டும். உயர்­தர பரீட்சை முடித்­த­வர்­க­ளுக்கு மற்றும் அஹ­தியா பாட­சாலை மாண­வர்கள் உள்­ள­டக்­கிய வகையில் சங்­கங்­களை உரு­வாக்­குதல், உணவு பரி­மாற்ற சங்­கங்­களை நடத்த ஒரு முகா­மை­யாளரை நிய­மித்தல், நிர்­வாக நிபு­ணரின் உத­வி­க­ளுக்­கான செயல்­பாட்டு முறைகள் தொடர்பில் தரவு சேக­ரித்து வைத்­தி­ருத்தல், உணவைப் பெறுதல் மற்றும் உணவு சேமிப்பு மற்றும் கணக்­கியல் அமைப்­பு­களைத் தயா­ரித்தல் உள்­ளிட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும். மேலும் வெளிப்­ப­டைத்­தன்­மையை உறு­தி­செய்தல், கணக்­காய்வு மற்றும் உள்­ளக கட்­டுப்­பாட்டு அமைப்பைத் தயா­ரித்தல், பள்­ளியில் ஒரு சிறிய தனி அறையை ஒதுக்­குதல், செயல்­பாட்டு அமைப்பு குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த அப்­ப­கு­தியில் வசிப்­ப­வர்­க­ளுடன் ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்தல் என்­ப­வற்­றையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் முன்­னெ­டுக்க வேண்டும்.

அப்­ப­கு­தியில் உள்ள நன்­கொ­டை­யா­ளர்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், வணிக சமூகம், நலன் விரும்­பி­களுக்கு அழைப்பு விடுத்தல், கடு­மை­யான உணவுப் பாது­காப்­பற்ற தேவை­யுள்ள குடும்­பங்கள் மற்றும் கடு­மை­யான ஊட்­டச்­சத்து குறை­பாடு உள்ள குழந்­தை­களைக் கண்­ட­றிந்து அவர்­களை வழக்­க­மான பய­னா­ளி­க­ளாகப் பதிவு செய்து அவர்­க­ளுக்கு வழங்­குதல் என்­ப­வற்றை ஒழுங்கு செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
உணவு சேமிப்பு கூடைகள், மேசைகள், காகி­தங்கள், கொள்­வ­னவு பைகள் போன்ற அடிப்­படை பொருட்­களை வழங்­குதல், ஒவ்­வொரு கிராம மட்­டத்­திலும் திட்­டம் தொடர்­பாக வழக்­க­மான பேஸ்புக் விளம்­பர பிர­சா­ரங்­களை உரு­வாக்­குதல் மற்றும் சங்­கங்கள் ஆரம்­பித்தல், வரு­டாந்த செயல்­திறன் அறிக்­கை­களைத் தயா­ரித்து நன்­கொ­டை­யா­ளர்கள் நலன் விரும்­பிகள் மற்றும் பய­னா­ளி­க­ளுடன் பகிர்ந்து கொள்­ளுதல் என்பவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தை மேற்பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள தேவையான குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்த பள்ளிவாசல், தக்கியாக்கள் மற்றும் சாவியா ஆகியவற்றின் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியன இவற்றுள் உள்ளடங்குகின்றன என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.