இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா

வயது கட்டுப்பாடுகளை நீக்கியது சவூதி ஹஜ் அமைச்சு

0 466

(ஏ.ஆர்.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக இவ்­வ­ருடம் இலங்­கைக்கு சவூதி ஹஜ் அமைச்­சினால் 3500 கோட்டா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு வய­துக்­கட்­டுப்­பாடும் நீக்­கப்­பட்­டுள்­ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

இவ்­வ­ருட ஹஜ் புனித யாத்­திரை ஏற்­பா­டு­களை சுமு­க­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்ள மக்கள் இப்­போ­தி­லி­ருந்தே தயா­ரா­கு­மாறும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அரச ஹஜ் குழுவின் தலைவர் இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் தொடர்பில் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்; இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு வய­துக்­கட்­டுப்­பாட்­டினை சவூதி அரே­பியா ஹஜ் அமைச்சு நீக்­கி­யுள்­ளது. கடந்த வருடம் 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கே ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அத்­தோடு ஹஜ் முக­வர்கள் பெற்­றுக்­கொள்ளும் முஅல்லிம் சேவை­யிலும் மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. சர்­வ­தேச நாடுகள் முஅல்லிம் சேவை பெற்றுக் கொள்­வது பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் பிராந்­திய அடிப்­ப­டை­யிலே ஹஜ் முக­வர்கள் முஅல்லிம் சேவையைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மாக இருந்­தது. இந்த பிராந்­திய முறைமை நீக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரைக்­காக கடந்த காலங்­களில் ஹஜ் பதி­வுக்­கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்­டுள்ள சுமார் 4000 விண்­ணப்­ப­தா­ரிகள் பட்­டி­யலில் இருக்­கி­றார்கள். திணைக்­களம் ஏற்­க­னவே பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்கும்.

அத்­தோடு கடந்த வருடம் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொண்ட ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு இம்­மு­றையும் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான முன்­னு­ரிமை வழங்­கப்­படும். கடந்த வருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொண்ட ஹஜ் முகவர் நிலையங்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்தினை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.