மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியை அழ­கு­ப­டுத்தும் வேலைத்­திட்டம்

0 292

எச்.எம்.எம்.பர்ஸான்

கோற­ளைப்­பற்று மேற்கு ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் பரா­ம­ரிப்பின் கீழுள்ள மஜ்மா நகர் கொவிட் மைய­வா­டியை அழ­கு­ப­டுத்தும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக பிர­தேச சபை தவி­சாளர் ஏ.எம்.நெளபர் தெரி­வித்தார்.

பத்து ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அனைத்து இன மக்­களின் 3634 உடல்கள் இங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள மைய­வா­டியை சிர­ம­தானம் செய்யும் முதற்­கட்ட வேலைகள் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

 

சிரமதானத்திற்கு முன்னர்…

அதன்­படி, கல்­குடா டைவர்ஸ் அமைப்­பினர் 300 கப்­ரு­க­ளையும், கல்­குடா யங் ஸ்டார் விளை­யாட்டுக் கழகம் 150 கப்­ரு­க­ளையும், மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்தி சங்­கத்­தினர், கல்­குடா தொண்டர் அணியின் ஏற்­பாட்டில் 275 கப்­ரு­களும் சிர­ம­தானம் செய்­யப்­பட்­டன.
அதன் தொடரில், அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்ள பேரு­வளை, சீனக்­கோட்டை பகு­தியை சேர்ந்த நபர் ஒரு­வரின் குடும்­பத்­தினர் முன்­வந்து மைய­வாடி முழு­வ­தையும் சீராக சிர­ம­தானம் செய்வதற்­க­ான செல­­வு­களைப் பொறுப்­பேற்றுக் கொண்­டனர்.
அந்­த­வ­கையில் 25 வேலை­யாட்­க­ளுக்கு நாளாந்த கொடுப்­ப­ன­வுகள் வழங்கி இச் சிர­ம­தா­னத்தை அக் குடும்­பத்­தினர் மேற்­கொண்­டனர்.

25 பேர் கொண்ட குழு­வினர் மேற்­கொண்ட சிர­ம­தான வேலைத்­திட்டம் ஒன்­பது நாட்­களின் பின்னர் செவ்­வாய்க்­கி­ழமை 2023.01.03 ஆம் திகதி நிறைவு பெற்­றுள்­ளது என தவி­சாளர் மேலும் தெரி­வித்தார்.

காடுகள், வயல் நிலங்­களை அண்­டிய பகு­தி­யாக மைய­வாடி காணப்­ப­டு­வதால் அங்கு காட்டு யானை­களின் தொல்லை அதி­க­ரித்து வரு­கின்­றது. அதனால் மண்­ண­றை­க­ளுக்கு பாது­காப்பு இல்­லாத ஒரு சூழல் காணப்­பட்­டது.

சிரமதானத்திற்கு முன்னர்…

 

அதனைக் கருத்­திற்­கொண்டு தற்­போது மையவா­டியை சுற்றி யானை வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. மிக­ வி­ரைவில் மைய­வாடியை சுற்றி சுற்று மதில் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.
மைய­வா­டியை அழ­கு­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தில் அங்கு நிழல் தரும் மரங்கள் நடப்­பட்­டுள்­ளன. தொடர்ந்தும் பல மரங்­களை நட்டு அழ­கு­ப­டுத்த தீர்­மா­னித்­துள்ளோம்.
மஜ்மா நகர் மைய­வாடி முழு­வதும் அழ­கான முறையில் சிர­ம­தானம் செய்­யப்­பட்டு நிறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது அங்கு சிர­ம­தான நட­வ­டிக்­கைகள் செய்ய வேண்­டிய தேவைப்­பா­டுகள் இல்லை.

எனவே எவரும் சிர­ம­தா­னத்­துக்­காக வெளிப் பிர­தே­சங்­களில் இருந்தும் உள்­ளூர்­களில் இருந்தும் வரு­வதையோ பணம் வழங்­கு­வ­தை­யோ தவிர்த்துக் கொள்­ளு­மாறு வேண்டிக் கொள்­கின்றோம்.

மண்­ண­றை­களை தரி­சித்து துஆக்­களை செய்­வ­தற்­காக வேண்டி மாத்­திரம் வழ­மை­போன்று அங்கு குடும்­பத்­தினர் சமு­க­ம­ளிக்க முடியும்.

அத்­துடன், சிர­ம­தான பணிக்­காக யாரும் யாருக்கும் ஏதேனும் கொடுப்­ப­ன­வுகள், நிதி­யு­த­விகள் செய்ய வேண்­டிய அவ­சியம் எது­வு­மில்லை என்­ப­தையும் அறியத் தரு­கின்றேன் என்று ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் தவி­சாளர் ஏ.எம்.நெளபர் மேலும் தெரி­வித்தார்.
மஜ்மா நகர் மையா­வா­டியை சிர­ம­தானம் செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கிய உள்ளூர், வெளியூர் உற­வு­க­ளுக்கும், பாரிய நிலப்பரப்பை சிரமதானம் செய்ய வேலையாட்களுக்கு நிதியுதவியை செய்த பேருவளை குடும்பத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.