முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நயீமுதீன் நியமனம்

0 362

பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் மேல­திகச் செய­லா­ள­ராக பணி­யாற்­றிய எம்.எம். நயீமுதீன், முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

2023 ஜன­வரி 01, முதல் அமு­லுக்கு வரும் வகையில் 08 அமைச்­ச­ரவை அமைச்­சுக்­க­ளுக்கு புதிய செய­லா­ளர்­க­ளுக்­கான நிய­மனம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்கவினால் நேற்­று­முன்­தினம் வழங்­கி­வைக்­கப்­பட்­டது. இதன்­போதே எம்.எம். நயீமுதீன், முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அத்­தோடு, போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் புதிய செய­லா­ள­ராக, எம்.எம்.பி.கே. மாயா­துன்னே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன், எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபு­ஹின்ன, பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
இதே­வேளை, யாழ்.மாவட்டச் செய­லா­ள­ராக பணி­யாற்­றிய கே. மகேசன் விளை­யாட்டு மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் செய­லா­ள­ரா­கவும், எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவ­கா­ரங்கள் மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சின் செய­லா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் மேல­திகச் செய­லா­ள­ராக பணி­யாற்­றிய எம்.எம். நைமுதீன், முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கவும், ஆட்­ப­திவுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாய­க­மாகப் பணி­யாற்­றிய பி.பி. குண­தி­லக்க பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட மேல­திகச் செய­லா­ள­ராகப் பணி­யாற்­றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்­த­பத்து வணிக, வர்த்­தகம் மற்றும் உணவுப் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராவும் விவ­சாய அமைச்சின் மேல­திகச் செய­லா­ள­ராகப் பணி­யாற்­றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சம­ர­தி­வா­கர, சுற்­றுலா மற்றும் காணி அமைச்சின் செய­லா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மேலும் நீதி, சிறைச்­சாலை அலு­வல்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் வசந்தா பெரேரா, நீர்ப்­பா­சன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.