வெள்ளப்பெருக்கு: அக்குறணையின் தொடர் சாபம்..!

0 544

எஸ்.என்.எம்.சுஹைல்

விருந்­தா­ளிபோல் வருடா வருடம் ஆண்­டி­று­தியில் அக்­கு­றணை நக­ருக்கு தவ­றாமல் வந்து செல்­கி­றது வெள்ளநீர். 1999 ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் அனர்த்தம் இடம்­பெ­று­கின்­ற­மைக்கு பல்­வேறு கார­ணங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.

“அக்­கு­றணை நகரம் 28 தட­வைகள் வெள்ள நீரில் மூழ்­கி­யுள்­ளது” என அண்­மையில் சபையில் உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆக, தற்­போது 29 ஆவது தட­வை­யா­கவும் வெள்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த 25 ஆம் திகதி அக்­கு­றணை பிர­தே­சத்தில் 156 மில்லி மீற்றர் மழை பதி­வா­ன­தாக அக்­கு­றணை பிர­தேச சபை கால­நிலை அவ­தா­னிப்பு நிலையம் கூறு­கி­றது. இந்­நி­லையில் தொட­ராக காலை 7.30 மணி வரை பெய்த அடை மழை கார­ண­மாக வெள்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு அம்­பத்­தென்ன முதல் அக்­கு­றணை 7 ஆம் மைல் கல் அஸ்ஹர் பாட­சாலை சந்தி வரை கிட்­டத்­தட்ட 5 கிலோ­மீற்றர் தூரம் வரை நீரில் மூழ்­கி­யது. குறிப்­பாக அக்­கு­றணை நகரின் துனு­வில சந்­தியில் 8 அடி வரை வெள்ளம் புகுந்­தது.

பிர­தா­ன­மாக மனித செயற்­பா­டு­களின் விளை­வு­க­ளி­னாலே பெரும் அனர்த்­தத்தை எதிர்­நோக்க வேண்­டிய துர­திஷ்டம் நீடிக்­கி­றது. அதற்­கப்பால், திட்­ட­மி­டப்­ப­டாத நகர அபி­வி­ருத்தி திட்­டங்கள், சட்­டத்தை அமுல்­ப­டுத்த முடி­யாத நிலை மற்றும் அர­சியல் நிலைப்­பா­டு­க­ளுக்கு அப்பால் சென்று தீர்­வுக்­காக ஓர­ணியில் சேர்ந்து செயற்­பட முடி­யாத பிற்­போக்குத் தனத்­தையும் குறிப்­பிட முடியும்.

அக்­கு­றணை நகரில் வியா­பா­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் ஆண்­டு­தோறும் இலட்­சக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான இழப்­பு­களை சந்­திப்­ப­தாக அக்­கு­றணை வர்த்­தக சம்­மே­ளன தலைவர் ஏ.எஸ்.ரியாஸ் முஹம்­மது குறிப்­பிட்டார்.

“இம்­முறை, ஏற்­பட்ட இழப்­புகள் தொடர்­பாக கணக்­கி­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. இது­வரை அள­விட்­டதன் படி கிட்­டத்­தட்ட 150 கோடி ரூபா­வுக்கு மேல் நஷ்டம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த தொகை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களே இருக்­கின்­றது” என்றும் வரத்­தக சம்­மே­ளன தலைவர் கூறு­கின்றார்.

“அக்­கு­றணை நகரில் வர்த்­தக கட்­ட­டங்­களே வெள்ளப் பெருக்­கிற்கு பிர­தான கார­ண­மல்ல, ஏற்­க­னவே, பிங்கா ஓயா ஆற்றின் ஆழம் 20 தொடக்கம் 25 அடி வரை இருந்­தது. இன்று அது 7 அடி வரை தான் இருக்­கி­றது. அத்­தோடு, பொல்­கொல்ல அணைக்­கட்டின் வான் கத­வுகள் திறக்­கப்­ப­டா­மை­யினால் நீண்ட நேரம் வெள்ள நீர் வடிந்­தோ­ட­வில்லை. எனவே, கட்­ட­டங்­களை அகற்ற வேண்டும் என்­பதை மட்டும் கூறு­வதை நாம் ஏற்­க­மாட்டோம். அத்­தோடு, ஏற்­க­னவே, அடை­யாளம் காணப்­பட்ட 5 பாலங்­களை அகற்­றிய பின் வௌ;ளப் பெருக்கு குறை­வ­டை­யு­மாக இருந்தால் வர்த்­தக கட்­ட­டங்­களை அகற்­று­வ­தற்கு நாம் இணக்கம் தெரி­விப்போம். அத்­தோடு, இந்த கட்­ட­டங்­களை அகற்­று­வதன் ஊடாக வெள்ளப்­பெ­ருக்கு முற்­றாக நீங்கும் என்ற உத்­த­ர­வா­தத்தை அதி­கா­ரி­க­ளினால் தர முடி­யா­தி­ருக்­கி­றது. அவ்­வாறு உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் பட்­சத்தில் கட்­ட­டங்­களை அகற்­று­வ­தற்கு நாம் தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை. பிரச்­சி­னையை அவர்கள் சரி­யாக இனங்­கா­ணாது கட்­ட­டங்­களை அகற்­று­வதில் குறி­யாக இருப்­பதை நாம் கண்­டிக்­கிறோம்” என்றார் வரத்­தக சம்­மே­ளன தலைவர்.

இத­னி­டையே, சம்­பிக்க ரண­வக்க நகர அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருக்­கும்­போது மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வின்­படி அக்­கு­ற­ணையில் 124 சட்­ட­வி­ரோத பாலங்கள் இருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டது. அந்த பாலங்­களை அகற்­றும்­படி பணிக்­கப்­பட்­டது. அத்­தோடு, ஆற்றின் இரு­பக்­கத்­தையும் பெருப்­பிக்­கும்­படி யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. நீரப்­பா­சன திணைக்­களம், மகா­வலி அபி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள் ஒன்­றி­ணைந்து இதனை அமுல்­ப­டுத்த முயற்­சிக்­கும்­போது அங்­கி­ருந்து எமக்கு அழுத்­தங்கள் வந்­தது என நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் மத்­திய மாகாண பணிப்­பாளர் பண்­டார தெரி­வித்தார்.

அக்­கு­றணை பிர­தேச சபை வெள்ளம் ஏற்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்று பர­வ­லாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. எனினும் அக்­கு­ற­ணையில் வெள்ளம் ஏற்­ப­டு­வது இன்று நேற்று ஏற்­பட்ட பிரச்­சி­னை­யல்ல, இது முப்­பது வரு­டங்­க­ளாக தொடரும் அவலம் என்­கிறார் அக்­கு­றணை பிர­தேச சபை தவி­சாளர் இஸ்­திஹார் இமா­துதீன்.

“அக்­கு­றணை வெள்ளத்தை தடுப்­ப­தற்­காக நல்­லாட்­சி­யின்­போது, அமைச்­ச­ரவை செய­ல­ணி­யொன்றை நிய­மித்­தது. இதன்­படி, சில யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை ஊடா­கவே இந்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். பிர­தேச சபைக்கு ஒரே­யொரு தொழி­நுட்ப அதி­கா­ரியே இருக்­கின்றார். எனினும், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தொழி­நுட்ப பிரிவின் ஊடா­கவே வௌ;ளத் தடுப்பு திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். அக்­கு­றணை பகு­தியில் அமைக்­கப்­பட்­டுள்ள அநா­வ­சிய கட்­ட­டங்­களை அகற்­று­வதன் ஊடாக இதற்கு தீர்வை பெற முடியும். அத்­தோடு, அக்­கு­றணை நக­ருக்குள் செல்லும் ஆறு நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்­துக்குள் உள்­வாங்­கப்­ப­டா­மையால் ஆற்­றுக்கு இரு பாகங்­க­ளிலும் உள்ள இடங்கள் அர­சாங்­கத்­திடம் இல்லை. அவை தனி­யா­ரிடம் இருப்­ப­தனால் பல்­வேறு சிக்­கல்கள் இருக்­கின்­றன. எம்மால் மக்கள் காணி­களில் இருக்கும் கட்­ட­டங்­களை அகற்ற முடி­யாது. ஏற்­க­னவே இவை நீதி மன்றம் வரை சென்றும் பிர­தேச சபைக்கு பாத­க­மான தீர்ப்­பு­களே கிடைத்­தி­ருக்­கி­றது”.

இத­னி­டையே, “1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக சுலைமான் இருந்த குறித்த காலப்­ப­கு­தி­யி­லேயே வௌ;ளம் பெருக்­கெ­டுக்க ஆரம்­பித்­தது. அவர்­களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” என்றும் இஸ்­திஹார் சாடினார்.

எனினும் 1999 முதல் வெள்ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டு­கி­றது. அப்­போ­தி­ருந்த அக்­கு­றணை பிர­தேச தவி­சாளர் மர்ஹூம் சுலை­மானை குற்றம் சுமத்­து­வதை கண்­டிக்­கிறேன் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் கூறு­கின்றார்.

“அக்­கு­றணை பிர­தேச சபையின் அதி­காரம் 2001 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அதி­கா­ரத்­தி­லேயே இருந்­துள்­ளது. இதன்­போது, ஹலீம்தீன், சிம்சான் ஆகியோர் தவி­சா­ள­ராக இருந்­துள்­ளனர். அவர்­களும் பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்­களே. பின்னர் 2018 ஆம் ஆண்­டிற்கு பின்னர் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் பங்­க­ளிப்­போடு சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த இஸ்­திஹார் இமா­துதீன் தவி­சா­ள­ராக பதவி வகிக்­கின்றார். பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணக்க அர­சி­யலில் ஈடு­ப­டுவோர் இந்த வேலை­களை இல­கு­வாக செய்து காட்ட வேண்டும். வெறு­மனே குற்­றச்­சாட்­டுகள் சுமத்­து­வதால் மக்கள் பிரச்­சி­னைக்கு தீர்வு கிட்­டப்­போ­வ­தில்லை” என்றும் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­விக்­கிறார்.

மேலும், “நாம் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை என்று சாடி வரு­கின்­றனர். நாம் 2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் நானும் அப்­போ­தைய அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் இணைந்து அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தோம். இதன் விளை­வாக, விசேட செய­ல­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டது. வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை, மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் நீர்ப்­பா­சன திணைக்­கள உள்­ளிட்ட அர­சியல் நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் அக்­கு­றணை ஹஸ்னா பள்­ளி­வாசல், ஜம்­இய்­யதுல் உல­மா­வி­னரும் கலந்­து­கொண்டு பாரா­ளு­மன்­றத்­திலும் கண்­டி­யிலும் கூட்­டங்கள் நடத்தி இதற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தோம்.

இந்த செய­ல­ணியின் அறிக்­கைப்­படி, அக்­கு­றணை நகரை ஊட­றுத்துச் செல்லும் ஆற்றில் மண் அகழ்தல், ஸியா வைத்­தி­ய­சா­லைக்கு அருகே உள்ள பாலத்தை அகற்றி அப்­பா­லத்தை உயர்த்தி அமைத்தல், சட்­ட­வி­ரோத கட்­ட­டங்­களை அகற்­றுதல், இனங் காணப்­பட்ட பாலங்­களை தகர்த்தல், அக்­கு­றணை தொடக்கம் கட்­டு­கஸ்­தோட்டை வரை­யி­லான ஆற்றில் சேற்றை அகழ வேண்டும் என்றும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது. இதன் விளை­வாக, யூ.எஸ்.எயிட் இனால் மணல் அகழும் இயந்­தி­ர­மொன்று கிடைக்கப் பெற்­றது. இந்­ந­ட­வ­டிக்­கைகள் விலை­மனு கோரல் அடிப்­ப­டையில் இடம்­பெற வேண்டும் என கூறப்­பட்­டது. எனினும் அந்­ந­ட­வ­டிக்­கையில் தற்­போது ஊழல் இடம்­பெ­று­வதை நான் அறிவேன்.

மக்கள் பிரச்­சி­னையில் ஒரு­வரை ஒருவர் சாடிக் கொண்­டி­ருக்­காது நாம் அர­சாங்­கத்தில் இருக்­கின்­ற­போது அனைத்து தரப்­பி­ன­ரையும் இணைத்­துக்­கொண்டு தீர்வை நோக்கி நகர்ந்­ததைப் போன்று பேதங்­களை மறந்து இன்றும் செயற்­பட வேண்டும். அப்­போ­துதான், இந்த திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்து மக்கள் சந்­திக்கும் இடர்­களை நீக்க முடியும். அத்­தோடு, வியா­பா­ரி­க­ளுக்கு ஏற்­படும் தொடர் இழப்­புக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடியும்” என்றார்.

அக்­கு­றணை நக­ருக்குள் பெருக்­கெ­டுக்கும் வௌ;ளத்தை தடுப்­ப­தற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து தீர்­வொன்­றுக்கு வரு­வது அவ­சி­ய­மா­கி­றது. குறிப்­பாக அர­சியல் அதி­கார மட்­டத்தில் மணல் அகழ்தல், சேற்றுக் கழி­வு­களை வெளி­யெ­டுத்தல், பாலம் நிர்­மா­ணித்தல் போன்­ற­வற்றை மேற்­கொள்ள முடியும். என்றாலும், தனியார் காணிகளில் உள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பிரதேச வர்த்தகர்களும் பொது மக்களும் பெரும் ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாகவே இதற்கு தீர்வை பெறமுடியும். கட்டடங்கள் அகற்றும்போது ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். எனினும், இதனை அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பக, தொடராக ஏற்படும் நஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுடன், பிரதேச மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வைப் பெற வேண்டியுள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில் அக்குறணை நகரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்து பிரதேசத்தின் இயல்பு நிலை சீர்குலைகின்றது. மேலும், ஏ 9 வீதியின் போக்குவரத்தும் முற்றாக தடைப்படுவதனால் மறைமுகமாக பெருளாதார நஷ்டங்களும் ஏற்படுவதையும் நாம் கவனத்திற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.