புதிய இடத்தில் தம்புள்ளை ஹைரியா பள்ளி

0 415

ஏ.ஆர்.ஏ.பரீல்

2021 ஆம் ஆண்டு முதல் இன­வா­தி­களால் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டு வந்த பல தசாப்த வர­லாறு கொண்ட தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் – பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் ஏகோ­பித்த தீர்­மா­னத்தின் பின்பு கடந்த வாரம் அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்றிக் கொள்­ளப்­பட்­டது.

பழைய பள்ளிவாசல் அகற்றப்படும் காட்சிகள்

புதி­யவோர் இடத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் காணி­யொன்று ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­த­னை­ய­டுத்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை முஸ்­லிம்­களின் ஒத்­து­ழைப்­புடன் தம்­புள்­ளையில் புதிய பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணித்துள்­ளது.
முஸ்லிம் வர்த்­தக சமூகம் செறி­வா­க­வுள்ள தம்­புள்ளை சந்­தைக்கு அருகில் நக­ர­அ­பி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் வழங்­கப்­பட்ட 20 பர்ச்சஸ் காணியில் 2900 சதுர அடி பரப்பில் புதிய பள்­ளி­வாசல் நிறு­வப்­பட்டு கடந்த 23 ஆம் திகதி முதல் ஜும்ஆ பிர­சங்­கத்தை பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஜவுபர் மெளலவி நிகழ்த்­தினார்.

தம்­புள்ளை புனித பூமி பெளத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மாகும், இப்­பு­னித பூமி எல்லைக்குள் எந்­தவொரு மாற்­று­மத வணக்கஸ்தலங்­களும் இருக்­கக்­கூ­டாது. இங்கு அமைந்தி ருப்­பது பள்­ளி­வாசல் அல்ல.வெறும் தகரக் கொட்டில் அதை முஸ்­லிம்கள் அகற்­றிக்­கொள்ள வேண்டும் என கடந்த காலங்­களில் சவால் விட்ட ரங்­கிரி ரஜ­ம­கா­வி­கா­ரையின் முன்னாள் அதி­பதி இனா­ம­லுவே சுமங்­க­ல­தேரர் பள்­ளி­வா­சலின் திறப்பு விழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்­டி­ருந்­தமை கவனிக்கத்தக்க அம்­ச­மா­க­வி­ருந்­தது.
ரங்­கிரி ரஜ­ம­கா­வி­கா­ரையின் தற்­போ­தைய அதி­பதி அம்­ப­கஸ்­வெவ ராஹுல தேரர் சுக­யீனம் கார­ண­மாக திறப்பு விழாவில் கலந்து கொள்­ள­வில்லை.

ஏற்­க­னவே இயங்கி வந்த ஹைரியா பள்­ளி­வாசல் அமை­வி­டத்­தி­லி­ருந்து சுமார் 500 மீட்­ட­ருக்கு அப்பால் புதிய பள்­ளி­வாசல் அமைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ரங்­கிரி ரஜ­ம­கா­வி­கா­ரையின்
முன்னாள் அதி­பதி இனா­ம­லுவே சுமங்­கள தேரர்
கடந்த காலங்­களில் முஸ்­லிம்கள் என்னை இன­வா­தி­யாக,மத­வா­தி­யா­கவே நோக்­கினார்கள். நான் ஓர் இன­வா­தியோ, மத­வா­தியோ அல்ல. தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக புதிய இடத்தில் பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு வாய்ப்­புக்­கி­டைத்­துள்­ளது. இது தொடர்பில் நான் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கிறேன் என இனா­ம­லுவே சுமங்­கல தேரர் பள்­ளி­வாசல் திறப்பு நிகழ்­வின்­போது குறிப்­பிட்டார்.

 

தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில், 1978 ஆம் ஆண்டு தம்­புள்ளை புனித பூமித் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. என்­றாலும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் அத்­திட்­டத்­துக்கு இடை­யூ­றாக சட்ட விரோ­த­மான இடத்தில் அமைந்­தி­ருந்­ததால் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. அத­னாலே நாம் பள்­ளி­வா­சலை அப்­பு­றப்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு வலி­யு­றுத்­தி­வந்தோம். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு புதிய காணி கிடைத்து புதிய பள்­ளி­வாசல் எழுந்து நிற்­கி­றது.
பள்­ளி­வாசல் நிர்­வாகம் தொடர்பில் எதிர்­கா­லத்தில் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் அவற்றைத் தீர்த்துத் தரு­வதில் நான் என்றும் உத­வி­யாக இருப்பேன். இன்று பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தந்­தி­ருக்­கி­றார்கள். முன்பு தகரக் கொட்­டிலில் இவர்கள் எவ்­வாறு தங்­க­ளது வணக்க வழி­பா­டு­களை நடாத்­தி­னார்கள் என்று வியப்­ப­டை­கிறேன் என்றார்.

இனா­ம­லுவே சுமங்­கள தேரர் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு பெருந்­தொகைப் பணத்­தையும் அன்­ப­ளிப்­பாக வழங்­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வாசல் தலைவர்
எம்.ஐ.எம்.கியாஸ்
பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் புதிய பள்­ளி­வாசல் நிர்­மாணம் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில்; தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்குக் கடந்த காலங்­களில் தொட­ராக சவால்கள் விடுக்­கப்­பட்டு வந்­தன.எமக்கு பொருத்­த­மான இடத்தில் காணி வழங்­கினால் நாம் பள்­ளி­வா­சலை அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொள்ள தயார் என்று தெரி­வித்து வந்தோம். அல்­லாஹ்வின் ஏற்­பாடு எமக்கு பொருத்­த­மான இடத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை காணி வழங்­கி­யது.

முஸ்­லிம்கள் நாம் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து நல்­லு­ற­வு­டனே வாழ­வி­ரும்­பு­கிறோம். தம்­புள்ளை புனித பூமி அபி­வி­ருத்­திக்கு எமது பள்­ளி­வாசல் தடை­யாக இருப்­பதை நாம் விரும்­ப­வில்லை. முஸ்­லிம்கள் ஒரு­போதும் அபி­வி­ருத்­திக்கும் இன நல்­லு­ற­வுக்கும் தடை­யாக இருக்க மாட்­டார்கள். அதன் அடிப்­ப­டையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதிய இடத்தில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­தது.

நாங்கள் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி இவ்­வி­வ­கா­ரத்­தைத்­தீர்த்­துக்­கொண்டோம். 80 வருட கால வர­லாறு கொண்ட எமது பள்­ளி­வா­ச­லுக்குப் புதிய வடிவம் கிடைத்­துள்­ளது இவ்­வி­வ­கா­ரத்தில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­னுக்­குடன் மேற்­கொண்ட வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம் தீன் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் ஆகி­யோ­ருக்கு பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தனது நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றது.

ரங்­கிரி ரஜ­ம­கா­வி­கா­ரையின் முன்னாள் அதி­பதி இனா­ம­லுவே சுமங்­கல தேரர் தற்­போ­தைய அதி­பதி அம்­ப­கஸ்­வெவ ராஹுல தேரர் ஆகி­யோரும் நன்­றிக்­கு­ரி­ய­வர்கள் என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழுகை இடம்­பெ­ற­வி­ருந்த சந்­தர்ப்­பத்தில் இன­வா­தி­களால் தாக்­குதலுக்கு உள்­ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்று ஜும்ஆ தொழுகையும் நடத்தப்படவில்லை.

சர்­வ­தேச ரீதியில் பேசு­பொ­ரு­ளா­கிய தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­காரம் கடந்த ஒரு­த­சாப்த கால­மாக இழு­ப­றியில் இருந்து வந்து கடந்த வாரம் தீர்­பினை எட்­டி­யுள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­வாக சபை சூட்­சு­ம­மாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் வெற்­றி­ய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்­வதில் அன்று மும்­மு­ர­மாக செயற்­பட்ட இன­ம­லுவே சுமங்­கல தேரர் புதிய பள்­ளி­வா­சலின் நிர்­மா­ணத்­துக்கு நிதி­யு­தவி அளித்­துள்­ள­மையும் திறப்புவிழாவில் கலந்து கொண்டமையும் அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.